ஒபாமா வெற்றி: கருத்துப்படங்கள்

ஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

ஒபாமாவின் வெற்றி மற்ற அமெரிக்க அதிபர் போட்டிகளோடு ஒப்பிட்டால் எவ்வாறு வேறுபடுகிறது? தேர்வர்கள் பேரவையில் எவ்வளவு வித்தியாசம்? வாக்கு எண்ணிக்கையில் எத்தனை விகிதம் மாற்றம் அடைந்துள்ளது? 92 க்ளின்டன், 84 ரேகன், 60 கென்னடி, 00 புஷ்ஷோடு ஒப்பிட்டால் – எத்தகைய வெற்றி நன்றி: A Blowout? No, but a Clear-Cut Win, for a Change – NYTimes.com

அடுத்தாத்து ஆல்பர்ட் – மூக்கு சுந்தர்

* ஒபாமாவுக்கு கருத்துக்கணிப்பில் இருக்கும் இதே அளவு செல்வாக்கு வேறு ஒரு வெள்ளை இனத்து ஜனநாயகக்கட்சி அதிபர் வேட்பாளருக்கு இருந்திருந்தால் தேர்தல் முடிந்தது என்று பலகாலம் முன்னரே முடிவுகட்டி இருப்பார்ர்கள். மெக்கெய்ன் ஆதரவாளர்கள் இன்னமும் துள்ளிக் கொண்டு இருப்பதற்கும், நம்பிக்கை இழக்காமல் பேசிக்கொண்டிருப்பதற்கும் ஒபாமவின் இன அடையாளமே காரணம். * இந்தத் தேர்தலில் கட்சி சார்புள்ளவர்களை விட கட்சி சார்பற்றவர்களே முடிவை தீர்மானிக்கும் காரணிகளாகிறார்கள். அடுத்ததாக இளைய தலைமுறையினர் மற்றும் – முதன் முறை ஓட்டளிப்பவர்கள் * [...]

அமெரிக்க தேர்தல்: வெளியுறவுக் கொள்கை

ராஜேஷ் சந்திரா: 1. இராக்: ஒபாமா வந்தாலும் உடனடியாக வாபஸ் ஆரம்பித்துவிடுமா? அங்கு நிலை எப்படி இருக்கிறது? குர்துக்கள் தனி நாடாக்கிக் கொள்வார்களா? மெகயின் அதிபரானால் ஒபாமாவின் நிலையில் இருந்து எவ்வாறு சூழல் மாறுபடும்? ஆருடம் ப்ளீஸ்! 1a) ஒபமா வந்தால் : வாபஸ் ஆரம்பிக்காது. பிரச்சாரத்தில் இதுவரை ஒபாமா தெளிவாகத் தன் நிலையை விளக்கவில்லை. விரைவில் வெளியேறுவோம் என முழங்கி தென் மாகாணங்களை அவர் இழக்கத் தயாராக இல்லை (முக்கியமாக இராணுவத் தலைமையை). 1983-ல் லெபனானை [...]

அரசியல் ஆழிப்பேரலை: மணி மு. மணிவண்ணன்

பொருளாதார வீழ்ச்சி. பெட்ரோல் விலை எகிறல். ஜெனரல் மோட்டார்ஸ் தடுமாற்றம். அமெரிக்காவின் எதிரிகளின் ஏற்றம். மத்திய கிழக்கில் அமெரிக்கப் படையினரின் வலுவின்மை. வருங்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின்மை. அமெரிக்க அதிபரின் மீது ஏமாற்றம். இத்தனையும் இருந்தும் தேர்தல் நாள்வரை ஆளுங்கட்சியின் வேட்பாளர் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சியின் வேட்பாளர் மக்களின் முழுநம்பிக்கையைப் பெறவில்லை. இது மெக்கேன் – ஒபாமா போட்டியைப் பற்றிய செய்தியல்ல. 28 ஆண்டுகளுக்கு முன்னர், 1980இல் அதிபர் கார்ட்டர் – ஆளுநர் ரேகன் போட்டியின் கடைசிவாரச் [...]

துக்கடா: கருத்து – குசும்பு – கும்மாங்குத்து

W & McCain

‘கரிசல்’ சன்னாசியின் ஜார்ஜ் W. புஷ் வாழ்க்கைப்படம் குறித்த திரை விமர்சனம்: டபிள்யூ கருத்துப் படம்: கொசுறு படம்:

சொ. சங்கரபாண்டி – இந்த வார சிறப்பு விருந்தினர்

1. ஒபாமாவா? மெகெயினா? இரண்டும் பேரும் சரியில்லை என்று தப்பிக்கக்கூடாது. இருப்பதற்குள் எவர் ஒகே? ஏன்? சந்தேகமேயில்லாமல் ஓபாமாதான். பல காரணங்கள் உண்டு, எனக்கு மிக முக்கியமாகப் பட்ட இரண்டு மட்டும் இங்கே (பெருவாரியான அமெரிக்க மக்கள் வாக்களிப்பதற்கு இவை அடிப்படையாக இருக்காது என்றும் கருதுகிறேன்) : (அ) அமெரிக்காவின் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப் படவேண்டும் அல்லது யார் தேர்ந்தெடுக்கப் படக் கூடாது என்பதில் அமெரிக்க நலன் மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த உலக நலனும் அடங்கியிருக்கிறது. சோவியத் [...]

அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் தமிழக ஜனநாயகம் எவ்வளவோ தேவலாம் – மூஸ் ஹன்ட்டர்

5. தமிழகச் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒப்பிட முடியுமா? வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை? எவ்வாறு வேறுபடுகிறது? இந்த கேள்வி விலாவரியாக விவாதிக்கத் தகுந்தது. கோர்வையாக என்னால் பதிலளிக்க முடியுமா என்று தெரியவில்லை. முதலில், தமிழகச் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒப்பிட முடியுமா என்று தெரியவில்லை. வேண்டுமானால் பொதுவாக இந்திய, [...]

அமெரிக்க அதிபரின் தலையாய கடமை

அமெரிக்காவில்: எவருக்கு வாக்களிக்க உரிமை இருக்கிறது (ஆண்கள், பெண்கள், கறுப்பர், குடிபுகுந்தோர், குற்றம் புரிந்தோர் போன்ற பிரிவுகளில்) என்று யார் அறிவுறுத்துகிறார்கள்? எது சுதந்திரம் (துப்பாக்கி வைத்துக் கொள்ளுதல், கருவைத் தக்க வைத்துக் கொள்ளுதல் அல்லது சுயமாக நிர்ணயம் செய்வது போன்ற பிரச்சினைகளில்) என்று எவர் முடிவெடுக்கிறார்கள்? சமூக நீதியை (சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு, ஆண்/பெண் ஏற்றத்தாழ்வு, வந்தேறிகளுக்கும் குடிமகன்களுக்கும் இடையே வித்தியாசங்களை) பரிபாலிப்பவர் யார்? இன்ன பிற (சுற்றுச்சூழல் மாசு, புகை பிடித்தல், நோய்க்கான மருந்து போன்றவற்றில் [...]

அமெரிக்க அதிபர் தேர்தல் சூழலும் வெற்றி பெறும் வித்தைகளும் – மூஸ் ஹன்டர்

3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது? மெக்கெய்னுடைய ஒரேநிலைப்பாடு எப்பாடுபட்டாவது அதிபர் ஆவது. அவருக்கு இதுவே கடைசி வாய்ப்பு. மெக்கெய்னைப் பற்றி அதிகமாக அறியாத காலத்தில், அதாவது 2000 ஆம் ஆண்டுத் தேர்தலின்போது, அவர் மீது நல்ல அபிப்ராயம் இருந்தது. இப்படிப்பட்ட ஒரு அனுபவமிக்க மிதவாதியைப் புறக்கணித்து கத்துக்குட்டித் தீவிரவாதி புஷ்ஷை தேர்ந்தெடுத்திருக்கிறார்களே என்று அவர் மீது பரிதாபம் கூட இருந்தது. மெக்கெய்ன்-ஃபெய்ன்கோல்ட் தேர்தல் நிதி சட்டம், மெக்கெய்ன் – கென்னடி குடியேற்றச் [...]

மெகயின் ஜெயிப்பது துர்லபம்: ஏன்? (ஆராய்ச்சி)

கேள்வி: அமெரிக்க அதிபர் தேர்தலில் நிக்ஸனோ, புஷ்ஷினரோ வேட்பாளராக இல்லாமல் குடியரசுக் கட்சியினர் கடைசியாக வென்றது எப்போது? விடை: The Last U.S. Presidential Election the GOP Won Without a Nixon or a Bush on the Ticket

ஜார்ஜ் புஷ்ஷின் முன்னாள் பிரதம மந்திரி ஒபாமாவை ஆதரிக்கிறார்

அன்று: நேற்று: இன்று: ஆசைப்பட்டதோ? மேலும் விவரங்களுக்கு: 1. BBC NEWS | Americas | Colin Powell backs Barack Obama 2. Powell says he will vote for Obama – First Read – msnbc.com “when I look at all of this… But which is the president that we need now… I come to the conclusion … because of who [...]

அடுத்த அமெரிக்க அதிபருக்கு நிச்சயம் ஆப்பு – சத்யா

5. ஒபாமா 98% ஜனநாயகக் கட்சியின் கொறடா/வழிகாட்டலின் படி செனேட்டில் வாக்களித்திருக்கிறார். ஜான் மகயின் 90% புஷ்ஷோடு ஒத்துப் போய் இருக்கிறார். இவர்களுக்கு ‘மாற்றம்’ தாரக மந்திரத்தையும் ‘மேவ்ரிக்’ பட்டத்தையும் வைத்துக் கொள்ள என்ன தகுதி உள்ளது? Bipartisan என்று முழங்கினாலும் செய்கையில் அதை நிரூபிக்காதவர்களின் அடுத்த நான்கு வருடங்கள் புஷ்ஷோடு ஒப்பிட்டால் எவ்வாறு வேறுபடும்? நூறு சதவிகிதம் ஒத்துக்கொள்கிறேன். இருவருக்கும் ஒரு பெரும் வித்தியாசம் இருப்பதாக தோன்றவில்லை பார்க்க ‘என் ஓட்டு’ கேள்வியில். அரசியலில் வாய்ப்பந்தல் [...]

Follow

Get every new post delivered to your Inbox.