வந்து விட்டார்…அமெரிக்காவின் அங்கண்ண (செட்டியார்).ரால்ப் நாடர்

வந்து விட்டார்…அமெரிக்காவின் அங்கண்ண (செட்டியார்)….. ரால்ப் நாடர்!!!

தேர்தலில் நிற்கப்போவதாக அதிகாரபூர்வாமன செய்தியை இன்று வெளியிட்டார்.

இவரால் ஒரு நல்ல பயனும் கிடையாது. இவரது கொள்கைகள் பெரும்பாலும் டெமாக்ரட் கட்சியை ஒத்ததே. தனக்கு இரண்டு கண்ணும் போனலும் பராவில்லை;டெமாக்ரட் கட்சிக்கு ஒரு கண் போவது முக்கியம் என நினைக்கும் நல்லவர்!! குடியரசு கட்சிக்கு இது ஒரு ஆனந்தமான செய்தி!!

டெமாக்ரட் கட்சிக்கு நல்ல செய்தி அல்ல.

மேலதிக்க தகவல்களுக்கு கிளிக்குங்கள்

http://www.cnn.com/2008/POLITICS/02/24/nader.politics/index.html

3 பதில்கள்

 1. —இவரால் ஒரு நல்ல பயனும் கிடையாது. இவரது கொள்கைகள் பெரும்பாலும் டெமாக்ரட் கட்சியை ஒத்ததே.—

  🙂 இப்படி சொல்லிட்டீங்களே 😀

  —குடியரசு கட்சிக்கு இது ஒரு ஆனந்தமான செய்தி!—

  அந்தப் பக்கம் ரான் பால் நின்றார் என்றால், குடியரசு கட்சியின் வாக்கும் அமர்க்களமாக சிதறும் வாய்ப்புள்ளது; ஆனால், அவர் நிற்கப் போவதற்கான எந்த அறிகுறியும் இல்லை 😉

  மேலும் ரால்ப் நாடெரின் பிரகாசம் ஃப்யூஸ் பிடுங்கப்பட்டு ரொம்ப நாளாகி விட்டது. க்ரீன் கட்சி சார்பாக நிற்பதற்கும் வாய்ப்பில்லை.

  United States presidential election, 2000 தேர்தலில் 2,883,105 வாக்குகள் (2.7%) க்ரீன் கட்சி சார்பாக நின்று பெற்றார். அப்பொழுதே இவர் மீதிருந்த புதுக்கருக்கு தேய்ந்து விட்டது.

  சென்ற 2004 தேர்தலில் 465,650 வாக்குகள் (0.38 %) மட்டுமே கிடைத்தது. க்ரீன் கட்சி இவருக்கு வாய்ப்பளிக்க மறுத்துவிட்டது.

  ஃப்ளோரிடாவில்:
  2000- ம் ஆண்டு – 97,421 வாக்குகள் விழுந்தது.
  2004 தேர்தலில் – 32,971 ஆகக் குறைந்தது.

  2004 ஃப்ளோரிடாவில் ஜார்ஜ் புஷ் 380,978 வாக்குகள் அதிகம் பெற்று கெர்ரியை சவுகரியமாகத் தோற்கடித்திருந்தார். என்றாலும், நியூ மெக்சிகோ போன்ற இடங்களில் கெர்ரி தோற்றதற்கு இவரை குற்றஞ்சாட்டலாம்.

  கடந்த தேர்தலில், நாடெரை ஒஹாயோவில் நிற்கவே அனுமதிக்கவில்லை: The Command Post – 2004 US Presidential Election – Nader Loses Bid To Get On Ohio Ballot 😦

  இந்த மாதிரி வாக்குச்சீட்டை விட்டே நீக்கப்படுவது… பாசிசம்/கருத்து சுதந்திரம்/உண்மையான ஜனநாயகம் இத்யாதி கேள்விகளை எழுப்பியது.

  ஒருவர் நிற்பதால், இன்னார் தோற்றுவிடுவார் என்று கவலை வரும் என்றாலும், அதையும் மீறி ஜெயிக்க வேண்டாமா?

  இந்தியாவில் ஒத்த பெயருள்ள வேட்பாளர்களை நிறுத்தி படுத்துவார்கள். இங்கே ராஸ் பெரோவும் ரால்ப் நாடெரும் பயன்படுகிறார்கள்?
  ————-

  —அமெரிக்காவின் அங்கண்ண (செட்டியார்)…—

  இதென்ன கதை… தெரியாதே…

 2. //—அமெரிக்காவின் அங்கண்ண (செட்டியார்)…—

  இதென்ன கதை… தெரியாதே//

  ரொம்ப வருடங்களுக்கு முன்பு நம் ஊரில் அங்கண்ணசெட்டியார் என்பவர் எந்த தேர்தல் வந்தாலும் (ஜனாதிபதி தேர்தல், இடைதேர்தல் உட்பட) நின்று விடுவார். பெரும்பாலான இடங்களில் மனு தள்ளுபடி ஆகி விடும்! எந்த தேர்தல் வந்தாலும் தமிழ் பத்திரிகைகள் ” வந்து விட்டார் அங்கண்ணச்செட்டியார்” என்று நகை சுவை ஆக நியூஸ் போடும்!). எனக்கு என்னவோ சட்டென இவர் ஞாபகம் வந்தது.

  //ஒருவர் நிற்பதால், இன்னார் தோற்றுவிடுவார் என்று கவலை வரும் என்றாலும், அதையும் மீறி ஜெயிக்க வேண்டாமா?//

  ரொம்ப சரி, ஆனால் நிற்பவருக்கு தான் ஜயிக்க வெண்டும் என்ற நோக்கம் இருக்க வேண்டும். கொள்கைகள் பெரும் வித்தியாசம் இருக்க வேண்டும். இந்த மனிதருக்கு அதெல்லாம் ஒன்றுமில்லை… குறைந்த வாக்குகள் வாங்கினார் என்றாலும் ஒவ்வொரு முறையும் ஜனநாயக கட்சியின் வாக்குகளை சிதரடித்து விடுவார். அதுவே இவரது நோக்கம். வேலையே மற்ற இடங்களை விட்டு விட்டு battle ground state’ ல் போய் நின்று குழி தோண்டுவார். புளோரிடா, நியூ மெக்ஸிகோ ….இந்த தடவை எங்கே குழி வெட்டுவாரோ?? இவர் நிற்பதை வரவேற்ற ஒரு ஆள் ஹக்கபீ !!!

  //அந்தப் பக்கம் ரான் பால் நின்றார் என்றால், குடியரசு கட்சியின் வாக்கும் அமர்க்களமாக சிதறும் வாய்ப்புள்ளது//
  நிற்பதார்கான அறிகுறிகள் தெரிய வில்லை… இவரே இப்பொது காங்ரெஸ்சுக்கும் நிற்கிறார் என நினைக்கிறேன்.
  நல்ல காலம் Bloomberg நிற்க வில்லை!

 3. —Bloomberg நிற்க வில்லை!—

  அப்படீங்கறீங்க?? சொல்லவே முடியாது!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: