இந்தியாவில் கட்சி/கூட்டணி சார்ந்த வோட்டுதான் பெரும்பாலும் விழும். ரஜினி வாய்ஸ் முதல் ராஜீவ் காந்தி வரை தனிப் பெரும் தலைவராக சிலர் முன்னிறுத்தப்பட்டாலும், ஆளுங்கட்சி vs எதிர்க்கட்சி இடையிலேயான போட்டி என்பதுதான் ஃபார்முலா.
அமெரிக்காவில் தனி நபர் சார்ந்த அரசியல் முன் வைக்கப்படுகிறது. ரான் பால் முதல் ரொனால்ட் ரீகன் வரை எல்லாருமே குடியரசுக் கட்சி சின்னத்தில் நின்றாலும் தனிப்பட்ட கொள்கை, ஆளுமை போன்றவற்றால் ஜனநாயகக் கட்சியிலும் அபிமானிகளைப் பெற்று வைத்திருக்கிறார்கள்.
இன்றைய தேதியில் ‘எந்தக் கட்சிக்கு உங்கள் வாக்கு?’ என்று கருத்துக்கணிப்பு நடத்தியதில் தெரியவந்ததுதான் தலைப்பாக இருக்கிறது. மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் டெமோக்ராட்ஸ் வாகை சூட வேண்டும். ஆனால், மெகெயினா/ஒபாமாவா (அல்லது) மெக்கெயினா/ஹில்லரியா என்றால், இழுபறி என்கிறார்கள். (முழுமையான முடிவுகள்: என்.பி.சி & வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கணிப்பு)
தற்போதைய ஜனாதிபது ஜார்ஜ் புஷ்ஷை பின்பற்றினாலோ அல்லது அவரின் வழியில் நடப்பேன் என்று பிரச்சாரத்தில் ஈடுபட்டாலோ, ஜான் மெகயின் அதோகதி என்பதையும் இந்த கருத்துக்கணிப்பு தெளிவாக்குகிறது.
எந்தப் பகுதிகளில் எந்த வேட்பாளர் முன்னிலை?
முழு அலசல்:
1. More Americans Trust Democrats On U.S. Health Reform, Poll Finds – WSJ.com
2. McCain, GOP May Have Cause for Hope – WSJ.com
Filed under: கருத்துக்கணிப்பு | Tagged: அனுமானம், ஒபாமா, குடியரசு, க்ளின்டன், ஜனநாயகம், தேர்தல், நாளிதழ், மெகெயின், வாக்கு, வோட்டு |
மறுமொழியொன்றை இடுங்கள்