சத்யாவுடன் சந்திப்பு: இறுதிப்பகுதி

7. தற்போது நடக்கும் பொருளாதாரப் பிரச்சினையினாலும் திடீரென்று கிடைத்த அறிவியல் முன்னேற்றத்தாலும் அமெரிக்க தேர்தல் முறை மாற்றியமைக்கப்படுகிறது. மறைந்த புகழ்பெற்ற தலைவரை ஜனாதிபதியாக்க முடிவெடுக்கிறார்கள். எவர் பொருத்தமானவர்? ஏன்?

வேண்டுமானால் அரசியல்வாதி மாதிரி கேட்ட கேள்விக்கு பதில் தெரியலைன்னா தெரிஞ்ச, தான் சொல்லணும்னு நினைச்ச பதிலை சொல்லீறவேண்டியதுதான். ;-))

அமெரிக்க வரலாறு அதிகமா தெரியாது அதுனால மொக்கையா ஏதாவது சொல்வதற்கு பதில் இந்த கேள்வியை சாய்ஸ்ல விட்டுடறேன்.

8. PiT போட்டியில் அடுத்த தலைப்பாக ஒரு வேட்பாளரை வைக்கலாம் என்று முடிவெடுக்கிறார்கள். பைடன், பேலின், மகயின், ஒபாமா – எவருக்கு ஃபோட்டோஜெனிக் முகம்?

முதல் சுற்றிலேயே ஒபாமாவும் மக்கெயினும் காலி.

படத்துக்கு ஏற்ற முகம் மட்டும் என்றால் ஒபாவும் சுமார் ரகம். இருந்தாலும் இருவருமே அரசியலில் அதிகமாக ஊறிப்போயோ என்னவோ ஒரு வித இறுக்கமான முகத்தை வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

பைடன் தன் மனம்போன போக்கில் பேசக்கூடுவதால் அவர் முகத்தில் நவரசங்களையும் காண முடிகிறது. அவர் நல்ல தேர்வாக இருப்பார்.

பேலின் பெண்ணுக்கே உரிய அழுகுடனும் நளினங்களுடனும்,அடிக்கடி கண்ண்டிக்கிறார். சந்தேகமே இல்லாமல் பேலினே நல்ல படங்களுக்கான மாடலாக இருப்பார்.

சத்யா

‘ஒபாமா ஸ்டாலின் மாதிரி; மெக்கயின் அசப்பில் கருணாநிதி சாயல்’

6. வேட்டி-சட்டை, குர்தா-பைஜாமா: ஒபாமா/மகயின் – எவருக்கு எது பொருத்தமாக இருக்கும்?

(c) Sathya - Tamil Obama in Dhoti

(c) Sathya - Tamil Obama in Dhoti

பெருந்தலைகள் தீவிரமான விவாதிக்கும் பதிவில் எதுக்கு என்னைக்கேள்வி கேட்டு இடுகை போடறீங்கன்னு புரியுது. இருந்தாலும் நானும் தீவிரமாத்தான் பதில் சொல்லப்போறேன். அவங்க ரெண்டு பேரையும் தேர்ந்தெடுக்க சொன்னா அடாவடியான மெக்கெயின் வேட்டிய மடிச்சுக்கிட்டு இறங்கவும், ஹார்வார்ட் ஒபாமா சேட்டு மாதிரி குர்தா பைஜாமாவும் தான் தேர்ந்தெடுப்பார்கள்.

Presidential makeoverஆ ரெண்டு பேரையும் இந்தியனா மாத்தணும்னு என்னை தேர்ந்தெடுக்க சொன்னதால அவங்க உடல்வாகு பின்னணி பாத்து முடிவு பண்ணுவோம். ஒபாமாவை மெக்கயினோட பாத்தா கருணாநிதியையும் ஸ்டாலினையும் பாக்கறா மாதிரி இருக்கு. அவ்வளவு Generation Gap ரெண்டு பேருக்கும்.

Obama Poster in Tamil Nadu Shtyle (c) Sathya

ஒபாமா தென்னக மக்களை போல கறுநிறத்தை கொண்டவர் அவருக்கு வெள்ளை வேட்டி சட்டைய போட்டா நல்லா இருக்கும். அவரும் (அரசியலுக்கு) சின்ன பையன் மாதிரி இருக்காறா அதனால ஒரு பெரிய ஆள் கெத்து குடுக்க அதுதான் சரிவரும். ஏற்கனவே ஒல்லியா இருக்கறவருக்கு குர்தா பைஜாமா போட்டா சைடுல ஒரு ஜோல்னா பைய தொங்கவிட்டு ‘ஆங் நீங்க சரியாத்தான் சொல்றீங்கன்னு மண்டை மண்டைய ஆட்டறமாதிரி’ கிண்டலா ஒரு விளம்பரம் பண்ணுவாங்க மெக்கெயின் ஆளுங்க. அதுனால ஒபாமாவுக்கு வேட்டி சட்டை.

US Poll Special by satya

மெக்கெயினு கொழுத்த பணக்காரர். நல்ல எங்கூரு மிலான்சந்த் சேட்டு மாதிரியே இருக்கார் பாக்கறதுக்கும். அவருக்கு வேட்டி சட்டை போட்டா போண்டா மணி மாதிரி இருக்கும். அதனால மக்கெயின்னுக்கு பைஜாமா குர்தா.

7. தற்போது நடக்கும் பொருளாதாரப் பிரச்சினையினாலும் திடீரென்று கிடைத்த அறிவியல் முன்னேற்றத்தாலும் அமெரிக்க தேர்தல் முறை மாற்றியமைக்கப்படுகிறது. மறைந்த புகழ்பெற்ற தலைவரை ஜனாதிபதியாக்க முடிவெடுக்கிறார்கள். எவர் பொருத்தமானவர்? ஏன்?

சத்யா

அடுத்த அமெரிக்க அதிபருக்கு நிச்சயம் ஆப்பு – சத்யா

5. ஒபாமா 98% ஜனநாயகக் கட்சியின் கொறடா/வழிகாட்டலின் படி செனேட்டில் வாக்களித்திருக்கிறார். ஜான் மகயின் 90% புஷ்ஷோடு ஒத்துப் போய் இருக்கிறார். இவர்களுக்கு ‘மாற்றம்’ தாரக மந்திரத்தையும் ‘மேவ்ரிக்’ பட்டத்தையும் வைத்துக் கொள்ள என்ன தகுதி உள்ளது? Bipartisan என்று முழங்கினாலும் செய்கையில் அதை நிரூபிக்காதவர்களின் அடுத்த நான்கு வருடங்கள் புஷ்ஷோடு ஒப்பிட்டால் எவ்வாறு வேறுபடும்?

நூறு சதவிகிதம் ஒத்துக்கொள்கிறேன். இருவருக்கும் ஒரு பெரும் வித்தியாசம் இருப்பதாக தோன்றவில்லை பார்க்க ‘என் ஓட்டு’ கேள்வியில்.

அரசியலில் வாய்ப்பந்தல் போடுபது எல்லாமே ஓட்டுக்களை வாங்குவதற்கு மட்டுனே. அரசாங்கம் எனும் மாபெரும் இயந்திரத்தை ஒட்டுமொத்தமாக யாராலும் மாற்றிவிட முடியாது. அடுத்த நான்கு வருடங்களில் இரண்டு வருடங்கள் இருக்கும் பிரச்சனைகளை சரிசெய்யவே போய்விடும். இதில் பெரும் பணிகள் காத்து இருக்கின்றன. சரியான திட்டங்கள் தேவை.

அடுத்த ஜனாதிபதி என்ன செய்தாலும் ‘அப்பவே சொன்னேன் பாத்தீங்களான்னு’ அழ அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

ஒபாமா வந்தால் இன்னும் கட்டுப்பாடுகள் கொண்டு வருவார். வெளிநாட்டுக்கு போகும் வேலைகளை தடை பண்ண ஏதாவது சட்டம் கொண்டு வந்தாலும் வருவார். கொஞ்சம் பெரிய நிறுவனங்களுக்கு தலைவலியாக இருப்பார் என்று தோன்றுகிறது.

அவர் பேசுவதையெல்லாம் செய்ய அரசியலும் லாபிக்களும் தடைசெய்யும். அதனால் ஒரளவு கட்டுப்பாடுகளும் போர் முழக்கங்கள் இல்லாமலும் இருக்கும. ஈராக்கிலிருந்து ஓடிவருதெல்லாம் வேலைக்காகாது. கெட்ட பேரும் தலைவலியும் தான் மிஞ்சும்.

மகெயின் வந்தாலும் ஒபாமாவுக்கும் இவருக்கும் வித்தியாசம் இருக்காது. ஈராக் நிலைமையும் ஆப்கானிஸ்தானும் சீராக வேகமான சரியான முடிவெடுப்பார் என்றே தோன்றுகிறது.பொருளாதாரத்தை வேகமாக நிமிர்த்துவார் என்றே நம்பிக்கை அளிக்கிறார். கொஞ்சமாவது லாபிக்களை ஒழிப்பார்.

இவருடைய ஈரான் கொள்கைகள் கிலியை ஏற்படுத்துகின்றன. அனேகமாக நான்காவது வருட இறுதியில் புஷ் போலவே ஏதாவது வேடிக்கை காட்டுவார். பார்ப்போம்.

6. வேட்டி-சட்டை, குர்தா-பைஜாமா: ஒபாமா/மகயின் – எவருக்கு எது பொருத்தமாக இருக்கும்?

சத்யா

முதன் முறையாக தமிழில் சாரா பேலின் நேர்காணல்: சத்யா

முதல் பகுதி

3. சாரா பேலினை தமிழில் மொழிபெயர்க்க உங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவரின் கேட்டி கௌரிக் பேட்டியையோ சார்லி கிப்ஸன் செவ்வியையோ தமிழாக்கிக் கொடுக்கவும்.

இவ்வளவு சுலபமான கேள்வியைக்கேட்டுட்டீங்க. சரி பரவாயில்லை. பேலின் பேட்டி கீழே

பேலினை பேட்டி எடுப்பவர்: இப்போதைய பொருளாதாரத்தை பத்தி என்ன நினைக்கிறீங்க?

சாரா பேலின்: அது வந்து .. ஆங்..மெக்கெயின் ஒரு அஞ்சாநெஞ்சர். இந்த மாதிரி மாபெரும் புரச்சிகர மனிதராலத்தான் இந்த தேசத்தை காப்த்தமுடியும் வேணும்னா ரோட்டோரமா உங்காந்து பீடி புடிக்கறவற ஏங்க காசு புழக்கம் இருக்கான்னு கேட்டா இல்லைன்னு தான் சொல்லுவார்.என்னனாஞ் சொல்றது? (காமராவைப்பாத்து ஒரு சின்ன கண்ண்டிப்பு)

பே.பே.எ.: இல்லை இன்னொரு முறை கேக்கறேன், பீடி புடிக்கறவற கேக்கலை உங்களைக் கேக்கறேன் பொருளாதாரத்தை எப்படி சரிபண்ணுவீங்க.

பேலின்: பெருளாதாரத்தை எப்படி சரிபண்றது அதுதானே உங்க கேள்வி. ஆதொள கீர்ந்தானரம்பத்திலே அலாஸ்காவுல இப்படித்தான் நான் சங்கீத நாமகீர்த்தனம் பண்ணி மக்களை உய்விக்கும்போது ரேடியோ ஸ்டேஷன் நஷடத்துல நடக்கறத கண்டு பிடிச்ச இலவசமா குடுக்கற காபி மெஷின்ல இனிமே காசு குடுத்துத்துத்தான் குடிக்கணும்னு ஒரு அருமையான புரட்சிகர திட்டத்தை முன்வைசேசன். சும்மா அதிருதில்ல.( காமராவைப்பாத்து மத்திமமா இன்னொரு கண்ண்டிப்பு)

பே.பே.எ.: சரி உங்களோட வெளிநாட்டு கொள்கைய சொல்லுங்க.

பேலின்: அது வந்து .. ஆங். வெளிநாட்டு கொள்கை என்ன அதுதானே உங்க கேள்வி. எங்க வீட்டூலேந்து எட்டிப்பாத்தா கனடா தெரியும்.இந்த பக்கம் எட்டி பாத்தா ரஷ்யா தெரியும். நிறைய அனுபவம் இருக்கு.

எங்க அஞ்சா நெஞ்சர் வியட்நாம் எல்லாம் போயிருக்கார். அவருக்கு நிறைய அனுபவம் இருக்கு.அரசியல் பண்றதுன்னா சும்மா இல்லை. ஒரு நாளைக்கு இருபது பேப்பர் படிக்கணும். நிறைய வெளிநாட்டு பேப்பரெல்லாம் படிக்கறேன். நிறைய வெளிநாடுகள் இருக்கு. நிறைய கொள்கைகள் இருக்கு அதனால நிறைய வெளிநாட்டு கொள்கை இருக்கு.

பே.பே.எ.: சரி ஆப்கானிஸதான பத்தி சொல்லுங்க.

பேலின்: அப்கானிஸதான் நிறைய ஆறுகள் இருக்கு, மலைகள் இருக்கு, மக்கள் சுபிட்சமா இருக்காங்க வெறென்ன.

பே.பே.எ.: குறிப்பா எந்த பகுதி இப்படி நல்லா இருக்குன்னு சொல்ல முடியுமா.

பேலின்: எந்தப்பகுதின்னு கேட்டா .. அது வந்து எல்லா நாட்லையும் ஆறுகள் மலைகள் எல்லாம் இருக்கு மக்கள் வசதியா வாழறாங்க அதுமாதிரிதான் இதுவும். அடுத்த முறை பேட்டி எடுக்கும் போது சரியாச்ச சொல்லீடறேன்.

பே.பே.எ.: கடைசியா ஒருகேள்வி நீங்க சொல்றதல்லாம் பாத்தா சுத்தமா தேறாத கேஸ்போல இருக்கீங்க.மக்களும் அப்படித்தான் பேசிக்கிறீங்க. நீங்க புதுசா என்னதான் பண்ணுவீங்க?

பேலின்: அது.. வந்து.. மெகயின் நல்லவர். வல்லவர்.அப்புறம் நான் வந்து நேரிடியா மக்கள் கிட்ட பேசிக்கறேன். (மனசுக்குள்ளே) அவங்க தான் பதிலுக்கு பதில் கேள்வி கேட்க மாட்டாங்க.

4. செனேட்டராக இருந்தபோதே தற்போதைய வீட்டுக்கடன் பிரச்சினையையும் அதன் மேலெழுந்த நிதிநிலை மதிப்பீடு நிலைகுலைவையும் கண்டுணர முடியாத ஒபாமாவா? இராக் மீது போர் தொடுத்தால் ஓரிரண்டு நாளில் அமெரிக்காவின் கடமை முடியும் என்று கணித்த மெகயினா? இருவரில் உங்கள் தேர்வு எவர்?

சத்யா

இந்த வார விருந்தினர்: சத்யா

1. கலைஞருக்கு போட்ட மாதிரி புஷ் குடும்பத்திற்கும் க்ளின்டன்களுக்கும் family chart போட முடியுமா? (இருவரையும் கோர்த்து விட்டுடாதீங்க 🙂

கலைஞருக்கே நிறைய ஆட்டோ வந்தது. கிளிண்டனுக்கு dotted line relationship போடணும். புஷ் கதை என்னதோ. இரண்டு பேரும் சேந்து வீட்டுக்கு ஆளுக்கு ரெண்டு ஹம்மர் அனுப்பவா.

வேண்டாம் சாமீ. நான் நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா. ஆனா Sr. Obama சுவாரசியமான ஆளா இருப்பார் போல.

Political Punch :: Barack Obama’s Branch-y Family Tree

2. ஒபாமாவும் மெகயினும் (ஹில்லரியும்தான்) சேர்ந்து ஏறக்குறைய முக்கால் பில்லியன் டாலர்களை இதுவரை தேர்தல் களத்தில் செலவழித்துள்ளார்கள். இது செஞ்சிலுவை சென்ற வருடம் மீட்புநடவடிக்கைகளில் செலவழித்ததை விட பன்மடங்கு அதிகம்.அமெரிக்காவை கடன் கடலில் இருந்து மீட்பிக்க எவர், எது தேவை?

ஒரு வேட்பாளர் மொத்தமாக எல்லா பணத்தையும் செஞ்சிலுவை சங்கத்துக்கு கொடுத்துவிட்டால் மக்கள் எல்லோரும் புளகாங்கிதப்பட்டு ஓட்டுப்போட்டுவிடுவார்களா?

மாட்டார்கள்.

பொதுமக்களுக்கு தேவை வேடிக்கை. அதைக்காட்ட பணத்தை வாரி இறைத்தே ஆகவேண்டும். இது அரசியல் கட்டாயம். எந்த நாடாக இருந்தாலும் இது மாற வாய்ப்பேயில்லை. அமரிக்காவை கடன் கடலிலிருந்து மீட்க அடிப்படை மாற்றம் தேவை. தனியொரு ஜனாதிபதியோ மத்திய வங்கியோ இதை சாத்தியப்படுத்தவிடமுடியாது

பொருளாதாரத்தின் மிக அடிப்படையான,

  • மக்களின் செலவுகளை கட்டுப்படுத்தவும், சேமிப்பை அதிகமாக்கவுமான பொருதாளார வழிமுறைகளும்
  • உற்பத்தியை பெருக்கவும், இன்னும் குறைந்தவிலையில் உள்நாட்டில் தயாரிப்பதற்கான கட்டுப்பாடுகளும் தேவை.

இவையிரண்டு ஒன்றோடு ஒன்று சேர்ந்து கடனை குறைக்க உதவும்.சொல்வதற்கு வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம் செய்ய வேண்டியது மிக மிக அதிகம்.

  1. போரினால் ஏற்பட்ட இழ்ப்புகள்
  2. திரும்பி வரும் படை வீரர்களுக்கான சேவைகள்
  3. மருத்துவ காப்பீட்டு திட்டங்கள்
  4. முதியோர் காப்பீட்டு திட்டங்கள்
  5. ஒய்வு கால மற்றும் சேம நிதிகளின் ஓட்டைகள்

என்று செலவுகளுக்கான பட்டியல் மிக நீளமாக இருக்கிறது.

எனக்கு தோன்றும் ஒரே பதில் அடுத்த பத்தாண்டுகளுக்கு அமரிக்கா வாலைச்சுருட்டிக்கொண்டு தன் வேலையை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தால் மட்டுமே தேறும். இல்லையென்றால் ஆண்டவனே வந்தாலும்…

3. சாரா பேலினை தமிழில் மொழிபெயர்க்க உங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவரின் கேட்டி கௌரிக் பேட்டியையோ சார்லி கிப்ஸன் செவ்வியையோ தமிழாக்கிக் கொடுக்கவும்.

சத்யா