அமெரிக்க தேர்தல் இன்றைய சர்ச்சைகள்

பராக் ஒபாமாவின் எட்டு தொடர் வெற்றிகளுக்கு ஈடு கொடுக்க கிளிண்டன் அணி நாளொன்றுக்கு புது சர்ச்சைகளை பெரிதாக்கி வருகிறது. ஒபாமா அணியும் இதற்கான வாய்புக்களை தருகிறது.

 சர்ச்சை 1: பராக் ஒபாமா தன் நண்பர், மாசசூசெட்ஸ் கவர்னர் டெவால் பாட்ரிக் பேசிய வார்த்தைகளை அப்படியே தன் பேச்சில், தன் பேச்சாகவே சேர்ததது.

ஒபாமா தன் பேச்சில் இது ஏற்கனவே ஒருவர் பேசிய பேச்சு என்னும் குறிப்பில்லாமல் பேசியது காப்பி அடிப்பது என ஹிலரியின் பக்கம் குற்றம் சாட்டுகிறது. ‘உங்கள் பிரச்சாரம் வார்த்தைகளாலானதென்றால் அது உங்களின் சொந்த வார்த்தைகளாக இருக்கட்டும்.’ (If your campaign is based on words let the words be yours’ – not exact) என்பது ஹிலரி பிரச்சாரத்தின் வாக்கியம். குடியரசுக் கட்சி ஒபாமாவை ‘Copycat Candidate‘ என அழைத்துள்ளது.

ஒபாமா ‘காப்பி அடித்த’ வரிகள். “I am not asking anybody to take a chance on me. I’m asking you to take a chance on your own aspirations.”

டெவால் 2006ல் பேசியது வீடியோ

ஒபாமாவின் ‘காப்பி’ வீடியோ.

Massachusetts governor defends Obama from plagiarism charge 

சர்ச்சை 2: ஒபாமாவின் மனைவி கூட்டமொன்றில் பேசுகையில் விபரம் தெரிந்த பின்பு முதன்முதலாக அமெரிக்காவை குறித்து பெருமைப்படுவதாக கூறியது.

ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா தன் கணவருக்கான ஆதரவை முன்வைத்து இதை சொல்லியிருக்கிறார். அவர் பேசியது “Hope is making a comeback and, let me tell you, for the first time in my adult life, I am proud of my country. Not just because Barack is doing well, but I think people are hungry for change,”

At last, Michelle Obama proud of America – Boston Herald
Cindy McCain responds to Michelle Obamaproud” comments – FOXNews

4 பதில்கள்

 1. புதிய சர்ச்சை ஒன்று ஃப்ரெஷ்ஷா கிளம்பியிருக்குது.. ஹிலரி க்ளிண்டன் பேசிக்கொண்டிருக்கும்போதே(ஒஹையோ) ஒபாமா பேச வந்துவிட்டார்(டெக்ஸாஸ்).

  ஒபாமா தரப்பில், ஹிலரி விஸ்கான்சனில் ஒபாமா வென்றதற்கு வாழ்த்து சொல்லவில்லை என குறை சொல்கிறார்கள்

 2. ப்ரைம் டைமுக்கு முண்டியடிப்பதை இப்படியெல்லாம் ஊதி விடறாங்களா 🙂

  இன்னொரு சர்ச்சை: ஃப்ளோரிடாவும் மிச்சிகனும் முந்திரிக் கொட்டையாக ‘பெரிய செவ்வாய்’க்கு முன்பே முன்னோட்ட தேர்தலை நடத்த தீர்மானித்தது. பாரம்பரிய மாகாணங்களான ஐயோவா, நியூ ஹாம்ஷைர் போல் இல்லாமல், திடீரென்று இப்படி முக்கியத்துவம் பெற விழைந்ததால் — ஜனநாயகக் கட்சி இந்தத் தேர்தல்களை அங்கீகரிக்க மறுத்துவிட்டது.

  (குடியரசுக் கட்சி 50% தள்ளுபடி கொடுத்து, தண்டித்தது; என்றாலும், ஜனநாயகம் போல் முழுமையாக புறந்தள்ளவில்லை.)

  பணம் அதிகம் செலவழிக்க இல்லாத ‘அந்தக் காலத்தில்’, ஒபாமாவும், இங்கே போட்டியிட மறுத்துவிட்டார். ஹில்லாரி இரண்டு இடத்திலும் வென்றிருக்கிறார்.

  ‘ஒவ்வொரு வாக்கும் முக்கியம்தானே?! அதுவும் ஆல் கோர் பெரும்பான்மை வென்றும், தோற்ற ஃப்ளோரிடா ஆகட்டும்; வேலைவாய்ப்பு குறைந்து குடியரசு பக்கம் சாய்ந்துவிடுமோ என்று பயப்படும் மிச்சிகன் ஆகட்டும் — இரண்டுமே ஜனநாயகக் கட்சிக்கு முக்கிய மாநிலங்கள்.

  எனவே, இந்த இரு வெற்றிகளையும் கணக்கில் சேர்த்துக் கொண்டு, பிரதிநிதிகளைக் கூட்டித் தரவேண்டும்’ — என்று க்ளின்டன் போராடி வருகிறார்.

 3. ஒபாமா குறித்த கொசுறு விவகாரம்: ஆண் போட்டியிட்டால் இப்படிப்பட்ட மொழியைக் கையாள்வாரா?

  Is Obama Using Sexist Language?: “Language such as

  ‘when she’s feeling down’
  ‘periodically’ she
  ‘launches attacks.’


  “Claws”…”feeling down”…I find it hard to envision Obama using the same language if he were facing, say, former Sen. John Edwards, D-NC.”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: