கருத்துப்படம் – (அமெரிக்க) குடியரசுத் தலைவர்களுக்கான பாலபாடம்

(c) Ted Rall

நன்றி: Ted Rall, comics, editorial cartoons, email comics, political cartoons

பில் கிளின்டன், ஹிலாரியின் வருமானம் 8 ஆண்டில் 109 மில்லியன் டாலர்: எழுதியும் பேசியும் சம்பாதித்த பணம்

அமெரிக்கா வின் முன்னாள் அதிபர் பில் கிளின்டன், அவரது மனைவி ஹிலாரி கிளின்டன் ஆகியோர் கடந்த 8 ஆண்டுகளில் 109 மில்லியன் டாலர் பணம் சம்பாதித்துள்ளனர்.

அவர்கள் வெளியிட்ட வருமான வரிக் கணக்கில் இதுபற்றி விளக்கப்பட்டுள்ளது. 33.8 மில்லியன் டாலரை வருமான வரியாகவும், 10.2 மில்லியன் டாலரை நன்கொடையாகவும் அவர்கள் வழங்கியுள்ளனர். (சுமார் 40 ரூபாய்க்கு சமமானது ஒரு டாலர்).

அமெரிக்காவில் அதிகமாக வரி செலுத்துவோர் பட்டியிலில் அவர்களும் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் பெரும்பாலும் புத்தகம் எழுதி இந்த பணத்தை சம்பாதித்துள்ளனர். பில் கிளின்டன் அடிக்கடி பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றியதன் மூலம் அதிகமாக பணம் சம்பாதித்துள்ளார். ஒவ்வொரு பொதுக்கூட்டத்துக்கும் 2 லட்சத்து 50,000 டாலர் வாங்குவாராம் கிளின்டன்.

2000-ம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்தார் கிளின்டன். அப்போது அவரிடம் 3,50,000 டாலர் மட்டுமே இருந்தது. 2001-ம் ஆண்டில் வருமானம் 16 மில்லியன் டாலராக அதிகரித்தது. புத்தகம் எழுதியே கணவனும் மனைவியும் ரூ.92 மில்லியன் டாலர் ஈட்டியதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது.

கடந்த 30 ஆண்டுகளில் தங்களது வருமானம் பற்றிய விவரங்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவில் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்ள மிகச் சிலர் மட்டுமே இவ்வளவு வெளிப்படையாக தங்கள் வருமானம் பற்றிய விவரங்களை வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

‘எனது வாழ்க்கை’ என்ற தலைப்பில் முன்னாள் அதிபர் பில் கிளின்டன் எழுதிய சுயசரிதை புத்தகம் மூலமாக அவருக்கு 23 மில்லியன் டாலர் வருமான கிடைத்ததாம். ‘வாழும் வரலாறு’ என்ற தலைப்பில் அவரது மனைவி ஹிலாரி கிளின்டன் புத்தகம் எழுதி விற்றார். அதன் மூலம் அவருக்கு 10 மில்லியன் டாலர் வருமானம் கிடைத்ததாம்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடத் தகுதியானவரைத் தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பு அந்நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் நடந்து வருகிறது.

பாரக் ஒபாமா, ஹிலாரி கிளின்டனை விட முன்னணியில் இருக்கிறார். தனது வருமான விவரத்தை வெளியிட்ட அவர், இது போல வருமான விவரத்தை வெளியிட முடியுமா என்று ஹிலாரி கிளின்டனுக்கு சவால் விட்டார். இதையடுத்து தற்போது ஹிலாரி கிளின்டனும் அவரது கணவர் பில் கிளின்டனும் தங்கள் வருமான விவரத்தை வெளியிட்டுள்ளனர்.

நன்றி: தினமணி