கட்டம் கட்டப்பட்ட ஒபாமா

அமெரிக்கா எவ்வாறு வாக்களித்துள்ளது? நன்றி: National map of McCain-Obama presidential voting <em>by county</em> | Top of the Ticket | Los Angeles Times எந்தப் பகுதிகள் ஒபாமா ஆதரவு? எந்தப் பகுதிகளில் மெகயின் ஆதரவு? நன்றி: Obamaland and McCainland

ஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

ஒபாமாவின் வெற்றி மற்ற அமெரிக்க அதிபர் போட்டிகளோடு ஒப்பிட்டால் எவ்வாறு வேறுபடுகிறது? தேர்வர்கள் பேரவையில் எவ்வளவு வித்தியாசம்? வாக்கு எண்ணிக்கையில் எத்தனை விகிதம் மாற்றம் அடைந்துள்ளது? 92 க்ளின்டன், 84 ரேகன், 60 கென்னடி, 00 புஷ்ஷோடு ஒப்பிட்டால் – எத்தகைய வெற்றி நன்றி: A Blowout? No, but a Clear-Cut Win, for a Change – NYTimes.com

ஒபாமா ஏன் வெற்றி பெற்றார்? – கருத்துத் தொகுப்பு

(தொடர்புள்ள விருந்தினர் இடுகை: மாலன்: பராக் ஒபாமா: கனவுகளுக்கும் நிஜங்களுக்கும் இடையில்…) மணி மு. மணிவண்ணன் ஒபாமா வெற்றி பெற்றால் அதற்குக் காரணம் அவர் கருப்பர் என்பதனால் அல்ல. அவர் கருப்பர் என்பதால் சிலர் அவருக்கு வாக்களிக்கவில்லை. அதனால் அவர் தோற்றுவிடவில்லை. அவர் கருப்பர் என்பதால் மட்டும் சிலர் வாக்களிக்கூடும். அதனால் மட்டும் அவர் வெல்லவில்லை. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலான பண்பாடுகள் என்று கொண்டாடும் சீன, எகிப்திய, இந்திய நாடுகள் சாதிக்க முடியாததை வெறும் இருநூறு ஆண்டுகளுக்கு [...]

சினிமாப் படங்களும் வாக்குப்பெட்டியும்

வட கரோலினா வாக்குச்சீட்டு: குளறுபடியா?

பதிவர் வாசன் ஓட்டு போட்ட: வாக்குசீட்டு எட்டாண்டுகளுக்கு முன்பு ஆல் கோருக்கு வாக்களித்தால் ஜார்ஜ் புஷ்ஷுக்கு செல்லுமாறு கோடு போட்ட ஃப்ளோரிடா வாக்குச்சீட்டு வெகு பிரபலம். இவ்வளவு காலம் கழிந்தும் வடக்கு கரோலினா அது போன்ற குழப்பமான வாக்குச்சீட்டுகளை வடிவமைத்திருகிறது. ஜனாதிபதி தேர்தல், மேல்சபை தேர்தல், எம்.பி. தேர்தல், எம்.எல்.ஏ. தேர்தல், நீதியரசர் தேர்தல் என்று ஒவ்வொன்றாக வாக்களித்துக் கொண்டிராமல் சட்டு புட்டென்று ‘என்னுடைய வாக்கு குடியரசுக் கட்சி‘க்கு என்று முத்திரை குத்துமாறு வாக்குச்சீட்டுகளை அமைப்பது வழக்கம். [...]

போடுங்கம்மா வோட்டு!

வாக்கு போட்டாச்சா? நன்றி: GOOD » Project 001: If You Can Read This…»

செனேற் சபையும் காங்கிரஸ் உறுப்பினர்களும் – அமெரிக்க தேர்தல் களம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் எவர் ஜெயிப்பார் என்பது இழுபறியாக இருந்தாலும், செனேட்டிலும் ஹவுஸ் ஆஃப் ரெப்ரசென்டேடிவ்ஸ் எனப்படும் காங்கிரசிலும் சர்வ நிச்சயமாய் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை வெற்றியை தக்கவைத்து, வித்தியாசத்தையும் பெருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால், மெகயின் இதை தீவிரமாக முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கார்ல் ரோவ் உட்பட பலரும் வலியுறுத்துகின்றனர். ஏன் குடியரசுக் கட்சி தோற்கிறது? 1. தற்போதைய குடியரசுக் கட்சி தலைவர் ஜாஜ் டபிள்யூ புஷ் 2. ஜனாதிபதிக்குத்தான் ஒபாமாவுக்கு வாக்களிக்க [...]

‘நாட்டுக்குப் பின் நீ’ – மெகயின் புகைப்படங்கள்

நன்றி: Stephen Crowley: McCain – Digital Journalist

அமெரிக்க அதிபர் தேர்தல் சூழலும் வெற்றி பெறும் வித்தைகளும் – மூஸ் ஹன்டர்

3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது? மெக்கெய்னுடைய ஒரேநிலைப்பாடு எப்பாடுபட்டாவது அதிபர் ஆவது. அவருக்கு இதுவே கடைசி வாய்ப்பு. மெக்கெய்னைப் பற்றி அதிகமாக அறியாத காலத்தில், அதாவது 2000 ஆம் ஆண்டுத் தேர்தலின்போது, அவர் மீது நல்ல அபிப்ராயம் இருந்தது. இப்படிப்பட்ட ஒரு அனுபவமிக்க மிதவாதியைப் புறக்கணித்து கத்துக்குட்டித் தீவிரவாதி புஷ்ஷை தேர்ந்தெடுத்திருக்கிறார்களே என்று அவர் மீது பரிதாபம் கூட இருந்தது. மெக்கெய்ன்-ஃபெய்ன்கோல்ட் தேர்தல் நிதி சட்டம், மெக்கெய்ன் – கென்னடி குடியேற்றச் [...]

அமெரிக்காவில் தேர்தல் தில்லுமுல்லு – மெகயினை வெல்லவைக்கும் சூட்சுமம்

அமெரிக்க அதிபர் தேர்தல் 50 மாகாணங்களிலும் நடந்தாலும் சில இடங்கள் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக அறியப்படுகிறது. எடுத்துக்காட்டாக, நியு யார்க் மாநிலத்தில் ஜான் மெகயின் வெல்வதற்கு வாய்ப்பே கிடையாது. அதே போல் அரிசோனாவிலோ டெக்சாஸிலோ பராக் ஒபாமா ஜெயிப்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. ஆனால், இரு கட்சி வேட்பாளர்களும் சற்றேறக்குறைய சமமாக இருக்கும் மாநிலங்களில் பிரச்சாரம் சூடாக நடக்கிறது. அவற்றில் ஆறு மாநிலத்தில் வாக்காளர் அடையாள அட்டை தருவதற்கு முரண்டு பிடித்திருக்கிறார்கள். இளம் ரத்தத்தைக் கவர்வதில் ஒபாமா [...]

அமெரிக்காவில் இனவெறியா – ஒபாமா செய்திகள்

மேற்கு வர்ஜினியாவில் தேர்தல் நடந்து முடிந்தது. அது தொடர்பான விழியம்: நன்றி: Obama Faces Racism in West Virginia Video – Metacafe வெஸ்ட் வெர்ஜீனியாவில் எதிர்பார்த்தவாறே ஹில்லரி எளிதில் வென்றார். ஆனால், ஹில்லரி க்ளின்டனை விரும்பும் வெள்ளையின வாக்காளர்களைக் கவர்வதற்காக ஜான் எட்வர்ட்ஸை தன் பக்கம் இழுத்துள்ளார் பராக் ஒபாமா. லத்தீனோ வாக்கு தேவைப்படும் காலம் கடந்தபின் கிடைத்த ரிச்சர்ட்ஸன் ஆதரவு மாதிரி பாட்டாளி வர்க்க வோட்டுகள் தேவைப்படும் நேரம் கழிந்தபின்னே ஆற அமர [...]

Follow

Get every new post delivered to your Inbox.