கறுப்பர் பிரச்சனைகளை பேச மறுக்கும் ஒபாமா கறுப்பர்களின் வேட்பாளரா ?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் உலகில் உள்ள பலரின் கவனத்தை ஈர்த்து இருப்பவர் பாராக் ஒபாமா. இவர் ஜனநாயக கட்சியின் வேட்பாளாராக வெற்றி பெற்று பிறகு ஜனாதிபதி தேர்தலையும் வென்றால் அமெரிக்காவின் முதல் ஆப்ரிகன் அமெரிக்கன் (கறுப்பர்) ஜனாதிபதி என்ற சரித்திரம் நிகழும். ஆனால் இந்த சரித்திரங்கள் எந்தளவுக்கு அவர் சார்ந்த சமுதாயத்திற்கு உதவக்கூடும் ?

எந்த நாட்டிலும் இத்தகைய “முதல்” சரித்திரங்கள் அந்த தலைவர்கள் சார்ந்து இருந்த சமுதாயத்திற்கு உதவியதில்லை. இந்தியாவிலேயே எத்தனையோ உதாரணங்கள் உண்டு. இந்தியாவின் முதல் பெண் பிரதமரால் இந்தியப் பெண்களுக்கு கிடைத்தது என்ன ?

இந்தியாவின் முதல் “தமிழ்” ஜனாதிபதியான அப்துல் கலாம் மூலமாக தமிழர்களுக்கு கிடைத்தது என்ன ? இந்தியாவின் முஸ்லீம் ஜனாதிபதியால் குறைந்தபட்சம் குஜராத்தில் நியாயம் கிடைத்ததா ?

இந்தியாவின் தற்போதைய முதல் சீக்கிய இனத்து பிரதமரால் சீக்கியர்களுக்கு கிடைத்தது என்ன ?

இவர்கள் எல்லாம் அதிகார மையங்களின் பிரதிநிதிகள் மட்டுமே.

இத்தகைய கேள்விகள் அமெரிக்காவிலும் எழுப்பப்படுகின்றன. அத்தகைய ஒரு கட்டுரையை சமீபத்தில் வாசித்தேன். அந்தக் கட்டுரையில் இருந்து சில வரிகள் :

Assuming that Senator Barack Obama can win the White House, the relevant question, nonetheless, is whether he can save Black America.

Rev. Jesse Jackson, in a recent Chicago Sun-Times op-ed piece, apparently would answer this question in the negative. A presidential candidate who is afraid to raise Black issues is also afraid to offer Black solutions.

Our condition is so dismal that we need someone who can save Blacks in America and not someone who can simply win the White House. The criminal agents include racial genocide, racial mentacide, economic warfare, chemical warfare, environmental warfare, biological warfare and police terrorism.

It is a contradiction in terms for someone who wins the White House to also solve Black problems. Again, Blacks are being asked to endorse and finance our own oppression. Oppression cannot occur without the acquiescence of the oppressed. The White House is the headquarters for white supremacy. It reminds Blacks of the “Big House.”

மேலும் வாசிக்க – Is Obama Really “The One”?

தொடர்புடைய இடுகை –
ஒபாமா கறுப்பரா ? ஒபாமா கறுப்பர்களின் பிரதிநிதி அல்ல…

Advertisements

9 பதில்கள்

  1. அமெரிக்காவும் இந்தியாவும் வெவ்வேறு நாடுகள்.. எதுவும் நடக்கலாம். பொறுத்து இருந்துதான் பார்க்க வேணும்!

  2. ஒபாமா கறுப்பர்களின் பிரதிநிதி அல்ல் அல்ல அல்ல. அவர் ஒட்டு மொத்த அமெரிக்க மக்களுக்கு ஜனாதிபதியாக போட்டியிடுகிறார். இப்ப என்ன அப்துல் கலாம் ஜனாதிபதியானதுனால எல்லா தமிழர்களுக்கும் மாளிகையில விருந்து வெச்சிருக்கனும்னு சொல்றீங்களா? என்ன செஞ்சிருக்கனும்னு எதிர் பார்க்கறீங்க? ஒரு சீக்கியர் பிரதமரானதுனால எல்லா சீக்கியர்களுக்கும் ஒரு கோடி ரூபாய் குடுத்தர்லாமா? ஒபாமா என்ன ராமதாஸ் மாதிரி ஜாதி சங்க தலைவர்னு நினைச்சுக்கிட்டு இருக்கீங்களா?

  3. இந்த தேர்தலில் நான் விரும்பும் வேட்பாளர் ஒபாமா.

    ஆனால் அவர் குறித்த மாற்று கருத்துக்களையும் பதிவு செய்யப்பட வேண்டும் அல்லவா ? ஒபாமா வந்தால் எல்லாம் மாறி விடும் என்ற எண்ணம் தவறு தானே ? அதனால் தான் நான் வாசித்த சில கட்டுரைகளை இங்கே பதிவு செய்துள்ளேன்.

    இவை என் கருத்துக்கள் அல்ல. இங்கே உள்ள அமெரிக்கர்களின் கருத்துக்கள் என்பதையும் கவனியுங்கள்.

  4. —இந்த சரித்திரங்கள் எந்தளவுக்கு அவர் சார்ந்த சமுதாயத்திற்கு உதவக்கூடும் ?

    அமெரிக்க அமைப்பில் ஜனாதிபதிக்கு வானளாவிய அதிகாரம் இருப்பது போல் தோற்றம் இருந்தாலும், காங்கிரஸ் + செனேட் & நீதிமன்றம் மற்றும் federal அமைப்புக்குள் கிட்டத்தட்ட சுதந்திரமாக இயங்கிக் கொள்ளும் மாகாணங்கள் ஆகியோரை மேய்த்து, ஒன்றிணைப்பதுதான் முக்கிய வேலை.

    அமெரிக்கா என்னும் நிறுவனத்தின் அதிபராக (CEO) இருப்பவர் அனைத்து விஷயங்களிலும் தலையிடாமல், ஆனால், தன்னுடைய கொள்கைக்கு ஒவ்வாததை veto செய்யும் அதிகாரத்துடன் சிற்சில வழிகாட்டல்களைக் கோடிட்டு அவற்றை பொதுமக்களிடமும் அவர்களால தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடமும் விற்கும் சேல்ஸ்மேன் போன்ற துணை வேலையும் உண்டு.

    இந்த சமயத்தில் நான் ஏன் ஒபாமாவை ஆதரிக்கிறேன் – லாரென்ஸ் லெஸ்ஸிக் எடுத்துக் கொள்ளலாம். Integrity, character போன்ற குணாதிசயங்களினால் என்கிறார்.

    ஜார்ஜ் (டபிள்யூ) புஷ் (ஜூனியர்) கூட இப்படி நேர்மை, சொன்ன சொல் தவறாமை, ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுடன் டெக்சாஸில் இணக்கமாக சென்று வழிநடத்துபவர் போன்ற பண்புகளால்தான் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒபாமாவும் இப்படிப்பட்ட ஆளுமை குணாதிசயங்கள் மட்டுமே வைத்திருப்பவர். ‘இனத்தால் பிரிந்த தேசத்தை ஒன்றுபடுத்துகிறார்’, ‘தனக்கு நம்பிக்கை என்று பட்டதை தயங்காமல் செய்கிறார்’ என்று பிரச்சாரம் நடக்கிறது.

    தவறு செய்வது இயல்பு. ஹில்லரி கீழே விழுந்ததைக் குறித்து கவலைப் படாமல் எழுந்து கொள்ள முயற்சிக்கிறார்.

    ஒபாமா இன்னும் தவறவில்லை. அப்படி பிழை இழைக்கும்போது கார்ட்டர் மாதிரி மொத்தமாக மூழ்கடிப்பாரா அல்லது தற்போதைய புஷ் போல் கண்மூடித்தனமான நம்பிக்கையுடன் தொடர்வாரா என்பதை தெளிவும் செய்யாத அனுபவப் பின்னணியும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.

  5. //அமெரிக்க அமைப்பில் ஜனாதிபதிக்கு வானளாவிய அதிகாரம் இருப்பது போல் தோற்றம் இருந்தாலும், காங்கிரஸ் + செனேட் & நீதிமன்றம் மற்றும் federal அமைப்புக்குள் கிட்டத்தட்ட சுதந்திரமாக இயங்கிக் கொள்ளும் மாகாணங்கள் ஆகியோரை மேய்த்து, ஒன்றிணைப்பதுதான் முக்கிய வேலை.
    //

    சரியான சொன்னீங்க…பாலாஜி!

    இங்க ‘ஒரு process set’ பண்ணிட்டாங்க.. அந்த protocolயை அப்படியே எல்லாரும் கடைப்பிடிக்கிறாங்க..

    ஒபாமா வந்தா கறுப்பு இன மக்களை எந்தளவுக்கு மேல கொண்டுவர முடியும்…?
    இது நம்ம ஊரு சாதி பிரச்சனை மாதிரி.. இரத்ததிலேயே ஊறி போயிடுச்சி..
    அவ்வளவு எளிதா எதுவும் பண்ணமுடியுமா…. இல்ல சீக்கிரம் ஒரு விடிவு காலம் வரும்னு நம்பினாலே பெரிய விசயம் ….!! ;(

    //இந்தியாவின் முஸ்லீம் ஜனாதிபதியால் குறைந்தபட்சம் குஜராத்தில் நியாயம் கிடைத்ததா ?//

    உண்மை…!!

  6. பாலா, தென்றல்,

    நன்றி

    நான் சொல்வதும் இது தான். ஒபாமாவால் எந்த மாற்றமும் ஏற்படாது,

  7. kalakal…………………

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: