ஈராக் போர் – மெக்கெய்னும் ஒபாமாவும்

அமெரிக்கா, ஈராக்மீது போர்தொடுத்து இன்றுவரை அதில் மாட்டிக்கொண்டு முழிக்கிறது. ஈராக்கில் சதாம் ஹுசைன் கொல்லப்பட்டதுதான் மிச்சம். தினம் ஒரு கார் குண்டு. பலர் சாவு. பெய்ரூட், பாலஸ்தீனம்போல எப்போதும் கனன்று கொண்டிருக்கும் தீவிரவாத நெருப்பு. இந்தச் சாதனையை இன்றுவரை பெருமையாக சொல்லிக்கொள்பவர் ஜார்ஜ் புஷ். தனது அந்திமக் காலத்திலும்கூட ஈராக்கில் வெற்றியை நிலைநாட்டிய தனது பெருமையை ஊடகங்களில் தானே மெச்சிக்கொள்கிறார் புஷ்.

ரிபப்ளிகன் கட்சி வலதுசாரிக்கூட்டம் நிரம்பியது. ஏற்கெனவே வியட்நாமில் சண்டைபோட்டு பல மாதங்கள் கைதியாக இருந்து திரும்பிய போர்நாயகன் ஜான் மெக்கெய்ன் ஈராக் போரை ஆதரிப்பவர். இவரது பொன்வாக்கு: “They said that we would never succeed militarily; then we began to succeed militarily. Granted, we still have a long way to go in Iraq. And then they said they can’t succeed politically.”

ராணுவ வெற்றி என்பது எது? வெற்றி என்பதை எப்படி வேண்டுமானாலும் வரையறுத்துக்கொள்ளலாமா? சதாம் ஹுசைனைக் கொல்வதுதான் வெற்றி என்றால் அமெரிக்காவுக்கு ராணுவ வெற்றி கிடைத்துவிட்டது. சதாம் ஆட்சியை ஒழித்துக்கட்டுவதுதான் வெற்றி என்றால் அது நடந்துவிட்டது. அதற்குமேல்? அடுத்து பல பத்தாண்டுகளுக்கு ஈராக் ஒரு சுடுகாடாக மட்டுமே இருக்கப்போகிறது. அமெரிக்கப் போர் காரணமாக.

மெக்கெய்ன் தனது இணையத்தளத்தில் “Fighting Islamic Terrorists – Progress in Iraq” என்று ஒரு தனிப் பகுதியையே வைத்து நடத்துகிறார். அதைப் பார்ப்பவர்களுக்கு அமெரிக்கா, இஸ்லாமிய தீவிரவாதிகளை அடக்குவதற்காக ஈராக் போய் சண்டைபோடுவதான ஒரு தோற்றம் ஏற்படக்கூடும். அமெரிக்கா ஈராக்மீது போர்புரிய ஆரம்பித்தபோது, ஈராக் ஒரு தோல்வியுற்ற அரசமைப்பாக இல்லை. அங்கே, ஏகப்பட்ட நெருக்கடிகள் இருந்தாலும், பல சேவைகள் தொடர்ந்துவந்தன. ஆனால் அமெரிக்கப் படையெடுப்புக்குப் பிறகு அத்தனை அரசாங்கச் சேவைகளும் நொறுங்கிப்போயின. விளைவாக பொதுமக்கள் கடுமையான நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார்கள். தீவிரவாதக் குழுக்கள் வலிமை பெற்றன. கள்ள ஆயுதச் சந்தையில் கிடைக்கும் அமெரிக்க மற்றும் பிற நேச நாடுகளின் ஆயுதங்களையே கையில் ஏந்தி தீவிரவாதிகள் அமெரிக்கப் படைகளையும் பொதுமக்களையும் குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் தொடங்கினார்கள்.

ஷியா, சுன்னி முஸ்லிம்களுக்கு இடையே இருந்துவந்த வெறுப்பு சதாம் ஹுசைன் காலத்தில் உள்ளடங்கி இருந்தது. இப்போது அது வெளிப்படையாகப் பரவியுள்ளது.

ஆக, பின்விளைவுகள் எதைப்பற்றியும் சிந்திக்காமல் அமெரிக்கா ஆரம்பித்துவைத்த போர் இன்று ஒரு நாட்டை முற்றிலும் அழித்துள்ளது; இனியும் தொடர்ந்து அழிவு நிலையிலேயே அந்த நாட்டை வைத்திருக்கும்.

மற்றொருபுரம் அமெரிக்கா, இந்தப் போருக்குச் செலவழிக்கும் பணம் எக்கச்சக்கம். இதன் தேவை என்ன? அப்படி செலவழித்து என்ன சாதனையை அமெரிக்கா புரியப்போகிறது என்று அங்கு யாருமே கேட்பதில்லை. ஒபாமாவைத் தவிர!

இப்போது ஈராக்கில் நடக்கும் போரில் செலவழிக்கப்படும் பல நூறு பில்லியன் டாலர்களை அமெரிக்காவின் பொருளாதார மேம்பாட்டுக்கு செலவழிப்பேன் என்று சொல்லும் ஒரே ஆள் ஒபாமா. இந்தப் போர் நடந்திருக்கவே கூடாது என்று மனப்பூர்வமாகச் சொல்லும் ஒரே ஆள் ஒபாமா.

இந்தப் போரை ஆதரித்த ஒரே காரணத்துக்காகவே ஹிலாரி கிளிண்டன் பிரைமரியில் தோற்கடிக்கப்பட வேண்டியவர். இன்றுவரைகூட அவர், தான் செய்தது தவறு என்று ஒப்புக்கொள்ளவில்லை.

14 பதில்கள்

 1. —ஏற்கெனவே வியட்நாமில் சண்டைபோட்டு பல மாதங்கள் கைதியாக இருந்து திரும்பிய போர்நாயகன் ஜான் மெக்கெய்ன் —

  இதற்கும் மேற்சென்று, கைதிகளை விசாரிக்க water boarding எனப்படும் கொடூர சித்திரவதையும் சரியே என்று நேற்றுதான் வாக்களித்திருக்கிறார்.

  தான் பெற்ற துன்பம்… பெறுக இவ்வையகம்.

  நிற்க 🙂
  ——————————
  —இந்தப் போரை ஆதரித்த ஒரே காரணத்துக்காகவே ஹிலாரி கிளிண்டன் பிரைமரியில் தோற்கடிக்கப்பட வேண்டியவர்.—

  முதல் முறை செனேட்டராக இருந்தபோது, இராக் போருக்கு ஆதரவாக ஹில்லாரி க்ளின்டன் வாக்களித்திருந்தார். அதன் பிறகு, அந்தப் போருக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்குமாறு கோரியபோது எதிர்த்து வாக்களித்தார்.

  இராக் போருக்கு ஒப்புதல் கோரியபோது, ஒபாமா செனேட்டர் ஆகவில்லை. ‘நான் மட்டும் அப்பொழுது இருந்திருந்தால்…’ என்ற அனுமானத்தின் பேரிலேயே தற்போது எதிர்க்கிறார். அதாவது ‘நடந்த பின்’ தவறு என்று விளங்கியபிறகு, அதை சௌகரியமாக எதிர்க்கிறார்.

  ஹிலாரியும் தற்போது போருக்கு எதிராகத்தான் இருக்கிறார். Election Guide 2008 – Presidential Election – Politics

  இராக் போருக்கு எதிராக வாக்களித்திருக்கலாம்தான்; ஆனால், அன்றைய காலகட்டத்தில் (“உங்களின் சின்னஞ்சிறு குழந்தைகளை சாகடிக்க சதாம் ஹூசேன் weapons of mass destruction தயார் செய்து வைத்துள்ளார்” என்று ‘எல்லோருக்கும் நல்லவர்’ காலின் பவல், ஐநாவிற்கு பவர்பாயின்ட் போட்டு விளக்கிய காலம் அது) அரசியலில் தாக்குப் பிடிக்க அவர் செய்த சறுக்கல் அது.

  சரி… சறுக்கல்தானே… ஒத்துக்கொள்ளலாமே?!

  சென்ற ஜனாதிபதித் தேர்தலில் இவ்வாறு ‘முன்பு எப்பொழுதோ செய்த பிழைகளை’ ஒத்துக் கொண்ட ஜான் கெர்ரிக்கு, குடியரசு கட்சி நிகழ்த்தியதை, இப்போது ஒபாமா நிகழ்த்திக் காட்டியிருப்பார்!

  Flip flop என்று ஹவாய் செருப்பை அடித்துக் காட்டியது போல் graphic ஆக இல்லாவிட்டாலும், ‘ஸ்திரபுத்தி இல்லாதவர்’, ‘முன்னுக்குப் பின் முரணாக உளறுபவர்’ என்று பிரச்சாரம் திசை மாறிப்போயிருக்கும்.

  மேலும், ஜான் எட்வர்ட்ஸ் மட்டுமே பிரதான மாற்று வேட்பாளராக இருந்த ஆரம்ப பிரச்சாரத்தில் இராக் முக்கியமான பிரச்சினையாக அங்கம் வகிக்கவில்லை. அப்போது பொருளாதாரம் போன்றவை முன்னிலை பெற்றிருந்தது. எந்த ஜனநாயக் கட்சி வேட்பாளர் வந்தாலும், இராக் படை வாபஸ் நிச்சயம்.

  இதில் ஒபாமா என்ன? ஹில்லாரி என்ன? இருவருமே திரும்பப் பெறப் போகிறார்கள்.

  நிற்க 🙂
  ——————————
  —பின்விளைவுகள் எதைப்பற்றியும் சிந்திக்காமல் அமெரிக்கா ஆரம்பித்துவைத்த போர் இன்று ஒரு நாட்டை முற்றிலும் அழித்துள்ளது;—

  இப்படி இருக்கும் நாட்டை அம்போ என்று விட்டுவிட்டு ஓடி வந்துவிடுவது சரியா?

  உருப்படியான காவல்துறை கிடையாது; இராணுவப்பயிற்சியும் முழுமையாக நிறைவடையவில்லை; இங்கிலாந்து ஏற்கனவே பின்வாங்கிக் கொண்டிருக்கிறது.

  நார்வே போன்ற சிறிய அளவில் ஆதரவு தரும் நாடுகளைக் கூட அல்-க்வெய்தா தாக்குதல் நடத்தப் போகிறேன் என்று பயமுறுத்தி ஓட்டங்காட்டும் இன்றைய சூழலில், ‘துண்டக் காணோம்… துணியக் காணோம்’ என்று சுயநமாக சொந்த நாட்டிற்கு திரும்ப அழைப்பது சரிப்படாது.

  ப்ளாக்வாட்டர், உள்ளூர் அரசியல் போன்ற கொள்கைகளில் நிச்சயம் மாற்றம் தேவை. ஆனால், கொடுக்கிற நிதி ஒழுங்காக செலவழிக்கப்படுகிறதா? எல்லா கிராமங்களிலும் சென்றடைகிறதா? துருக்கி – குர்து சமாதான ஒப்பந்தம் முடிந்ததா? என்றெல்லாம் வேலையை முடிக்காமல் அவசரகதியில் ஒதுங்கக் கூடாது.

 2. இதற்கும் மேற்சென்று, கைதிகளை விசாரிக்க water boarding எனப்படும் கொடூர சித்திரவதையும் சரியே என்று நேற்றுதான் வாக்களித்திருக்கிறார்.

  தான் பெற்ற துன்பம்… பெறுக இவ்வையகம்.

  ***************

  இன்று சி.என்.என். லேரி கிங் லைவ் நிகழ்ச்சியில் தான் சித்திரவதையை எதிர்ப்பதாக மெக்கெய்ன் கூறினார்.

  காரணம் நாளை அமெரிக்கா ஏதேனும் போரில் கலந்து கொண்டு அமெரிக்க வீரர்கள் கைது செய்யப்பட்டால் அமெரிக்க வீரர்கள் சித்திரவதை செய்யப்படலாம். மாறாக அமெரிக்கா சித்திரவதையை எதிர்த்தால் மற்றவர்களும் இதனை நிராகரிப்பார்கள் என்றார் 🙂

 3. oops… நன்றி தமிழ்சசி

 4. ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம். சண்டை யாருடன்? போரின் ஒரு அணி அமெரிக்கர்கள்; எதிரணி யார்? We are winning militarily என்றால், தோற்பவர்கள் யார்?

 5. >>>>பொருளாதார மேம்பாட்டுக்கு செலவழிப்பேன் என்று சொல்லும் ஒரே ஆள் ஒபாமா.

  Ron Paul had been the *only* candidate who had been focussing on internal policies and has a *plan* to do so. Obama is all talks and is not experienced and very shallow in his speech and is no different from Kerry.

 6. One of the Scout policies is that is taught to young scouts is “Leave No residue”. ie., when you go out for camping, after winding down clean the camp place as before”.
  In a way no one can leave Iraq at the midst. US has a moral obligation to “finish” the task at least reasonably. .USA is currently in a mode of “path forward” approach rather than “blame that guy” approach. In this context, what McCain is probably right in what he says and can be trusted to do so.

  This is true even if Hillary or Obama comes to power. When they assume power there will be reality checks! If democrats come to power we can expect the return slightly earlier, even though they may they will pull out immediately.

  US voting public are quite annoyed with Bush in the Iraq war. But McCain will not get the blame as a republican candidate as he is considered more of ‘Anti Bush’, ‘anti-conservative’ group who have pushed for the war.

  The problem of the Middle east is nothing else but. it’s oil wealth. In a way, every country claims/ aspires/ dictate/ control to get a share this prosperity! They all do it in a way they can approach–diplomacy/ war/ dictate/ etc.,
  US’s forign policies have not changed btw democrat and republican very significantly… so Don’t expect a BIG change just because Obama (or Hillary) comes to power. It was merely an accident Obama was not in the senate at that time.

  one difference I have observed btw Clinon and Obama… Obama talks a lot without details. Hillary goes too detailed, whether one likes to hear or not.

 7. ஈராக்கை அப்படியே விட்டுவிட்டு வரலாமா என்ற கேள்வி, அடிப்படையில் அபத்தமானது என்று நினைக்கிறேன். ஒரு பெண்ணை வன்புணர்ந்தபின், ‘அய்யோ பாவம், அவளை என்ன செய்வது இனி, நானே அவளை மணம் செய்துகொள்கிறேன்’ என்ற பழைய தமிழ் சினிமா கருத்துருவாக்கத்துக்கு ஒப்பானது இது.

  அடிப்படையில் ஈராக்கை என்ன செய்வது என்று அமெரிக்கர்களுக்கு இன்றுவரை முழுமையான புரிதல் இல்லை. இனியும் வரப்போவதில்லை. இன்னும் கொஞ்சம் பணம், இன்னும் கொஞ்சம் ராணுவம், தீவிரவாதிகளை முடித்துவிடலாம் – என்றே வலதுசாரி அமெரிக்கர்கள் நினைக்கிறார்கள். இது ‘இன்னும் கொஞ்சம் பணம், இன்னும் கொஞ்சம் ராணுவம்’ ரகமான பிரச்னையே இல்லை.

  அமெரிக்கா எனும் நாட்டை அடிப்படையில் வெறுக்கும் மக்களுக்கு நடுவே போய் அமைதியைக் கொண்டுவருகிறேன் என்று சொல்லும் அமெரிக்கர்கள் அனைவரும் முட்டாள்கள். அமெரிக்கர்களை ஈராக்கியர்கள் யாருமே ‘விடுதலையை அளிக்கவந்த வீரர்கள்’ என்று பார்க்கவில்லை. இரண்டாம் உலகப்போர் பிரான்ஸ்போல ஈராக்கியர்கள் தம்மை இருகரம் குவித்து வரவேற்பார்கள் என்று அமெரிக்கர்கள் நினைத்தனர். இன்றுவரை ஏன் இது நடப்பதில்லை என்பதை அமெரிக்கர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. சதாம் ஹுசைன் வீழ்த்தப்பட்டபோது ஆடி ஆனந்தம் அடைந்த கூட்டத்தினர்கூட அமெரிக்காவை வாழ்த்துவதில்லை.

  அமெரிக்காவின் கருத்து, கத்திமுனையில் எந்த நாட்டிலும் குடியாட்சியைக் கொண்டுவந்துவிடலாம் என்பது. இதைப்போன்ற அபத்தம் எங்கும் கிடையாது. எந்த நாட்டுக்கும் குடியாட்சி வருவதற்கான சில அடிப்படைக் கட்டமைப்புகள் தேவை. பின்காலனித்துவ நாடுகள் பலவற்றில் இந்தக் கட்டமைப்பே இருக்கவில்லை. இந்தியா ஒருவிதத்தில் தப்பிப் பிழைத்தது என்றே சொல்வேன். அனைத்து பின்காலனிய நாடுகளிலும் இன்று நிலவும் குழப்பங்கள், அடிப்படைக் கட்டமைப்புகள் இல்லாமல் புகுத்தப்பட்ட பிரித்தானிய முறை யூனிட்டரி அரசுகளும் அரசியலமைப்புச் சட்டங்களுமே.

  அதேபோலவே அமெரிக்கா முன்வைக்கும் துப்பாக்கி முனை குடியாட்சி முறை. எனவே அமெரிக்கா ஈராக்கில் தொடர விரும்பினால், இன்றோ நாளையோ அல்ல, இன்னுமொரு நூற்றாண்டு போனாலும் அமைதி அங்கே வராது.

  அமெரிக்கா எண்ணெய்க்காக அல்ல, நல்ல எண்ணத்தோடு மட்டுமே ஈராக்குக்கு சென்றுள்ளது என்று நம்பும்போதே இதுதான் கதி. அடிநாதமாக இருப்பது எண்ணெய் அரசியல் என்று அனைவரும் நம்பினால் நிலைமை என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்.

 8. தியாகராஜன் – Scout analogy is pure rhetoric. To compare America to good scouts is another arrogant outlook.

  சாரணர்களின் முதல் விதி – தனியார் இடத்தில் போய்க் கூடாரம் போடக்கூடாது என்பது.

  குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கிறார்கள். அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள் என்று நம்பிக்கையிருக்கிறது. காயப்படுத்திய அமெரிக்காவைத் தொடர்ந்து விட்டால் அவர்களைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டுத்தான் வெளியே வருவார்கள் (ஹைய்யா, அங்க குழி தோண்டினா எண்ணை கிடைக்குமே என்றுகூட அமெரிக்கா நினைக்கும்).

 9. அமெரிக்கா ஈராக்கில் மூக்கை நுழைத்தது மாபெரும் தவறு. இப்போது விட்டுவிட்டு வந்துவிட்டால் என்ன செய்வார்கள் என்றெல்லாம் நொண்டிச்சாக்குச் சொல்லிக் கொண்டு அங்கேயே இருக்கக்கூடாது. தனியொரு நாடாக இத்தனை காலம் இருந்தவர்கள் அவர்களுக்கான வழியைத் தாமே தேடிக் கொள்வார்கள். இல்லாவிட்டால் ஐநா போன்ற சர்வதேச அமைப்புக்கள் உதவலாம்.

  அமெரிக்கா (புஷ் மற்றும் இதர போராதரவாளர்கள்) அங்கு செலவு செய்யும் பணத்தில் சிறு பங்கையாவது உள்நாட்டிலே கஷ்டப்படும் அதன் குடிகளின் நலனுக்காகச் செயல்படுத்தலாம்.

  ஒபாமா தான் போரை முதலிலேயே எதிர்த்தவர் என்பதால் அவர் தான் வெல்ல வேண்டும் என்னும் கருத்தில் உடன்பாடில்லை. அவர் எதிர்த்துப் பேசியது உண்மை. ஆனால் அப்போது அவர் செனட்டராய் இல்லை. செனட்டராய் இருந்த பலரும் போருக்கு ஆதரவான புகைமண்டலம் எழுப்பப்பட்டதில் குழம்பிப் போயிருக்கலாம். அப்படி இல்லாமல் இருந்திருந்தால், ஹில்லரி தெளிவாக எதிர்த்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இருப்பினும் அதன்பிறகு சரியான நிலைப்பாடுகளே எடுத்துள்ளார்.

  போரை எதிர்த்த ஒரே காரணத்துக்காக அதிபராய்த் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் அதற்குப் பொருத்தமானவர் டென்னிஸ் குசினிச் ஒருவரே!

  ஒபாமா ஒரு மாற்று அரசியலை முன்வைப்பது புதிய காற்றை வீசச்செய்வதாய் இருப்பது உண்மை. ஆனால், அது வெறும் வாய்ச்சவடால் இல்லை என்று நம்பப் பெறும் நம்பிக்கை வைக்க வேண்டியிருக்கிறது. அதில் எனக்குச் சற்றுத் தடுமாற்றமாக இருக்கிறது.

  இருப்பினும், பில் கிளிண்டனுக்கு அடுத்து வந்தவர்களில் அருமையாகப் பேசக் கூடியவர் என்ற அளவில் பராக் என்னைக் கவர்கிறார்.

 10. செல்வராஜ்: போரை எதிர்த்தவர் என்றால் x-ஐ அல்லது y-ஐ தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற வாதம் செல்லாது. ஏனெனில் இன்று பராக் ஒபாமாவைத் தவிர x-ம், y-ம் போட்டியில் இல்லை. இப்போது மொத்தம் மூன்று பேர்தான் போட்டியில் உள்ளனர். ஜான் மெக்கெய்ன் – ரிபப்ளிகன் கட்சி. ஒபாமா/கிளிண்டன் – டெமாக்ரடிக் கட்சி. டெமாக்ரடிக் வாக்காளர்களும் பிரதிநிதிகளும் ஒபாமாவா, கிளிண்டனா என்று முடிவு செய்யவேண்டும். அது ஒபாமாவாக இருக்கவேண்டும் என்பது என் முதல் ஆசை. அடுத்து ஒபாமாவா, மெக்கெய்னா என்று அமெரிக்காவே முழுதாக முடிவுசெய்யவேண்டும். அதுவும் ஒபாமாவாக இருந்தால் நல்லது என்பது என் ஆசை. மெக்கெய்ன் என்றால் இப்போதுள்ள ஆட்சியே , கொஞ்சம் கொஞ்சம் மாறுதல்களுடன் தொடரும். ஈராக்குக்கு இன்னும் கொஞ்சம் பணம், இன்னும் கொஞ்சம் ராணுவம் என்பார் மெக்கெய்ன். ஏற்கெனவே போர்வீரராக இருந்ததால் கமாண்டர்-இன்-சீஃப் என்ற தன் பட்டத்தை மார்பில் பதிந்து, இன்னமும் அகலமாக மார்பைத் திறந்து காண்பிப்பார். படைத்தலைவர்களுடன் பேசுவதுபோலவும் ஈராக்கில் படைவீரர்களுக்கு மத்தியில் ஒயிலாக நடந்துவருவதுபோலவும் ஃபோட்டோ எடுத்து ஊடகங்களில் பரப்புவார்கள்.

  ஈராக்கில் மேலும் பல தற்கொலைக் குண்டுகள் வெடிக்கும், சிறு குழந்தைகள் இறப்பார்கள், பள்ளி சென்று படிக்காத மற்றுமொரு தலைமுறை உருவாகும்.

  அமெரிக்கப் பொருளாதாரப் பிரச்னைகளை மறைக்க ‘உலகெங்கும் போர்’ என்ற ஓபியம் நன்கு பயன்படும்.

  உலக நன்மைக்கு மெக்கெய்ன் அமெரிக்க ஜனாதிபதியாக வரக்கூடாது என்றே எனக்குத் தோன்றுகிறது. ஹில்லரியா, ஒபாமாவா என்பதில் ஒபாமா என்னதான் அனுபவம் இல்லாதவர் என்றாலும் அமெரிக்க அரசியல் முறையில், அதுவும் ஜனாதிபதி பதவிக்கு, அனுபவத்தைவிட உண்மை பேசுபவர், நம்பத் தகுந்தவர், நியாயமானவர், கொள்கைப் பிடிப்புள்ளவர், உலக நாடுகளின் நியாயங்களைப் புரிந்துகொள்பவர் ஒருவரே தேவை என்று தோன்றுகிறது. அது ஒபாமாவிடம் மட்டுமே இப்போது இருப்பதாகத் தோன்றுகிறது.

  இந்தியாமாதிரி நாடாளுமன்ற அரசியல்முறையில் அனுபவம், ராஜதந்திரம், வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி, பசப்பு வார்த்தைகள் பேசி எப்படியாவது ஐந்தாண்டுகளை ஓட்டுவது ஆகியவை தேவையாக இருக்கலாம். அதுவும் சிறுபான்மை அரசுகளை நடத்துபவர்களுக்கு…. அந்தப் பிரச்னை அமெரிக்க அரசுமுறையில் கிடையாது.

 11. மதி மாறன் இந்த மாதிரி கட்டுரை எப்ப எழுத போறீங்க?

 12. //மற்றொருபுரம் அமெரிக்கா, இந்தப் போருக்குச் செலவழிக்கும் பணம் எக்கச்சக்கம். இதன் தேவை என்ன? அப்படி செலவழித்து என்ன சாதனையை அமெரிக்கா புரியப்போகிறது என்று அங்கு யாருமே கேட்பதில்லை. ஒபாமாவைத் தவிர!

  இப்போது ஈராக்கில் நடக்கும் போரில் செலவழிக்கப்படும் பல நூறு பில்லியன் டாலர்களை அமெரிக்காவின் பொருளாதார மேம்பாட்டுக்கு செலவழிப்பேன் என்று சொல்லும் ஒரே ஆள் ஒபாமா. இந்தப் போர் நடந்திருக்கவே கூடாது என்று மனப்பூர்வமாகச் சொல்லும் ஒரே ஆள் ஒபாமா.//

  ஒரே ஆள் ஒபாமா என்று சொல்வது முற்றிலும் தவறு. டென்னிஸ் குசினிச் / ரான் பால் இவர்கள் இருவரும் தான் முதலில் இருந்தே எதிர்த்தும், ஒபாமாவை விட இன்னும் ஆணித்தரமாகவும் எதிர்த்து வருகிறார்கள். உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், ஒபாமா இராக் போர் சமயத்தில் ஓட்டுப்போட காங்கிரஸில் இல்லை. அது அவருக்கு இப்போது சாதகமாக இருக்கிறது அவ்வளவுதான்.

 13. இது ஒபாமா பாக்கிஸ்தான் குறித்து கூறியது…

  “If we have actionable intelligence on al Qaeda operatives, including [Osama] bin Laden, and President Musharraf cannot act, then we should,” Obama said. “That’s just common sense.”

  இதற்கும் ஈராக்கில் பெருமளவில் ஆயுதங்கள் உள்ளதாக கூறி ஈராக் மீது புஷ் போர் தொடுத்ததற்கும் என்ன வேறுபாடு உள்ளது ?

  http://www.whitehouse.gov/news/releases/2002/10/20021007-8.html

  ஈராக்கின் உள்நாட்டு நிலவரம் தெரியாமல் புஷ் மாட்டிக்கொண்டதை போல பாக்கிஸ்தான் உள்நாட்டு நிலவரம் தெரியாமல் ஒபாமா உளறுகிறார் என்று தான் தோன்றுகிறது.

  ஈராக் போரை ஒபாமா ஆதரிக்கவில்லை என்றே வைத்துக் கொண்டாலும், ஒபாமாவின் பாக்கிஸ்தான் குறித்த கருத்து ஒபாமாவின் போர் நிலைப்பாடுகளை நமக்கு தெளிவுப்படுத்துகிறது.

  பி.கு. பாக்கிஸ்தானில் நிச்சயம் அமெரிக்கா அத்துமீறி நுழையாது என்ற நம்பிக்கை உள்ளது. ஈராக்கில் பட்ட அடி மறந்து விடுமா என்ன ?

 14. //தியாகராஜன் – Scout analogy is pure rhetoric. To compare America to good scouts is another arrogant outlook.//

  Venkat: Here I am talking about the perception US have… they ‘think’ they are true scouts! Obviously you nay not ‘share’ the same perception.

  The point I want to stress is whoever becomes the next President it is, getting out of Iraq is NOT going to be easy.

  //குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கிறார்கள். அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள் என்று நம்பிக்கையிருக்கிறது. காயப்படுத்திய அமெரிக்காவைத் தொடர்ந்து விட்டால்…//

  I think, when historically we see several countries with such rifts, the “solution” the “occupiers” have come up, with is, to DIVIDE the country. See examples of Palestine-Israel conflict, India-Pakistan conflicts. you will see eventually the split of Iraq as 2 regions each – one with shia dominant and the other with Sunni dominant. In such cases the “occupiers’ have always placed them as mediators also….

  However this may take lot of time… for now i strongly think, irrespective of the presidential outcome, US will continue the occupation for foreseeable time…whether we all like it or not.

  Obama will have a reality check when (if) he assumes power.He may have to sing different tunes at that time. [ we will know about Obama’s statement about Pakisthan. my bet is, US may not attack PAk, but for a different reason- it has NO oil wealth].

  I have not observed a drastic shift in US foreign policies whenever there is a change in govt.
  Since the current polls suggest the masses ‘want” to get out of Iraq, the candidates likely are all playing the same tune.. at least I want to acknowledge that McCain speaks reasonable truth here!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: