எலெக்டோரல் காலேஜ் – செல்லாத வோட்டு (மீள்பதிவு)

இந்தியாவில் வாக்காளர்கள் எம்.எல்.ஏ.க்களையும், எம்பிக்களையும் தேர்ந்தெடுப்போம். அவர்கள் முதலமைச்சரையும், பிரதம மந்திரியையும் அரியணையில் அமர்த்துவார்கள்.

அமெரிக்காவில் எம்.பி.க்கள் (ஹவுஸ் ஆஃப் ரெப்ரசேண்டேடிவ்ஸ் & செனேட்), எம்.எல்.ஏ. (உள்ளூர் ஹவுஸ் ஆஃப் ரெப்ரசேண்டேடிவ்ஸ் & உள்ளூர் செனேட்), ஆளுநர் (முதலமைச்சர்), ஜனாதிபதி (பிரதம மந்திரி) என எல்லாப் பதவிகளும் வாக்காளர்கள் கையில் இருக்கிறது.

இவற்றில் எம்.எல்.ஏ, எம்.பி., கவர்னர் — ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம், பிரச்சினை எதுவும் இல்லை. அனைத்து வோட்டுகளையும் ஒழுங்காக எண்ணி முடிப்பதில் வேண்டுமானால் ஆங்காங்கே சலசலப்புகள் எழலாம்.

அமெரிக்க ஜனாதிபதியைத் தீர்மானிக்க ‘எலெக்டோரல் காலேஜ்’ என்னும் உத்தியை பின்பற்றுகிறார்கள். இந்தியாவில் மொத்தம் 545 எம்.பிக்கள் சேர்ந்து பிரதம மந்திரியை தேர்ந்தெடுப்பது போல், அமெரிக்காவில் 538 ‘மாகாண வோட்டுகள்’ ஜனாதிபதியை தேர்வு செய்கிறது.

எந்த மாநிலத்துக்கு ஜனத்தொகை அதிகமோ, அந்த மாநிலத்துக்கு அதிக வோட்டுகள் கிடைக்கும். இந்தியாவின் டெல்லி போன்ற — வாஷிங்டன் டி.சி.க்கு ஒரு வோட்டு. உத்தர பிரதேசம் போன்ற கலிஃபோர்னியாவுக்கு 55. முழுப் பட்டியல்.

ஆனால், தற்போதையத் தேர்தல்களில், இந்த முறை மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. 2000 தேர்தலில், பெரும்பான்மையான வாக்குகளை ‘ஆல் கோர்’ வாங்கி இருந்தும், தேவையான ‘எலெக்டோரல் வோட்டுகளை’ப் பெறாததால் ஜார்ஜ் புஷ்ஷிடம் தோற்றுப் போனார்.

‘எலெக்டோரல் வோட்டுக’ளினால் வாக்காளருக்கு வோட்டளிக்கும் ஆர்வமும் குறைகிறது என்பது அடுத்த குற்றச்சாட்டு. நியு யார்க் (31 வோட்டுகள்), டெக்ஸாஸ் (34 வோட்டுகள்), இரண்டும் முறையே சுதந்திரக் கட்சிக்கும், குடியரசுக் கட்சிக்கும் நிச்சயம் கிடைக்கும். இதனால், இங்கு வாழும் எதிர்கட்சி விசுவாசி வோட்டுப் போடுவதும் ஒன்றுதான், போடாமல் விட்டுவிடுவதும் ஒன்றுதான்!

ஆனால், இந்தியாவில் இந்த நிலை தற்போது இல்லை. ஒவ்வொரு வோட்டும் எம்.எல்.ஏ.வை தீர்மானிப்பதில் உதவுகிறது. அதற்கு பதில் ‘எலெக்டோரல் காலேஜ்’ முறையைக் கொண்டு வந்தால் நன்மையா, தீமையா?

இவ்வாறு ‘மாவட்ட வோட்டுகள்’, ‘144-வது வட்ட ஓட்டுகள்’ என்று மாற்றுவதன் மூலம், முஸ்லீம் வோட்டு அதிகரிக்கிறதா, வடக்கு மக்கள் அதிகமாகி விட்டார்களா என்று கவலை கொள்ள வேண்டாம்.

மேலும் இதன் மூலம் ‘பார்டர்லைனில்’ இருக்கும் மக்களுக்கு மதிப்பு கூடும். தற்போதைய ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரம் 15/16 மாகாணங்களில் மட்டுமே நடக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் ஐம்பது மாநிலங்களில் முக்கால்வாசி மாநிலங்கள் கண்டுகொள்ளப் படுவதேயில்லை. அதே போல் லாலுவின் பிஹாரும், மோடியின் குஜராத்தும் கைவிடப்பட்டு, முடிவு செய்யாத வடகிழக்கு, கேரளம், ஜம்மு-காஷ்மீர் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கிடைக்கும். அங்கு நடக்கும் சராசரி விஷயங்களும் அரசின் தீவிர கவனிப்பையும், விசாரிப்பையும் அடையும்.

இந்தமுறை வந்தபிறகும், அவ்வப்பொழுது நடைபெறும் மக்கள் தொகைக்கணக்கு அடிப்படையில், ‘எலெக்டோரல் வாக்குகள்’ மாறிக் கொண்டே வந்தால், இந்த முறையால் எந்தப் பயனுமில்லை.

படங்களுக்கு நன்றி : பிஸினஸ் வீக்

ரெண்டு வரி நோட்:
அமெரிக்காவில் இவ்வாறு செய்யப்படுவது வேறு சில விவகாரங்களுக்கு வழிகோலியுள்ளது. அட்லாண்டாவை மாற்றுகிறேன் என்று சுதந்திரக் கட்சியும், டெக்சாஸை மறுபடி பிரிக்கிறோம் என்று குடியரசுக் கட்சியும், தங்கள் வேட்பாளர்கள் ஜெயிக்குமாறு மாற்றியமைத்துக் கொண்டுள்ளார்கள்.

(திருத்தப்படாத) அசல் பதிவும் பின்னூட்டங்களும்: ஈ – தமிழ்: செல்லாத வோட்டு (செப். 14, 2004)

5 பதில்கள்

 1. தேர்தல் முறையில் சில மாற்றம் வேண்டும் என நினைக்கிறேன். தற்சமய்ம் அமெரிக்காவில் மொத்தம் கிட்டத்தட்ட 3141 கவுண்டிகள் உள்ளன. ஒவ்வொரு கவுண்டிக்கும் ஒரு எலெக்டோரல் வோட் என்று வைத்து கணக்கு செய்தால் சில பார பட்சங்கள் நீங்கும்.

  // ஆனால், தற்போதையத் தேர்தல்களில், இந்த முறை மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.//
  இப்போது இதைப் பற்றி யாரும் பேசுவதாக தெரியவில்லையே??

 2. இதைப் போன்று பிரைமரிகளில் “காகஸ்” முறையும் ஒழிக்கப்பவேண்டிய ஒன்று. இங்கு குறிப்பிட்ட சமயத்தில் மட்டுமே வாக்கு அளிக்க முடியும். இது வயத்னவர்களுக்கும், ” ஷிப்டில் வேலை பார்க்கும் “நீலச் சட்டை தொழிலாளர்க்கும்” படு கஷ்டம். இதனாலயே வாக்கு அளிப்பவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. இது தவிர bullying tactics கூட உண்டு!

 3. இந்த எலக்டோரல் மேப்பில் ஒன்று தெளிவாகிறது..
  எங்கு எல்லாம் டெமாக்ரட் கட்சி வெற்றி பெறுமோ அங்கெல்லாம் ஹில்லரி! தோற்கும் இடங்களில் ஒபாமா!!
  எங்கு எல்லாம் குடியரசு கட்சி வெற்றி பெறுமோ அங்கெல்லாம் Mccaiன் தோல்வி!!! இது தேர்தல் முடிவுகளை மேலும் சுவாரசியமாக்கும் என எண்ணலாம்

 4. —ஒவ்வொரு கவுண்டிக்கும் ஒரு எலெக்டோரல் வோட் என்று வைத்து கணக்கு—

  இது நல்லா இருக்கே! ஒஹாயோவிலும் ஃப்ளோரிடாவிலும் இருக்கும் இரண்டு மூன்று கவுண்டிகளுக்கு மட்டும் யோகம் என்று புலம்ப ஆரம்பிக்கவும் வாய்ப்பு உண்டு 😉

  —// ஆனால், தற்போதையத் தேர்தல்களில், இந்த முறை மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.//
  இப்போது இதைப் பற்றி யாரும் பேசுவதாக தெரியவில்லையே—

  யாரும் இன்னும் இதைப் பற்றி மூச்சு கூட விட ஆரம்பிக்கவில்லை! (எடிட் செய்ய விட்டுப் போச்சு 🙂

  —பிரைமரிகளில் “காகஸ்” முறையும் ஒழிக்கப்பவேண்டிய ஒன்று—

  ஓ! காகஸ் இருந்த அனைத்து இடங்களிலும் ஒபாமா வென்றிருக்கிறார். மிட் ராம்பியை ஓரங்கட்ட ஹக்கபீயுடன் ‘டீல்’ போடுவது போன்றவையும் அரங்கேறி இருக்கிறது. இந்த கை தூக்கற சமாச்சாரம் சரியில்லதான்

  —டெமாக்ரட் கட்சி வெற்றி பெறுமோ அங்கெல்லாம் ஹில்லரி! தோற்கும் இடங்களில் ஒபாமா!!
  எங்கு எல்லாம் குடியரசு கட்சி வெற்றி பெறுமோ அங்கெல்லாம் Mccaiன் தோல்வி!—

  சூப்பர்!!!! இது போட்டீன்னு சொல்லப் போறாங்க

 5. //காகஸ் இருந்த அனைத்து இடங்களிலும் ஒபாமா வென்றிருக்கிறார். //
  காகஸ் இல்லமால் பிரைமரியாக இருந்திர்ந்தால் ஒன்று அல்லது இரண்டு சிறிய மாநிலங்களில் ஹில்லரி வெற்றி பெற்று இருக்கக்கூடும்.
  ஓபாமாவா, ஹில்லரியா என்ற தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லம்மால் பார்த்தால் காகஸ் அவ்வளவு நல்ல முறை அல்ல. வாக்குகள் மிகக்குறைவே. இது கடும் பனி, கொடிய குளிர் காலஙகளில் வேறு நடத்துகிறார்கள். சீதொஷ்ண நிலையைப் பொருத்தே வாக்கு எண்ணிக்கை அமையும். மேலும் தங்கள் வாக்கு யாருக்கு என்பதை ரகசியமாய் வைத்துக்கொள்ள முடியாது.(யாரவது ஆட்டோ அனுப்பினால்?). ”கும்பலோடு கோவிந்தா” போடுபவர்களுக்கு இது ஒகே; மற்றவர்களுக்கு கஷ்டமே.பிரைமரிகளில் சீக்கிரம் ஓட்டு விடலாம் (Early voting, without pressure). பிரைமரி ஜனாதிபதி தேர்தலைப் போலவே நடத்துவது நல்லது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: