அமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை

நன்றி: விஜயபாரதம்
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கடுமையாக நடந்த தேர்தல் ஒரு முடிவுக்கு வந்து பராக் ஹுசைன் ஒபாமா அமெரிக்காவின் 44வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
கென்யா நாட்டைச் சேர்ந்த ஆப்பிரிக்க இனத் தந்தைக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த வெள்ளை இனத் தாய்க்கும் மகனாக அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் 1961ம் ஆண்டு பிறந்த கலப்பினத்தவரான பராக் ஒபாமா உலகமே வியக்கும் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அமெரிக்காவில் ஒரு வெள்ளையர் மட்டுமே ஜனாதிபதியாக வர முடியும் என்று உலக மக்களிடம் [...]

ஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்

1. அமெரிக்காவின் அனைத்து பத்திரிகைகளின் முகப்பை பார்க்க வேண்டுமா? ஒபாமா அதிபராக தேர்ந்தெடுத்த அன்று வெளியான தினசரிகளின் தலைப்புச் செய்தி எவ்வாறு இருந்தது? :: 672 Obama Headlines – Both Browsable and Readable | FlowingData
இங்கே சென்றால் தொழில்நுட்பத்தின் உதவியால், மிக சுளுவாக அனைத்தையும் ஒரே இடத்தில் தரிசிக்கலாம்.

2. தலைப்பு செய்தி ஆக்குவது சாதாரண நாளிதழ்கள் செய்வது. எத்தனை பேர் புதிய அதிபருக்கு உண்டான முக்கியத்துவத்தை தரவில்லை? எந்த பத்திரிகைகள் பராக் ஒபாமா ஜனாதிபதி [...]

ஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

ஒபாமாவின் வெற்றி மற்ற அமெரிக்க அதிபர் போட்டிகளோடு ஒப்பிட்டால் எவ்வாறு வேறுபடுகிறது?
தேர்வர்கள் பேரவையில் எவ்வளவு வித்தியாசம்?
வாக்கு எண்ணிக்கையில் எத்தனை விகிதம் மாற்றம் அடைந்துள்ளது?
92 க்ளின்டன், 84 ரேகன், 60 கென்னடி, 00 புஷ்ஷோடு ஒப்பிட்டால் – எத்தகைய வெற்றி

நன்றி: A Blowout? No, but a Clear-Cut Win, for a Change – NYTimes.com

வட கரோலினா வாக்குச்சீட்டு: குளறுபடியா?

பதிவர் வாசன் ஓட்டு போட்ட: வாக்குசீட்டு
எட்டாண்டுகளுக்கு முன்பு ஆல் கோருக்கு வாக்களித்தால் ஜார்ஜ் புஷ்ஷுக்கு செல்லுமாறு கோடு போட்ட ஃப்ளோரிடா வாக்குச்சீட்டு வெகு பிரபலம். இவ்வளவு காலம் கழிந்தும் வடக்கு கரோலினா அது போன்ற குழப்பமான வாக்குச்சீட்டுகளை வடிவமைத்திருகிறது.
ஜனாதிபதி தேர்தல், மேல்சபை தேர்தல், எம்.பி. தேர்தல், எம்.எல்.ஏ. தேர்தல், நீதியரசர் தேர்தல் என்று ஒவ்வொன்றாக வாக்களித்துக் கொண்டிராமல் சட்டு புட்டென்று ‘என்னுடைய வாக்கு குடியரசுக் கட்சி‘க்கு என்று முத்திரை குத்துமாறு வாக்குச்சீட்டுகளை அமைப்பது வழக்கம்.
அதே போல்தான் வட [...]

அடுத்தாத்து ஆல்பர்ட் – மூக்கு சுந்தர்

* ஒபாமாவுக்கு கருத்துக்கணிப்பில் இருக்கும் இதே அளவு செல்வாக்கு வேறு ஒரு வெள்ளை இனத்து ஜனநாயகக்கட்சி அதிபர் வேட்பாளருக்கு இருந்திருந்தால் தேர்தல் முடிந்தது என்று பலகாலம் முன்னரே முடிவுகட்டி இருப்பார்ர்கள். மெக்கெய்ன் ஆதரவாளர்கள் இன்னமும் துள்ளிக் கொண்டு இருப்பதற்கும், நம்பிக்கை இழக்காமல் பேசிக்கொண்டிருப்பதற்கும் ஒபாமவின் இன அடையாளமே காரணம்.
* இந்தத் தேர்தலில் கட்சி சார்புள்ளவர்களை விட கட்சி சார்பற்றவர்களே முடிவை தீர்மானிக்கும் காரணிகளாகிறார்கள். அடுத்ததாக இளைய தலைமுறையினர் மற்றும் – முதன் [...]

அரசியல் ஆழிப்பேரலை: மணி மு. மணிவண்ணன்

பொருளாதார வீழ்ச்சி.
பெட்ரோல் விலை எகிறல்.
ஜெனரல் மோட்டார்ஸ் தடுமாற்றம்.
அமெரிக்காவின் எதிரிகளின் ஏற்றம்.
மத்திய கிழக்கில் அமெரிக்கப் படையினரின் வலுவின்மை.
வருங்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின்மை.
அமெரிக்க அதிபரின் மீது ஏமாற்றம்.

இத்தனையும் இருந்தும் தேர்தல் நாள்வரை ஆளுங்கட்சியின் வேட்பாளர் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சியின் வேட்பாளர் மக்களின் முழுநம்பிக்கையைப் பெறவில்லை.
இது மெக்கேன் – ஒபாமா போட்டியைப் பற்றிய செய்தியல்ல.
28 ஆண்டுகளுக்கு முன்னர், 1980இல் அதிபர் கார்ட்டர் – ஆளுநர் ரேகன் போட்டியின் கடைசிவாரச் செய்தி.
“நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததை விட இப்போது நல்ல நிலையில் [...]

தமிழ்ப்பதிவுகளில் அமெரிக்க அதிபர் தேர்தல்

ஒரு அகதியின் நாட்குறிப்பு
அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்படும் சாத்தியக்கூறுகள் மிகப்பிரகாசம் – பேராசிரியர் எரிக் அஸ்லானர் நேர்காணல் :: வீரகேசரி நாளேடு – 10/27
கேள்வி: இலங்கை போன்ற நாடுகளில் கடைசி நேர அனுதாப அலைகள் தேர்தல் முடிவில் தாக்கம் செலுத்துவது வரலாற்றில் நிருபணமாகியுள்ளது அந்தவகையில் தற்போது பின்னிலையிருக்கும் மக்கெய்னுக்கு சாதகமாக ஏதேனும் திடீர் திருப்பங்கள் ஏற்படச்சாத்தியமுள்ளதா?
:::
கேள்வி: இந்தத்தேர்தலுக்கு முன்னர் அதிகம் அறியப்படாத பராக் ஒபாமாவின் எழுச்சிக்கு காரணம் யாது?
பதில்:

ஒபாமா ஒரு ரொக் இசைக்கலைஞர் [...]

‘ஒபாமாவிற்கு மிருத்யுஞ்சய ஹோமம் & இளநீர் தாரா தேவை’: தினமலர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பராக் ஒபாமா வெற்றி பெற 75 சதவீத வாய்ப்பு உள்ளதாக, கோவை ஆரிய வைத்திய பார்மசியின் ஜோதிடர் குழு கணித்துள்ளது.
ஒபாமா வெற்றிக்காகவும், அவர் சிறந்த உடல் ஆரோக்கியம் பெறவும், கோவையில் சிறப்பு ஹோமம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து கோவை ஆரிய வைத்திய பார்மசியின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணகுமார் கூறியதாவது: அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஒபாமா, அங்குள்ள மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். 1961ல் பிறந்த அவரது ஜாதகப்படி, அவருக்கு இப்போது ‘வியாச (குரு) திசை‘ நடக்கிறது. [...]

ஒபாமாவை கொல்ல சதி: 2 பேர் கைது (செய்தித் தொகுப்பு)

சிஃபி: ஒபாமாவைக் கொல்லச் சதி
டென்னசி மாகாண போலீசார் சந்தேகத்திற்கிடமான இரண்டு வாலிபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் துப்பாக்கிகள் விற்கும் கடையில் கொள்ளையடித்து ஆப்ரிகன், அமெரிக்கன் பள்ளியில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.
மேலும் 88 வெள்ளையர்களையும், 14 கருப்பர்களையும் மொத்தம் 102 பேரை கொல்வதற்காக அவர்கள் திட்டம் தீட்டியிருந்தனர்.
டேனியல் கோவர்ட் (வயது 20) மற்றும் பால் ஷெல்ஸ்மான் (வயது 18) ஆகிய இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு [...]

சொ. சங்கரபாண்டி – இந்த வார சிறப்பு விருந்தினர்

1. ஒபாமாவா? மெகெயினா? இரண்டும் பேரும் சரியில்லை என்று தப்பிக்கக்கூடாது. இருப்பதற்குள் எவர் ஒகே? ஏன்?
சந்தேகமேயில்லாமல் ஓபாமாதான். பல காரணங்கள் உண்டு, எனக்கு மிக முக்கியமாகப் பட்ட இரண்டு மட்டும் இங்கே (பெருவாரியான அமெரிக்க மக்கள் வாக்களிப்பதற்கு இவை அடிப்படையாக இருக்காது என்றும் கருதுகிறேன்) :
(அ) அமெரிக்காவின் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப் படவேண்டும் அல்லது யார் தேர்ந்தெடுக்கப் படக் கூடாது என்பதில் அமெரிக்க நலன் மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த உலக நலனும் அடங்கியிருக்கிறது.
சோவியத் யூனியன் இருந்தவரை இரு [...]

சுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க தேர்தலும்: வாரயிறுதி விஐபி

பத்ரி:
1. தமிழக அரசியல் களத்திற்கும் அமெரிக்க அரசியல் களத்திற்கும் என்ன ஒற்றுமை?
இரண்டு தேர்தல்களிலும் மக்கள் அனைத்து ‘வயதுக்கு வந்தவர்களும்’ வாக்களிக்கிறார்கள் என்பதைத் தவிர ஒரு பொருத்தமும் இல்லை. அமெரிக்கத் தேர்தலில் இரண்டே இரண்டு ‘அங்கீகரிக்கப்பட்ட’ கட்சிகள்தான். சுயேச்சை வெற்றிபெறுவது கடினம். தேர்தல் கூட்டணி என்பது காணப்படாத ஒன்று.
2. அங்கு நடக்கும் தேர்தலுக்கும், இங்கு நிகழும் தேர்தலுக்கு ஆறு வித்தியாசங்கள் சொல்ல முடியுமா?
1. தமிழகத்தில் கொள்கை குறைவு – அல்லது இல்லவே இல்லை. வெறும் வாக்குறுதிகளும் ஹை-வோல்டேஜ் பிரசாரங்களும் [...]

செனேற் சபையும் காங்கிரஸ் உறுப்பினர்களும் – அமெரிக்க தேர்தல் களம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் எவர் ஜெயிப்பார் என்பது இழுபறியாக இருந்தாலும், செனேட்டிலும் ஹவுஸ் ஆஃப் ரெப்ரசென்டேடிவ்ஸ் எனப்படும் காங்கிரசிலும் சர்வ நிச்சயமாய் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை வெற்றியை தக்கவைத்து, வித்தியாசத்தையும் பெருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொல்லப்போனால், மெகயின் இதை தீவிரமாக முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கார்ல் ரோவ் உட்பட பலரும் வலியுறுத்துகின்றனர்.

ஏன் குடியரசுக் கட்சி தோற்கிறது?
1. தற்போதைய குடியரசுக் கட்சி தலைவர் ஜாஜ் டபிள்யூ புஷ்
2. ஜனாதிபதிக்குத்தான் ஒபாமாவுக்கு வாக்களிக்க முடியவில்லை. உள்ளூர் தேர்தலில் மட்டுமாவது [...]

‘நாட்டுக்குப் பின் நீ’ – மெகயின் புகைப்படங்கள்

நன்றி: Stephen Crowley: McCain – Digital Journalist

அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் தமிழக ஜனநாயகம் எவ்வளவோ தேவலாம் – மூஸ் ஹன்ட்டர்

5. தமிழகச் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒப்பிட முடியுமா? வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை? எவ்வாறு வேறுபடுகிறது?
இந்த கேள்வி விலாவரியாக விவாதிக்கத் தகுந்தது. கோர்வையாக என்னால் பதிலளிக்க முடியுமா என்று தெரியவில்லை.
முதலில், தமிழகச் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒப்பிட முடியுமா என்று தெரியவில்லை. வேண்டுமானால் பொதுவாக இந்திய, அமெரிக்க அரசு, [...]

ஜார்ஜ் புஷ்ஷின் முன்னாள் பிரதம மந்திரி ஒபாமாவை ஆதரிக்கிறார்

அன்று:

நேற்று:

இன்று:

ஆசைப்பட்டதோ?

மேலும் விவரங்களுக்கு:
1. BBC NEWS | Americas | Colin Powell backs Barack Obama
2. Powell says he will vote for Obama – First Read – msnbc.com
“when I look at all of this… But which is the president that we need now… I come to the conclusion … because of who he is, he has both style and [...]

சத்யாவுடன் சந்திப்பு: இறுதிப்பகுதி

7. தற்போது நடக்கும் பொருளாதாரப் பிரச்சினையினாலும் திடீரென்று கிடைத்த அறிவியல் முன்னேற்றத்தாலும் அமெரிக்க தேர்தல் முறை மாற்றியமைக்கப்படுகிறது. மறைந்த புகழ்பெற்ற தலைவரை ஜனாதிபதியாக்க முடிவெடுக்கிறார்கள். எவர் பொருத்தமானவர்? ஏன்?
வேண்டுமானால் அரசியல்வாதி மாதிரி கேட்ட கேள்விக்கு பதில் தெரியலைன்னா தெரிஞ்ச, தான் சொல்லணும்னு நினைச்ச பதிலை சொல்லீறவேண்டியதுதான். )
அமெரிக்க வரலாறு அதிகமா தெரியாது அதுனால மொக்கையா ஏதாவது சொல்வதற்கு பதில் இந்த கேள்வியை சாய்ஸ்ல விட்டுடறேன்.
8. PiT போட்டியில் அடுத்த தலைப்பாக ஒரு வேட்பாளரை வைக்கலாம் என்று [...]

ஒபாமா பெயர் ஒஸாமா என்று அச்சிட்ட வாக்குச்சீட்டுகள்: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் ஓட்டுச்சீட்டு அச்சடிப்பதில் குளறுபடி: ஒபாமா பெயர் ஒசாமா என்று மாறியது
நியுயார்க் ஓட்டுச்சீட்டு:

வாக்குச்சீட்டு புகைப்படம்: CNN Political Ticker: All politics, all the time Blog Archive – New York county prints ‘Barack Osama’ on ballots « – Blogs from CNN.com (பரிந்துரை: இலவசக்கொத்தனார்)

இரு வாலிபர்கள்: புகைப்படக்காரர்களும் ஓவியர்களும்

சாரா பேலின் கலந்து கொண்ட கூட்டத்தில் கிடைத்த புகைப்படம்:

சாரா பேலின் ஆதரவாளர் இருவரின் உற்சாக கரகோஷம்:

Jean-Honore Fragonard: The Swing

This picture became an immediate success, not merely for its technical excellence, but for the scandal behind it. The young nobleman is not only getting an interesting view up the lady’s skirt, but she is being pushed into this position by [...]