அமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்

பத்மா அர்விந்த் (மாற்று தேர்ந்தெடுப்புகள் | தமிழோவியம் தொடர்கள் | வலைப்பதிவு) கொடுக்கும் பருந்துப் பார்வை பொதுப்பள்ளிகள் இயங்கும் முறை குறித்து எழுத வேண்டும் என்று நீண்ட நாளாகவே ஒரு எண்ணம் உண்டு. ஜனவரி மாதம் மாற்றலாகி வந்தாலும், எந்த வித தடங்கலும் இன்றி இந்த ஊரில் வசிப்பவர் என்ற சான்றிதழ் மட்டும் இருந்தால், பள்ளியில் சேர்த்துக் கொள்வதோடு, பாடபுத்தகங்கள், இசை குழுவில் சேர்ந்தால், கருவி, பள்ளி செல்ல பேருந்து என அனைத்தும் வரிசைக்கிரமமாக நடக்கும். யார் [...]

கட்டம் கட்டப்பட்ட ஒபாமா

அமெரிக்கா எவ்வாறு வாக்களித்துள்ளது? நன்றி: National map of McCain-Obama presidential voting <em>by county</em> | Top of the Ticket | Los Angeles Times எந்தப் பகுதிகள் ஒபாமா ஆதரவு? எந்தப் பகுதிகளில் மெகயின் ஆதரவு? நன்றி: Obamaland and McCainland

ஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

ஒபாமாவின் வெற்றி மற்ற அமெரிக்க அதிபர் போட்டிகளோடு ஒப்பிட்டால் எவ்வாறு வேறுபடுகிறது? தேர்வர்கள் பேரவையில் எவ்வளவு வித்தியாசம்? வாக்கு எண்ணிக்கையில் எத்தனை விகிதம் மாற்றம் அடைந்துள்ளது? 92 க்ளின்டன், 84 ரேகன், 60 கென்னடி, 00 புஷ்ஷோடு ஒப்பிட்டால் – எத்தகைய வெற்றி நன்றி: A Blowout? No, but a Clear-Cut Win, for a Change – NYTimes.com

ஒபாமா ஏன் வெற்றி பெற்றார்? – கருத்துத் தொகுப்பு

(தொடர்புள்ள விருந்தினர் இடுகை: மாலன்: பராக் ஒபாமா: கனவுகளுக்கும் நிஜங்களுக்கும் இடையில்…) மணி மு. மணிவண்ணன் ஒபாமா வெற்றி பெற்றால் அதற்குக் காரணம் அவர் கருப்பர் என்பதனால் அல்ல. அவர் கருப்பர் என்பதால் சிலர் அவருக்கு வாக்களிக்கவில்லை. அதனால் அவர் தோற்றுவிடவில்லை. அவர் கருப்பர் என்பதால் மட்டும் சிலர் வாக்களிக்கூடும். அதனால் மட்டும் அவர் வெல்லவில்லை. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலான பண்பாடுகள் என்று கொண்டாடும் சீன, எகிப்திய, இந்திய நாடுகள் சாதிக்க முடியாததை வெறும் இருநூறு ஆண்டுகளுக்கு [...]

மாலன்: பராக் ஒபாமா: கனவுகளுக்கும் நிஜங்களுக்கும் இடையில்…

கறுப்பின அமெரிக்கர் ஒருவர் வெள்ளை மாளிகையில் குடியேறும் வாய்ப்பினைப் பெற்றார் என்ற ஒற்றைச் சரித்திர வரி ஒரு புள்ளி விபரமாக முடிந்துவிடுமா? அல்லது அமெரிக்காவிற்கும், உலகிற்கும் கூட, தேவைப்படும் ஒரு திருப்புமுனையாக மாறுமா? ஒபாமாவினுடைய தேர்தல் வெற்றியை கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் ஊடகங்கள், முக்கியமாக இந்திய ஊடகங்கள், சித்தரிக்க விரும்புகின்றன. அங்கீகரிக்கப்பட்ட அடிமைத்தனம், பாரபட்சம், இனத்தைத் ‘தூய்மைப்படுத்தல்’ போன்ற இழைகள் கொண்ட அமெரிக்க வராலாற்றின் பின்னணியில் பார்த்தால் ஒபாமாவின் வெற்றி சிறப்பு மிக்கதுதான். அமெரிக்கக் [...]

அரசியல் ஆழிப்பேரலை: மணி மு. மணிவண்ணன்

பொருளாதார வீழ்ச்சி. பெட்ரோல் விலை எகிறல். ஜெனரல் மோட்டார்ஸ் தடுமாற்றம். அமெரிக்காவின் எதிரிகளின் ஏற்றம். மத்திய கிழக்கில் அமெரிக்கப் படையினரின் வலுவின்மை. வருங்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின்மை. அமெரிக்க அதிபரின் மீது ஏமாற்றம். இத்தனையும் இருந்தும் தேர்தல் நாள்வரை ஆளுங்கட்சியின் வேட்பாளர் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சியின் வேட்பாளர் மக்களின் முழுநம்பிக்கையைப் பெறவில்லை. இது மெக்கேன் – ஒபாமா போட்டியைப் பற்றிய செய்தியல்ல. 28 ஆண்டுகளுக்கு முன்னர், 1980இல் அதிபர் கார்ட்டர் – ஆளுநர் ரேகன் போட்டியின் கடைசிவாரச் [...]

வர்த்தகம், வன்முறை, வாசிப்பு, வருமானம் – செல்வன்

செல்வனின் முதல் பதிவின் தொடர்ச்சி: 3. ஒவ்வொரு அதிபரும் அவ்வப்போது பற்றிக்கொள்ளும் தீயை அணைப்பதிலேயே நேரங்கழித்து விடுகிறார்களா? ரேகனுக்கு ருசியா; புஷ்ஷுக்கு 9/11. கல்வி, உள்நாட்டு வன்முறை போன்ற பல முக்கிய பிரச்சினைகள் இந்தத் தேர்தலில் கவனம் பெறவில்லை. பொருளாதாரம் மீண்டாலும் கிரிமினல்களை தவிர்ப்பதற்கும் கல்வியை செறிவாக்குவதற்கும் எந்த மாதிரி தொலைநோக்கு திட்டங்கள் தேவை? கிரிமினல்களை ஒழிப்பது எந்த நாட்டு அரசாலும் முடியாது. குற்றங்களை மட்டுப்படுத்த மட்டுமே முடியும். அதிக எண்ணிக்கையில் போலீசை பணிக்கமர்த்துவது மட்டுமே இதற்கு [...]

வாஸந்தி: ‘தமிழ்நாட்டிற்கும் ஒபாமா தேவை’

ஒபாமா: மாற்றத்தின் மந்திரச் சொல் : வாஸந்தி – உயிர்மை ஒபாமா எழுதியிருக்கும் The audacity of hope‘ என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அமெரிக்க அரசியலின் மிக அருமையான அதன் அலசலும் பட்சமற்ற விமர்சனமும் புதிய அறிவார்த்த முதிர்ச்சி மிகுந்த பார்வையும், அதில் தொனிக்கும் நேர்மையும் என்னை ஆட்கொள்கிறது. ::: கருப்பர் என்பதால் பேச்சில் காழ்ப்பையோ, சரித்திர கால உள்ளார்ந்த வெறுப்போ பேச்சில் காண்பிப்பதில்லை. :: அமெரிக்காவில் மட்டுமல்ல, இன்றைய தமிழ் நாட்டு அரசியல் சூழலிலும் [...]

தேர்தல் வாரம்: பொருளாதாரம் – இரண்டாம் விருந்தினர்

தென்றல் (பொருளாதாரம் | அமெரிக்க நிதிநிலை: பொக்கீடு பற்றாக்குறை, டாலர் மதிப்பு | பங்கு சந்தை – வருமான வரி) பதிலளித்ததைத் தொடர்ந்து இன்னொரு சிறப்பு விருந்தினர்: $ என்றவுடன் நினைவுக்கு வரும் செல்வன். 1. முதலாளித்துவம் பரப்பிய அமெரிக்கா சோஷலிஸம் பேசுகிறதா? முதலியக் கொள்கை எப்படி இருக்கிறது? பூட்ட கேஸா அல்லது தவறன மருந்து உட்கொண்ட நோயாளியா? சோஷலிசம் என்றால் தனியார் சொத்துடமைக்கு அனுமதி மறுப்பு, வணிகம் செய்யும் உரிமை முழுவதும் அரசுக்கே சொந்தம் என்று [...]

தென்றல்: அமெரிக்க பங்குசந்தை – இறுதிப் பகுதி

முந்தைய பதிவு – தென்றல் 3. பொக்கீடு பற்றாக்குறை, டாலர் மதிப்பு: இதையெல்லாம் குறித்து ஒபாமாவோ மகயினோ கவலை கொள்கிறார்களா? பொருட்டாக மதித்து ஏதேனும் ஆக்கபூர்வமான திட்டங்கள் வைத்துள்ளார்களா? Consumer Market ‘நல்ல படியாக’ வைத்துக் கொண்டாலே போதும். (அதை எப்படி நல்லபடியா வைத்துக் கொள்வது…??) 4. வருமான வரி: தனிநபர் வரியைக் குறைப்பது என்பது கேபிடலிசத்தின் அடிநாதம் அல்லவா? அதை ஏன் ஒபாமா எதிர்க்கிறார்? உழைத்து முன்னேறியவர் தனக்குக் கிடைக்கும் செல்வத்தை மறுபடியும் சந்தையிலேயே முதலீடு [...]

அமெரிக்க பொருளாதாரம்: அலசல் – தென்றல்

முந்தைய இடுகை 2. அமெரிக்க நிதிநிலை: இப்பொழுது பங்குச்சந்தை படுத்து இருக்கும் நிலையில் இருந்து நிமிர யார் தேவை? அடுத்த அதிபர் எப்படி செயல்பட்டால் வீழ்ந்த வால்ஸ்ட்ரீட் தலைதூக்கும்? ஆகா…இந்த கேள்விக்குதான் ‘பெரிய பெரிய தலைகளே’ மண்டை பிச்சிகிட்டு இருக்கிறாங்க!! சமீபத்திய பங்குச்சந்தை/நிதி நிர்வாகங்களின் சரிவு, 700 பில்லியன் டாலர் தேவை …. இந்தப் பிரச்சனைக்கு அடிப்படை காரணம் என்னனு பார்த்தா எனக்கு தோன்றியது …… பேராசை – சாமான்யமிடமிருந்து பெரிய நிர்வாகம் வரை.. 5, 6 [...]

தேர்தல் வாரம்: கொள்கை விளக்கம் – பொருளாதாரம்

அமெரிக்கர்களுக்கு வருமான வரி குறைகிறதா என்பது மட்டும்தான் பொருளாதாரக் கொள்கையா என்பது வெங்கட்டின் ஆதங்கம். இதை உறுதிப்படுத்துவது போல் ‘நடுத்தர வர்க்கத்தின் வரிச்சுமையைக் குறைப்பேன்‘ என்று ஒபாமாவும், ‘அது மட்டும் போதாது; பெருநிறுவனங்களுக்கும் வரிவிலக்கு தருவேன்!‘ என்று ஜான் மெகயினும் சளைக்காமல் ஆலமரத்தடி பிள்ளையாரான வரியை மட்டுமெ ஒவ்வொரு வரியிலும் சுற்றி சுற்றி வந்து பங்குச்சந்தையான அடிவயிறு பெருக்கிறதா என்று தொட்டுப் பார்த்து வருகிறார்கள். தேர்தலில் தற்போதைக்கு முன்நிலையில் இருக்கும் ஒபாமாவின் வலையகமும் இதை உறுதியாக்குவதாக இரண்டு [...]

அமெரிக்காவில் ‘ஒபாமாவுக்காக தமிழர்கள்’ – அதிபர் தேர்தல் பதிவுகள்

1. சாரா பேலினும் சோனியா காந்தியும் :: முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை ஏ.பி.ஸி. (ABC) என்னும் டி.வி. நிறுவனம் இவரைப் பேட்டி கண்டபோது என்னென்னவோ உளறியிருக்கிறார். ‘ஜனாதிபதி புஷ்ஷின் கோட்பாடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று நிருபர் கேட்டதற்கு, ‘அவருடைய கொள்கையின் எந்த அம்சம் பற்றிக் கேட்கிறீர்கள்?’ என்று கேட்டு மழுப்பியிருக்கிறார். ‘ரஷ்யாவுக்கு மிக அருகில் உங்கள் மாநிலம் இருக்கிறதே. ரஷ்யா கடந்த இரண்டு வாரங்களில் நடந்துகொண்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்ற நிருபரின் கேள்விக்கு ‘அலாஸ்காவிலிருந்து [...]

உடல்நல மருத்துவம் – ஒபாமா & மெகயின் திட்ட ஓப்பீடு

உடல்நலம்/சேமநிதி காப்பீடு (Health care/Insurance) – பத்மா அர்விந்த் தொடர்ச்சியாக நன்றி: Comparing healthcare plans – Boston.com மேலும் வாசிப்புக்கு: 1. CJR: Twelve Questions About Health Care for Tonight’s Debate: “There’s more to talk about than taxing benefits” 2. Worlds apart on healthcare – The Boston Globe: “Obama’s plan is like the new Massachusetts universal coverage law with one [...]

அமெரிக்கா எங்கு பின்தங்கி இருக்கிறது? – வெங்கட்

4. வெற்றிபெற்ற அடுத்த அமெரிக்க ஜனாதிபதி உங்களை ஆலோசகராக நியமிக்கிறார். என்ன அட்வைஸ் கொடுப்பீர்கள்? அமெரிக்காவின் உள்விவகாரங்களிலெல்லாம் என்னை ஆலோசனை கேட்கமாட்டார்கள் என்பது சர்வநிச்சயம். எனவே பொதுவில் அமெரிக்காவின் நடப்பு குறித்தும் உலகில் அமெரிக்காவின் பங்கு குறித்துக் கொஞ்சம் சொல்லலாம். இறுதியாக அறிவியல் தொழில் நுட்ப ஆலோசனை கொஞ்சம். அரசியல், மதம், ராணுவம், அறிவியலில் பொதுவாக அரை நூற்றாண்டுக்கு முந்தைய சிந்தனையில் தேங்கிப் போகிறார்கள் அமெரிக்கர்கள் என்ற வருத்தம் கலந்த மதிப்பீடு இருக்கிறது எனக்கு. யுத்தங்கள் இரண்டாம் [...]

குடியரசு வேட்பாளர்: சாரா பேலின் – வலையக கணக்கு வழக்கு

சாரா பேலின் துணை ஜனாதிபதியாகிறாரோ இல்லையோ… அமெரிக்க நிறுவனங்களும் பங்குச்சந்தையும் அதலபாதாளம் பாய்ந்தாலும் குடியரசுக் கட்சியின் உபவேட்பாகர்தான் செய்திகளில் எக்கச்சக்கமாய் புழங்குகிறார். அவரைக் குறித்து கண்டதும் கேட்டதும்: வலைப்பதிவுகள்/கருத்து: சாரா பேலின் பெண் என்னும் கருத்தாக்கத்தில் எப்படி புகைப்படம் எடுக்கிறார்கள், அமெரிக்க ஊடகங்களில் எத்தகைய நிழற்படங்கள் வெளியாகின்றன என்பது குறித்த ஏமி வில்சனின் பதிவு: Picturing Sarah Palin « working வாக்கு வங்கி அரசியலாக கைக்குழந்தையை அலைக்கழிக்கிறாரா (அ) அமெரிக்காவில் அலுவலில் சின்னஞ்சிறுசுகளை கொண்டுவர முடியுமா: [...]

பதிவுகளின் சார்பு நிலையும் ஊடக போக்குகளும் – இடது x வலது

பெரும்பாலான அமெரிக்க அரசியல் பதிவுகள் பராக் ஒபாமாவிற்கு சார்பாக இயங்குகிறதா? எத்தகைய விஷயங்கள் வலைப்பதிவுகளில் அலசப்படுகின்றன? எவர் அதிகம் கவனிக்கப்படுகிறார்? அயலுறவுக் கொள்கையில் எந்த நாடு முக்கியத்துவம் பெறுகிறது? முழுமையான அலசல்களுக்கு: PoliticalTrends.info – Political Bias

Follow

Get every new post delivered to your Inbox.