ஒபாமாவின் 11வது தொடர் வெற்றி

ஜனநாயகக் கட்சியின் வெளிநாட்டு பிரதிநிதிகளின் வாக்களிப்பில் ஒபாமா 65% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் (ஹிலரி 32%)

வெளிநாட்டில் வசிக்கும் கட்சி உறுப்பினர்களுக்கு மொத்தம் 22 பிரதிநிதிகள் உள்ளனர் இவர்களுக்கு ஆளுக்கு 1/2 ஓட்டு என மொத்தம் 11 ஓட்டுக்கள் கன்வென்ஷனில் கணக்கெடுக்கப்படும்.

இந்த வெற்றியையும் சேர்த்து ஒபாமா முனோட்டத் தேர்தலில் தொடர்ந்து 11 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

Obama wins Democrats Abroad contest – CNN

படம் – CNN

புதிய தந்திரத்துடன் திருமதி.கிளின்டன்

ஒபாமாவின் தொடர்ந்த வெற்றிகளால் குளம்பிப்போயுள்ள திருமதி.கிளின்டன் புதிய திட்டங்களுடன் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. Wisconsin வெற்றியானது, ஒபாமாவின் அதிரடி வெற்றியாகக் கணிக்கப்படுகின்றது. வரும் வியாழக் கிழமை இருவரும் டெக்ஸாசில் ஒரு நேரடி விவாதத்தில் கலந்துகொள்ள உள்ளனர். இதில் தூள் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Ohio, Texas ஆகிய இரு மானிலங்களிலும் வெற்றி பெற்றால், மொத்தத்தில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாக திரு.கிளின்டன் கூடச் சொல்லியுள்ளார்.

தாழ் மட்ட வேலை புரிவாரின் வாக்குகள் டெக்சாசில் செல்வாக்கு செலுத்தும் என்று எதிர்பார்ப்பதால் ஒபாமா, கிளின்டன் இருவரும் Blue color தொழில் புரிபவர்களை இலக்கு வைத்து தமது பிரச்சாரங்களை தொடங்கியுள்ளனர்.

இதேவேளை குடியரசுக்கட்சியின் வேட்பாளராக கிட்டத்தட்ட முடிவாகிவிட்ட மக் கெயின் கூட ஒபாமாவை இப்பவே தன் பேச்சுக்களில் குறி வைக்கத் தொடங்கிவிட்டார். அவர் ஒரு பேச்சில்

“I will fight every moment of every day in this campaign to make sure that Americans are not deceived by an eloquent but empty call for change,”

இளைஞர்களை அதிகமாக ஒபாமா கவர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதாவது 10 இளைஞர்களில் 6 பேர் ஒபாமாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வெற்றி நடைபோடும் ஒபாமா

nullதிருமதி. கிளின்டன் Wisconsin ல் வெற்றி பெறலாம் என்று ரொம்பவுமே நம்பி இருந்தாராம். காரணம் அங்கே பொரும்பாலானார் (90% வீதமானோர்) வெள்ளையர்கள், அத்துடன் பெரும்பாலானோர் வேலைபார்ப்பவர்கள் அதிலும் மேலாக 50 வீதமானோர் பெண்களாவார். இங்கு ஒபாமாவின் வெற்றி அமெரிக்கர் மத்தியில் இனவாதம் எவ்வளவு அகன்றுவிட்டது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இது ஒபாமாவின் 9ம் தொடர் வெற்றி.

திருமதி. கிளின்டன் நிவ்யார்க், நிவ் யேர்சி (அமெரிக்காவில் இங்குதான் தமிழர்கள் அதிகமாக வாழ்கின்றார்களாம்) போன்ற பெரிமாநிலங்களில் கவனம் செலுத்தி அங்கே வெற்றி பெற்றிருந்தார். ஆனால் அவையெல்லாம் இப்போது தொலைதூரக் கனவு ஆகிவிட்டதுங்கோ..!!!

இதுவரை
திருமதி. கிளின்டன்
Arizona, Arkansas, California, Florida, Massachusetts, Michigan, Nevada, New Hampshire, New Jersey, New Mexico, New York, Oklahoma, Tennessee

திரு. ஒபாமா
Alabama, Alaska, Colorado, Connecticut, Delaware, Georgia, Hawaii, Idaho, Illinois, Iowa, Kansas, Louisiana, Maine, Maryland, Minnesota, Missouri, Nebraska, North Dakota, South Carolina, Utah, Virginia, Washington state, Wisconsin

நடக்கப்போவதை இருந்து பார்ப்போம்!!!

அமெரிக்க தேர்தல் – ஜான் மெக்கெயின் சறுக்கிய தருணங்கள்

McCain Love Link - Romance by Republicans: GOP Valentines Day Specialகட்டுரையில் இருந்து…

 • வலப்பக்கம் உள்ளவர் மெக்கெயினின் காதலியா!?! நாற்பது வயது பெண்ணுடன் தொடர்பா?
   நட்பின் பேச்சைக் கேட்டு லாபியிஸ்ட்களின் நிறைவேறிய கோரிக்கைகள்…

  1. பெருநகரத்தில் இயங்கும் இரண்டு முக்கிய தொலைக்காட்சி கன்னல்களையும் ஒரே நிறுவனமே வைத்துக் கொள்ள வகை செய்யும் திட்டம்
  2. சிறுமுதலீட்டுக்காரர்களின் விருப்பப்படி வரிவிலக்கு தரும் சட்டம்
  3. மாநிலத்தில் இயங்கும் பல ஊடகங்களை ஒரே ஒருவரே கையகப்படுத்த விதிவிலக்கு ஏற்படுத்துதல் (இந்த நிறுவனத்தின் விமானத்தையும் சொந்தப் பயணங்களுக்கு பயன்படுத்தி உள்ளார்)
 • (தங்களுக்கு சௌகரியமான சட்டங்களை இயற்றவும், பரிவு ஏற்படும் பார்வையை தோற்றுவிக்கவும் இந்தியா முதல் இன்டெல் நிறுவனம் வரை அனைவரும் ‘லாபியிஸ்ட்’களை நியமித்திருப்பார்கள்.) இவர்கள் கொடுக்கும் பணத்தை எதிர்த்து சட்டம் கொண்டுவருவதாக சொல்லிக்கொண்டே, லாபியிஸ்ட் பணத்தை வாங்கிக் கொண்ட கதை.
 • வங்கி அதிபரின் தனி விமானத்தில் பலமுறை வாஷிங்டன் டிசிக்கும் சொந்த ஊருக்கும் பறந்து சென்றது;
 • அமெரிக்காவில் (முன்பு) ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணகர்த்தாக்களில் ஒருவருடன் பஹாமாஸ் உல்லாசப் பயணம் சென்றது;
 • மெகெயினின் மனைவிக்கு ஷாப்பிங் மாலில் பங்கு கொடுத்து விட்டு, அதற்கு பிரதிபலனாக வங்கியின் கடன் கெடுபிடிகளை, நடுவண அரசு கண்டும் காணாமல் இருக்கச் செய்தது
 • தொலைத்தொடர்பு நிறுவன லாபியிஸ்ட்களை தன்னுடைய பிரச்சாரக் குழுவின் முக்கிய அங்கத்தினர்களாக நியமிப்பது; அது மட்டுமல்லாமல், அதே தொலைபேசி/தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து எண்ணிலடங்கா நிதியை தன்னுடைய பிரச்சாரத்துக்காகப் பெற்றுக் கொள்வது

விடைகளையும் விவரங்களையும் அறிய (நியு யார்க் டைம்ஸ்): For McCain, Self-Confidence on Ethics Poses Its Own Risk

இதற்கெல்லாம் நேரில் விளக்கம் கொடுக்கும் பேட்டி கொடுத்து தன் பக்கத்து நியாயங்களை வைக்குமாறு வாய்ப்பு வழங்கிய நியு யார்க் டைம்ஸ் நாளிதழுக்கு நேர்காணல் வழங்காமல் புறக்கணித்தும் விட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பற்றிய கேலிச்சித்திரங்களுக்கு…..

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பற்றிய கேலிச்சித்திரங்களுக்கு….
கிளிக்கித்து ரசியுங்கள்….

http://politicalhumor.about.com/od/election2008/ig/2008-Election-Cartoons/