ஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்?

ஆப்பிரிக்க – அமெரிக்க அதிபர் கிடைத்து விட்டார். முதல் பெண் ஜனாதிபதி எவராக இருக்கக் கூடும்? 61 வயதான ஹில்லரி க்ளின்டனுக்கு இனிமேல் அந்த வாய்ப்பு கிடைப்பது மிகவும் கஷ்டம். இந்திய வம்சாவழியை சேர்ந்தவர் எவராவது இருக்கிறாரா? ஏன், இல்லை – என்கிறார் கமலா தேவி ஹாரிஸ்: தொடர்புள்ள பதிவு: Kamala Harris, an early Barack Obama backer, is beginning her ascent | Top of the Ticket | Los Angeles [...]

ஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

ஒபாமாவின் வெற்றி மற்ற அமெரிக்க அதிபர் போட்டிகளோடு ஒப்பிட்டால் எவ்வாறு வேறுபடுகிறது? தேர்வர்கள் பேரவையில் எவ்வளவு வித்தியாசம்? வாக்கு எண்ணிக்கையில் எத்தனை விகிதம் மாற்றம் அடைந்துள்ளது? 92 க்ளின்டன், 84 ரேகன், 60 கென்னடி, 00 புஷ்ஷோடு ஒப்பிட்டால் – எத்தகைய வெற்றி நன்றி: A Blowout? No, but a Clear-Cut Win, for a Change – NYTimes.com

ராஜேஷ் சந்திரா: அமெரிக்காவும் அயல்நாடுகளும் – வளைகுடா நாடுகளுடனான உறவு

முந்தைய இடுகையின் தொடர்ச்சி: 3. லெபனான், பாலஸ்தீனம்: சுதந்திரம், விடுதலை போன்றவை ஹெஸ்பொல்லா, ஹமாஸ் என்று மொழியாக்கப்பட்ட நிலையை அமெரிக்கா தோற்றுவித்திருக்கிறது. நல்லதா/கெட்டதா? அடுத்து எங்கே ராஜா கவிழ்ந்து மக்கள் ராச்சியம் உதிக்கும்? உதிக்க வேண்டுமா? லெபனான், பாலஸ்தீனத்தில் அமெரிக்கா எப்போதுமே முற்றும் கோணல். இஸ்ரேல் பேச்சையும், அராஃபத்தையும் நம்பி இழந்தவை ஏராளம். ஹமாஸை தீவிரவாத இயக்கமாகவே பார்த்து அதை மேலும் வளர்த்தது இதில் அடங்கும். அராஃபத்தை விட கட்டுக்கோப்பானவர்கள் ஹமாஸ். அரசியலிலும், பாலஸ்தீனிய அகதிகள் முகாம்களில் [...]

வாரயிறுதி விஐபி: மணிக்கூண்டு சிவா

1. ஒபாமாவிற்காக பிரச்சாரம் மேற்கொண்டபோது கிடைத்த ரசமான அனுபவங்களைப் பகிர முடியுமா? எந்த வீட்டிலாவது விருந்து கிடைத்ததா? ‘நாய்கள் ஜாக்கிரதை’ எச்சரிக்கை இல்லாத இல்லம்; அலாரம் அடித்த வீடு; உங்களைப் பிறிதொருவர் என்று நினைத்து குழம்பியவர்கள் — போன்ற சுவாரசியங்கள் ஏதாவது உண்டா? எப்படி விருந்து கிடைக்கும்?! அடி கிடைக்காமல் இருந்தால் போதாதா? கிட்டதட்ட 60 வீடுகள் வரை சென்றேன். கிட்டதட்ட 90% சதவீத மக்கள் மெக்கயன் ஆதரவாளர்கள் போல! கதவை சாத்தாத குறை! நொந்து நூலாய் [...]

வர்த்தகம், வன்முறை, வாசிப்பு, வருமானம் – செல்வன்

செல்வனின் முதல் பதிவின் தொடர்ச்சி: 3. ஒவ்வொரு அதிபரும் அவ்வப்போது பற்றிக்கொள்ளும் தீயை அணைப்பதிலேயே நேரங்கழித்து விடுகிறார்களா? ரேகனுக்கு ருசியா; புஷ்ஷுக்கு 9/11. கல்வி, உள்நாட்டு வன்முறை போன்ற பல முக்கிய பிரச்சினைகள் இந்தத் தேர்தலில் கவனம் பெறவில்லை. பொருளாதாரம் மீண்டாலும் கிரிமினல்களை தவிர்ப்பதற்கும் கல்வியை செறிவாக்குவதற்கும் எந்த மாதிரி தொலைநோக்கு திட்டங்கள் தேவை? கிரிமினல்களை ஒழிப்பது எந்த நாட்டு அரசாலும் முடியாது. குற்றங்களை மட்டுப்படுத்த மட்டுமே முடியும். அதிக எண்ணிக்கையில் போலீசை பணிக்கமர்த்துவது மட்டுமே இதற்கு [...]

சொ. சங்கரபாண்டி – இந்த வார சிறப்பு விருந்தினர்

1. ஒபாமாவா? மெகெயினா? இரண்டும் பேரும் சரியில்லை என்று தப்பிக்கக்கூடாது. இருப்பதற்குள் எவர் ஒகே? ஏன்? சந்தேகமேயில்லாமல் ஓபாமாதான். பல காரணங்கள் உண்டு, எனக்கு மிக முக்கியமாகப் பட்ட இரண்டு மட்டும் இங்கே (பெருவாரியான அமெரிக்க மக்கள் வாக்களிப்பதற்கு இவை அடிப்படையாக இருக்காது என்றும் கருதுகிறேன்) : (அ) அமெரிக்காவின் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப் படவேண்டும் அல்லது யார் தேர்ந்தெடுக்கப் படக் கூடாது என்பதில் அமெரிக்க நலன் மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த உலக நலனும் அடங்கியிருக்கிறது. சோவியத் [...]

அமெரிக்க அதிபர் தேர்தல் சூழலும் வெற்றி பெறும் வித்தைகளும் – மூஸ் ஹன்டர்

3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது? மெக்கெய்னுடைய ஒரேநிலைப்பாடு எப்பாடுபட்டாவது அதிபர் ஆவது. அவருக்கு இதுவே கடைசி வாய்ப்பு. மெக்கெய்னைப் பற்றி அதிகமாக அறியாத காலத்தில், அதாவது 2000 ஆம் ஆண்டுத் தேர்தலின்போது, அவர் மீது நல்ல அபிப்ராயம் இருந்தது. இப்படிப்பட்ட ஒரு அனுபவமிக்க மிதவாதியைப் புறக்கணித்து கத்துக்குட்டித் தீவிரவாதி புஷ்ஷை தேர்ந்தெடுத்திருக்கிறார்களே என்று அவர் மீது பரிதாபம் கூட இருந்தது. மெக்கெய்ன்-ஃபெய்ன்கோல்ட் தேர்தல் நிதி சட்டம், மெக்கெய்ன் – கென்னடி குடியேற்றச் [...]

இந்த வார விருந்தினர்: சத்யா

1. கலைஞருக்கு போட்ட மாதிரி புஷ் குடும்பத்திற்கும் க்ளின்டன்களுக்கும் family chart போட முடியுமா? (இருவரையும் கோர்த்து விட்டுடாதீங்க கலைஞருக்கே நிறைய ஆட்டோ வந்தது. கிளிண்டனுக்கு dotted line relationship போடணும். புஷ் கதை என்னதோ. இரண்டு பேரும் சேந்து வீட்டுக்கு ஆளுக்கு ரெண்டு ஹம்மர் அனுப்பவா. வேண்டாம் சாமீ. நான் நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா. ஆனா Sr. Obama சுவாரசியமான ஆளா இருப்பார் போல. Political Punch :: Barack Obama’s Branch-y Family [...]

திருமணத்திற்கப்பால் உறவும் தனிமனித ஒழுக்கமும்

5. ஜான் எட்வர்ட்ஸிடம் உங்களுக்கு மதிப்பு இருந்தது. திருமணத்திற்கு அப்பால் உறவு கொண்டதால் அது சரிந்துள்ளதா? அவரின் கொள்கைகள் அப்படியே இருக்கும் பட்சத்தில், பில் க்ளின்டன் பாதம் பணியும் ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்சியும் — அவரை நிராகரித்து ஒதுக்குவது எப்படி சரியாகும்? ஆம். பொதுவில் தனிநபர் வாழ்க்கையையும் அரசியலையும் இணைப்பது எனக்கு ஒவ்வாத விஷயம். ஆனால் தனிநபர் நேர்மையையும் நம்பத்தன்மையையும் மாத்திரமே முன்னிருத்தி அரசியல் நடத்திய ஒருவர் நடைமுறையில் அதற்கு எதிராக நடந்து கொண்டால் அவரது நம்பகத் [...]

மைத்ரேயன்: பரக் ஒபாமாவா? ஜான் மெகயினா?

மைத்ரேயனின் கருத்துகள்… பராக்கின் ரசிகன் அல்ல நான். ஹார்வர்டில் ஒரு சட்டம் பயின்று அதில் உயர் ராங்கில் தேறிய ஒரு வலுவான சிந்தனையாளர். அவர் தான் போதித்த கல்லூரியில் (பல்கலையில்) இதர சட்டப் பேராசிரியர்களிடம் இருந்து தனித்து நின்று மாணவர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு பேராசிரியர். ஜனநாயக் கட்சி பெரும் திமிங்கிலங்கள் உலவும் ஒரு கட்சி. எந்தப் பெரும் நிதியாளரும், பணமுதலையும் தனக்கு உதவாதபோது, பல இளைஞர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஹிலரியின் + பில் கிளிண்டனின் [...]

ரஜினிக்குப் பின் கமல்: டைனோக்குப் பின் யாரு? – கேள்வி – பதில்

முதல் போணியாக வந்தவர் டைனோபாய். (பார்க்க: Dyno Buoyயிடம் சில கேள்விகள் | இந்தியர்களுக்கும் இந்தியாவுக்கும் யார் நல்லது?) திமுக செய்தி ஒன்று போட்டால், உடனடியாக அதிமுக தகவல் வரவேண்டும் என்பது விதி. அமெரிக்கர்கள் ஏன் குடியரசுக் கட்சி விசுவாசிகளாக இருக்கிறார்கள் என்பதை டைனோ சொன்னார். ரஜினிக்குப் பின் கமலாக ஸ்ரீகாந்த் மீனாக்ஷி. (வழக்கம் போல் கலர் கோடிங், தடிமன்படுத்துதல் எல்லாம் என்னால் ஆன உபகாரம்) முழுக்க முழுக்க மெகயின் சார்பு முழக்கத்திற்குப் பிறகு தீவிர ஒபாமாப் [...]

அமெரிக்காவில் இனவெறியா – ஒபாமா செய்திகள்

மேற்கு வர்ஜினியாவில் தேர்தல் நடந்து முடிந்தது. அது தொடர்பான விழியம்: நன்றி: Obama Faces Racism in West Virginia Video – Metacafe வெஸ்ட் வெர்ஜீனியாவில் எதிர்பார்த்தவாறே ஹில்லரி எளிதில் வென்றார். ஆனால், ஹில்லரி க்ளின்டனை விரும்பும் வெள்ளையின வாக்காளர்களைக் கவர்வதற்காக ஜான் எட்வர்ட்ஸை தன் பக்கம் இழுத்துள்ளார் பராக் ஒபாமா. லத்தீனோ வாக்கு தேவைப்படும் காலம் கடந்தபின் கிடைத்த ரிச்சர்ட்ஸன் ஆதரவு மாதிரி பாட்டாளி வர்க்க வோட்டுகள் தேவைப்படும் நேரம் கழிந்தபின்னே ஆற அமர [...]

ஒபினியன் போல் / Bradley’s Effect/ Devil’s alternative

ஒபினியன் போல் / Bradley’s Effect   நம் ஊரில் தேர்தல்கள் படு சுவாரசியமானவை. பல கூத்துக்கள் அரங்கேறும். கருணாநிதியின் வசனங்கள், ஜயலலிதாவின் ஆவேசப் பேச்சு, கட்சிக்கு உள்ளேயே ஒருவரை ஒருவர் அடித்து கொள்ளும் காங்கிரஸ், விஜயகாந்தின் புள்ளி விவரப் பேச்சு, கம்யூனிஸ்ட்டின் ஒப்பாரி, வைகோவின் அழுகை, ரத யாத்திரை, எந்த கூட்டணி வைத்தால் வெற்றி பெறுவோம் என்பதை “ஆறாவது ஆறிவோடு” அறிந்து செயல்படும் ராமதாஸ், சுப்பிரமணிய சுவாமி இப்படி பல முகங்கள், பல காட்சிகள்…… பிராப்தம் [...]

Follow

Get every new post delivered to your Inbox.