அமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்

அமெரிக்காவின் அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமா அவர்கள் தேசிய பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவுள்ள தனது குழுவை அறிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்பதை தீர்மானிக்க நடைபெற்ற தேர்தலில், தம்மை எதிர்த்து போட்டியிட்ட ஹில்லரி கிளிண்டனை அரசுத்துறைச் செயலராக அவர் நியமித்துள்ளார்.
செனட்டர் ஹில்லரி கிளிண்டன் பெரும் ஆளுமை கொண்டவர் என்று ஒபாமா கூறியுள்ளார்.
தற்போது இராணுவ அமைச்சராக உள்ள ராபர்ட் கேட்ஸ் அவர்களை தொடர்ந்து பணியில் இருக்குமாறு ஒபாமா வேண்டியுள்ளார்.
நாட்டில் நிலவிவரும் நிதி நெருக்கடி போலவே, நாட்டின் [...]

ஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்

1. அமெரிக்காவின் அனைத்து பத்திரிகைகளின் முகப்பை பார்க்க வேண்டுமா? ஒபாமா அதிபராக தேர்ந்தெடுத்த அன்று வெளியான தினசரிகளின் தலைப்புச் செய்தி எவ்வாறு இருந்தது? :: 672 Obama Headlines – Both Browsable and Readable | FlowingData
இங்கே சென்றால் தொழில்நுட்பத்தின் உதவியால், மிக சுளுவாக அனைத்தையும் ஒரே இடத்தில் தரிசிக்கலாம்.

2. தலைப்பு செய்தி ஆக்குவது சாதாரண நாளிதழ்கள் செய்வது. எத்தனை பேர் புதிய அதிபருக்கு உண்டான முக்கியத்துவத்தை தரவில்லை? எந்த பத்திரிகைகள் பராக் ஒபாமா ஜனாதிபதி [...]

ஜனாதிபதி பராக் ஒபாமா – வாழ்த்துகள்

வட கரோலினா வாக்குச்சீட்டு: குளறுபடியா?

பதிவர் வாசன் ஓட்டு போட்ட: வாக்குசீட்டு
எட்டாண்டுகளுக்கு முன்பு ஆல் கோருக்கு வாக்களித்தால் ஜார்ஜ் புஷ்ஷுக்கு செல்லுமாறு கோடு போட்ட ஃப்ளோரிடா வாக்குச்சீட்டு வெகு பிரபலம். இவ்வளவு காலம் கழிந்தும் வடக்கு கரோலினா அது போன்ற குழப்பமான வாக்குச்சீட்டுகளை வடிவமைத்திருகிறது.
ஜனாதிபதி தேர்தல், மேல்சபை தேர்தல், எம்.பி. தேர்தல், எம்.எல்.ஏ. தேர்தல், நீதியரசர் தேர்தல் என்று ஒவ்வொன்றாக வாக்களித்துக் கொண்டிராமல் சட்டு புட்டென்று ‘என்னுடைய வாக்கு குடியரசுக் கட்சி‘க்கு என்று முத்திரை குத்துமாறு வாக்குச்சீட்டுகளை அமைப்பது வழக்கம்.
அதே போல்தான் வட [...]

இன்று இரவு மெகயின் ஏன் ஜெயிக்கக் கூடும்?

முதலில் வீடியோ பார்த்துவிடவும்: (இறுதி வரை பார்க்கவும்)

அமெரிக்காவில் ஈகோ முக்கியம். தோல்வி என்பது அகராதியில் கூடாது. இராக்கில் பின்வாங்கும் ஒபாமாவுக்கு வாக்கா? அல்லது வெற்றித் திருமகன் ஜான் மெகயினா?
போரில் சிறைபிடிக்கப்பட்டாலும் உள்ளந்தளராத உத்தமர் மெகயின் என்பது முதற் காரணம்.
அடுத்த வீடியோவும் அமெரிக்கர்களின் மனவோட்டத்தை சொல்கிறது:

நீங்கள் சம்பாதிக்கும் ஓரணாவில் இருந்து அரையணாவைப் பிடுங்கி, பிச்சையெடுப்பவருக்கு தரும் ஒபாமாவுக்கு ஓட்டா? அள்ளது சோம்பேறிகளை உழைத்து சம்பாதித்து முன்னேறச் சொல்லும் [...]

அரசியல் ஆழிப்பேரலை: மணி மு. மணிவண்ணன்

பொருளாதார வீழ்ச்சி.
பெட்ரோல் விலை எகிறல்.
ஜெனரல் மோட்டார்ஸ் தடுமாற்றம்.
அமெரிக்காவின் எதிரிகளின் ஏற்றம்.
மத்திய கிழக்கில் அமெரிக்கப் படையினரின் வலுவின்மை.
வருங்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின்மை.
அமெரிக்க அதிபரின் மீது ஏமாற்றம்.

இத்தனையும் இருந்தும் தேர்தல் நாள்வரை ஆளுங்கட்சியின் வேட்பாளர் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சியின் வேட்பாளர் மக்களின் முழுநம்பிக்கையைப் பெறவில்லை.
இது மெக்கேன் – ஒபாமா போட்டியைப் பற்றிய செய்தியல்ல.
28 ஆண்டுகளுக்கு முன்னர், 1980இல் அதிபர் கார்ட்டர் – ஆளுநர் ரேகன் போட்டியின் கடைசிவாரச் செய்தி.
“நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததை விட இப்போது நல்ல நிலையில் [...]

தமிழ்ப்பதிவுகளில் அமெரிக்க அதிபர் தேர்தல்

ஒரு அகதியின் நாட்குறிப்பு
அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்படும் சாத்தியக்கூறுகள் மிகப்பிரகாசம் – பேராசிரியர் எரிக் அஸ்லானர் நேர்காணல் :: வீரகேசரி நாளேடு – 10/27
கேள்வி: இலங்கை போன்ற நாடுகளில் கடைசி நேர அனுதாப அலைகள் தேர்தல் முடிவில் தாக்கம் செலுத்துவது வரலாற்றில் நிருபணமாகியுள்ளது அந்தவகையில் தற்போது பின்னிலையிருக்கும் மக்கெய்னுக்கு சாதகமாக ஏதேனும் திடீர் திருப்பங்கள் ஏற்படச்சாத்தியமுள்ளதா?
:::
கேள்வி: இந்தத்தேர்தலுக்கு முன்னர் அதிகம் அறியப்படாத பராக் ஒபாமாவின் எழுச்சிக்கு காரணம் யாது?
பதில்:

ஒபாமா ஒரு ரொக் இசைக்கலைஞர் [...]

நீயும் பொம்மை நானும் பொம்மை நினைச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை

‘படிக்கிற வயசில் என்னடா அரசியல்?’ என்பதுதான் நான் கேட்டு வளர்ந்த சூழலில் புழங்கிய நிலை. அமெரிக்காவில் நிலைமை நேர் எதிர்.
என்னுடைய எட்டு வயது மகள் ப்ரைமரியிலேயே வாக்களித்தாள். இந்தப் பதிவு தொடங்கப்பட்ட ஃபெப்ரவரியில் எழுதியதில் இருந்து:

எனக்கு நேரடியாகத் தெரிந்த, பழக்கமான அமெரிக்கர்களிடம் ‘உங்க வோட்டு யாருக்கு’ என்று வினவியதில் எவரும் நேரடியாக பதில் சொல்லாமல் நழுவி விட்டார்கள். கட் அன்ட் ரைட்டாக மகளிடமிருந்து மட்டும் பதில் வந்தது.
பள்ளியில் ஒவ்வொரு வேட்பாளரைக் குறித்தும் சிறு அறிமுகம் கொடுத்த வாத்தியார், [...]

பணம் படைத்தவன்

விவரிப்பு:

அமெரிக்காவின் முக்கிய தொலைக்காட்சி எல்லாவற்றிலும் பராக் ஒபாமாவின் அரை மணி நேர விளம்பரம் ஒளிபரப்பாகியது.
பெரும்பாலான அமெரிக்கர்கள் டிவியின் முன் உட்காரும் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்புவதற்காக சற்றேறக்குறைய ஐந்து மில்லியன் டாலரை ஒபாமா கரைத்துள்ளார்.

வியப்பு:

சன், ஜெயா, மக்கள், கலைஞர் எல்லாவற்றிலும் ஒரு கட்சி ஒரே சமயத்தில் பிரச்சாரம் செய்யும் சூழல் இல்லாத தமிழ்நாடு.
எதிராளிக்கு சம இடம் தராமல், தனியாளாக பிரச்சார போதனை செய்யும் அமெரிக்க நிலை.
பொது நிதியை மட்டும் பயன்படுத்தி மெகயினோடு சமமாக மோதுவேன் என்னும் வாக்குறுதி [...]

தீவிரவாதி ஒபாமாவின் முகமூடி – அமேசான்.காம்

செய்தி & புகைப்படம் நன்றி: லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ்

பேலின் அக்டோபர் எட்டாம் தேதி ஃப்ளோரிடா மாநிலத்தில் செய்த பிரச்சாரத்தின் போது பயங்கரவாதிகளோடு தொடர்பு வைத்திருக்கும் ஒருவரை நாட்டை நடத்திச் செல்லும் பதவியில் அமர்த்துவதா என்று அலறியிருக்கிறார். இவர் பேச்சைக் கேட்ட சில அறிவிலி அமெரிக்கர்கள் ஒரு நிருபர் கேட்ட “ஒபாமா ஒரு பயங்கரவாதி என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்ற கேள்விக்கு “இருக்கலாம்” என்றும் “அவர் தீவிரவாதிதான்” என்றும் கூறியிருக்கிறார்கள்.

அமெரிக்காவில் தேர்தல் பொய்கள் :: முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை
குடியரசுக் [...]

மணிக் கூண்டு சிவாவின் கேள்விக்கு பதில்: கறுப்பு/வெள்ளை: ஏன் மெகயின்?

மணிக் கூண்டு: அமெரிக்காவின் நிறப்பற்று!!! … | மணிக் கூண்டு: ஓபாமாவிற்காக ஓர் நாள்!
நான் வாக்குகள் சேகரிக்க சென்ற பொழுது என் சட்டையில் ஓபாமா பேட்ஜை பார்த்த பொழுது ஓரு சில வெள்ளைகாரர்கள் கதவை சாத்திக் கொண்டார்கள். இதில் துளிக்கூட பொய் இல்லை! என்னைக் கண்டு கதவை சாத்திக் கொண்டார்கள் என்று சொல்லவில்லை! அதாவது நான் ஓபாமா ஆதரவாளன் என்று தெரிந்த காரணத்தாலும், நான் வைத்து இருந்த ஓபாமா சுவர் விளம்பரங்களை பார்த்தவுடன் அதனை நாகரீகமாக [...]

ஜார்ஜ் புஷ்ஷின் முன்னாள் பிரதம மந்திரி ஒபாமாவை ஆதரிக்கிறார்

அன்று:

நேற்று:

இன்று:

ஆசைப்பட்டதோ?

மேலும் விவரங்களுக்கு:
1. BBC NEWS | Americas | Colin Powell backs Barack Obama
2. Powell says he will vote for Obama – First Read – msnbc.com
“when I look at all of this… But which is the president that we need now… I come to the conclusion … because of who he is, he has both style and [...]

அடுத்த அமெரிக்க அதிபருக்கு நிச்சயம் ஆப்பு – சத்யா

5. ஒபாமா 98% ஜனநாயகக் கட்சியின் கொறடா/வழிகாட்டலின் படி செனேட்டில் வாக்களித்திருக்கிறார். ஜான் மகயின் 90% புஷ்ஷோடு ஒத்துப் போய் இருக்கிறார். இவர்களுக்கு ‘மாற்றம்’ தாரக மந்திரத்தையும் ‘மேவ்ரிக்’ பட்டத்தையும் வைத்துக் கொள்ள என்ன தகுதி உள்ளது? Bipartisan என்று முழங்கினாலும் செய்கையில் அதை நிரூபிக்காதவர்களின் அடுத்த நான்கு வருடங்கள் புஷ்ஷோடு ஒப்பிட்டால் எவ்வாறு வேறுபடும்?
நூறு சதவிகிதம் ஒத்துக்கொள்கிறேன். இருவருக்கும் ஒரு பெரும் வித்தியாசம் இருப்பதாக தோன்றவில்லை பார்க்க ‘என் ஓட்டு’ கேள்வியில்.
அரசியலில் வாய்ப்பந்தல் போடுபது எல்லாமே [...]

யாரைப் பார்த்தால் அரசர் போல் இருக்கிறது?

ரேகன் போன்ற சினிமா நடிகர்களின் கவர்ச்சியும் உயரமும் கென்னடியின் ஹீரோ அடையாளமும் க்ளின்டனின் காந்த உருவமும் அவர்களின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கும்.
பெரும்பாலான அமெரிக்கர்கள் ஆஜானுபாகுவானவர்கள். அவர்களுடன் இரயிலில் பயணம் செய்யும்போது என்னைப் போன்ற போஷாக்கான இந்தியர்களே ஸ்னோ வைட்டின் சித்திரக்குள்ளர் போல் காட்சியளிப்போம்.
இப்படிப்பட்டவர்கள் பராக் ஒபாமாவின் ஒடிசலான தோற்றத்தோடு அடையாளம் காணமுடியுமா?
அந்தப் பக்கம் சங்கர்தயாள் சர்மா போல் படிகளில் ஏறி இறங்க சிரம்ப்படும் போர்க்காயங்களோடு வாழும் ஜான் மெகயின். அவரை இளைய தலைமுறை எவ்வாறு பார்க்கும்?
சதா [...]

தலையைக் குனிதலும் முதுகைத் திருப்பிக் கொள்ளுதலும்

குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மகயினுக்கும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமாவுக்கும் இடையே இரண்டாவது தருக்கம். இதுவும் நடந்து முடிந்த முதல் விவாதம் போலவே இருந்தது.
அதிரடி மச்சான் கார்னர்:
மெக்கயின்: “நீங்கள் வீடு வாங்கும்போது வீட்டின் விலை இரண்டு லட்சம். தற்போதைய பொருளாதாரச் சரிவினால் வீட்டின் மதிப்பு ஒரு லட்சமாகக் குறைந்துள்ளது. நீங்கள் ஒரு லட்சம் மட்டும் கடனாகக் கட்ட ஆரம்பித்தால் போதுமானது”
என் கருத்து: இதற்கு எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும்? இதனால் வீட்டு மனைகளின் விற்பனை [...]

அமெரிக்கா எங்கு பின்தங்கி இருக்கிறது? – வெங்கட்

4. வெற்றிபெற்ற அடுத்த அமெரிக்க ஜனாதிபதி உங்களை ஆலோசகராக நியமிக்கிறார். என்ன அட்வைஸ் கொடுப்பீர்கள்?
அமெரிக்காவின் உள்விவகாரங்களிலெல்லாம் என்னை ஆலோசனை கேட்கமாட்டார்கள் என்பது சர்வநிச்சயம். எனவே பொதுவில் அமெரிக்காவின் நடப்பு குறித்தும் உலகில் அமெரிக்காவின் பங்கு குறித்துக் கொஞ்சம் சொல்லலாம். இறுதியாக அறிவியல் தொழில் நுட்ப ஆலோசனை கொஞ்சம்.
அரசியல், மதம், ராணுவம், அறிவியலில் பொதுவாக அரை நூற்றாண்டுக்கு முந்தைய சிந்தனையில் தேங்கிப் போகிறார்கள் அமெரிக்கர்கள் என்ற வருத்தம் கலந்த மதிப்பீடு இருக்கிறது எனக்கு.
யுத்தங்கள்
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான உலகில் பரவலாக [...]

வலைப்பதிவுகளில் ‘அமெரிக்க அதிபர் தேர்தல்’

தமிழ்ப்பதிவுகளில் சமீபத்திய குடியரசு, ஜனநாயக் கட்சி மாநாடுகள்; ஒபாமா, மெகெயின், பைடன், பேலின் குறித்த பார்வைகள்; ஆகியவற்றின் தொகுப்பு. விடுபட்டதை சொல்லவும்.
1. டெமாக்ரடிக் நேஷனல் கண்வென்ஷுன், டென்வர்- ஒரு நேரடி ரிப்போர்ட் :: ராஜா சொக்கலிங்கம்
நான் அறிவாலயம் சென்றிருக்கிறேன். அறிவாலயத்தை சுற்றி என்ன என்ன பார்த்தேனோ அது எல்லாவற்றையும் இங்கும் பார்க்கமுடிந்தது. உதாரணமாக, அறிவாலயத்தில் கலைஞரின் படம், அவர் எழுதிய புத்தகம், அவரை பற்றிய புத்தகம், வாழ்க கோஷங்கள், தி.மு.க கொடி, கட்சி சார்ந்த பொருள்கள் விற்கும் [...]

ரஜினிக்குப் பின் கமல்: டைனோக்குப் பின் யாரு? – கேள்வி – பதில்

முதல் போணியாக வந்தவர் டைனோபாய். (பார்க்க: Dyno Buoyயிடம் சில கேள்விகள் | இந்தியர்களுக்கும் இந்தியாவுக்கும் யார் நல்லது?) திமுக செய்தி ஒன்று போட்டால், உடனடியாக அதிமுக தகவல் வரவேண்டும் என்பது விதி. அமெரிக்கர்கள் ஏன் குடியரசுக் கட்சி விசுவாசிகளாக இருக்கிறார்கள் என்பதை டைனோ சொன்னார்.
ரஜினிக்குப் பின் கமலாக ஸ்ரீகாந்த் மீனாக்ஷி. (வழக்கம் போல் கலர் கோடிங், தடிமன்படுத்துதல் எல்லாம் என்னால் ஆன உபகாரம்)
முழுக்க முழுக்க மெகயின் சார்பு முழக்கத்திற்குப் பிறகு தீவிர ஒபாமாப் பற்றாளரிடம் என்னுடைய [...]