ஒபாமா-பைடன் வெற்றிக்கூட்டணி

ஒபாமா நேற்று வரை இருந்த கடைசி சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவே கருதுகிறேன். இதுவரை ஒபாமாவின் பாதை சரியான பாதையாகவே இருக்கிறது. நடு நடுவில் சில குழப்பங்களை விதைத்தாலும்(offshore drilling) சரியான திசையிலேயே செல்கிறார். மெக்கெயின் இதுபோன்ற சங்கதிகளில் தீர்மானமான மக்கள் விரும்பும் பெரும்பான்மை முடிவைச் சொல்லி அசத்திவருகிறார். ஒபாமா டயரில் காற்றடியுங்கள் என்கிறார் சொதப்பலாக.

1. என்ன தான் லிபரல் சிந்தனையாளர்களாக காட்டிக்கொண்டாலும் ஒரு கறுப்பரை தேர்ந்தெடுப்பதா என்னும் குழப்பத்தில் இருந்த பெரும்பான்மை ஓட்டுக்களுக்களை பெற ஒரு தெளிவான முடிவை எடுக்க இந்த கூட்டணி உதவும்

2. வெள்ளையர் – 80 % கறுப்பர் -12% உள்ள மக்கள்தொகை இதுவரை ஒரு வெள்ளை ஆணையே தேர்ந்தெடுத்து வந்திருக்கிறது. மொத்தமாக கறுப்பர்+பெண் கூட்டணி கட்டாயம் பழைமைவாதிகளை மெக்கெயின் பக்கம் மொத்தமாக திருப்பி இருக்கும்.

3. ஒபாமா சின்னப்பையன் அவனுக்கு அனுபவமில்லை. வெளிநாட்டுக்கொள்கை கிலோ என்ன விலைன்னு கேக்கற ஆளுன்னு மெக்கெயின் சொல்லி வருவதற்கு சரியான பதிலடி இதுவாகத்தான் இருக்கமுடியும். பைடன் வெளிநாட்டுக்கொள்கைல பழம்தின்னு கொட்டை போட்ட ஆள்.

4. அடுத்து வரும் ஆட்சிக்கு பெரும் தலைவலியாக இருக்கப்போகும் சமன்செய்யப்படவேண்டிய வெளிநாட்டு உறவுகளுக்கு(எண்ணெய் டாலர், ஈராக், ரஷ்யா) ஒபாமாவுக்கு சரியான முடிவை எடுக்க அதை கொண்டு சொல்ல இவர் பெரிதும் உதவுவார் என்று எதிர்பார்க்கலாம்.

வாழ்த்துகள் ஒபாமா-பைடன்.