ஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்?

ஆப்பிரிக்க – அமெரிக்க அதிபர் கிடைத்து விட்டார். முதல் பெண் ஜனாதிபதி எவராக இருக்கக் கூடும்? 61 வயதான ஹில்லரி க்ளின்டனுக்கு இனிமேல் அந்த வாய்ப்பு கிடைப்பது மிகவும் கஷ்டம். இந்திய வம்சாவழியை சேர்ந்தவர் எவராவது இருக்கிறாரா? ஏன், இல்லை – என்கிறார் கமலா தேவி ஹாரிஸ்: தொடர்புள்ள பதிவு: Kamala Harris, an early Barack Obama backer, is beginning her ascent | Top of the Ticket | Los Angeles [...]

மெகயினிடம் எனக்குப் பிடித்தது என்ன? – சொ. சங்கரபாண்டி

சென்ற பதிவு 2. ஒபாமாவின் எந்தக் கொள்கை உங்களை அதிகம் கவர்ந்திழுத்து ஒத்திசைவாக தலையாட்ட வைக்கிறது? ஒபாமா-பைடனின் வெளியுறவுக்கொள்கை. அதுவும் கூட புஷ் கொள்கைகளை ஆதரிக்கும்/தொடரவிருக்கும் மெக்கெய்ன்-பேலின் வந்துவிடக்கூடாதென்ற பயத்தில்தான். 3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது? இப்பொழுது எதுவுமில்லை. 2000 குடியரசுக் கட்சி முன்னோட்டத் தேர்தலின் போது புஷ்சுக்கு எதிராகப் போட்டியிட்ட காலத்தில் எனக்கு மெக்கெய்னைப் பிடிக்கும். ஒரு சில விசயங்களாவது இருந்தன அப்பொழுது. இப்பொழுது புஷ்சை ஆதரிப்பவர்களைப் பற்றி நினைக்கவே [...]

இந்த வார விருந்தினர்: சத்யா

1. கலைஞருக்கு போட்ட மாதிரி புஷ் குடும்பத்திற்கும் க்ளின்டன்களுக்கும் family chart போட முடியுமா? (இருவரையும் கோர்த்து விட்டுடாதீங்க கலைஞருக்கே நிறைய ஆட்டோ வந்தது. கிளிண்டனுக்கு dotted line relationship போடணும். புஷ் கதை என்னதோ. இரண்டு பேரும் சேந்து வீட்டுக்கு ஆளுக்கு ரெண்டு ஹம்மர் அனுப்பவா. வேண்டாம் சாமீ. நான் நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா. ஆனா Sr. Obama சுவாரசியமான ஆளா இருப்பார் போல. Political Punch :: Barack Obama’s Branch-y Family [...]

மைத்ரேயன்: பரக் ஒபாமாவா? ஜான் மெகயினா?

மைத்ரேயனின் கருத்துகள்… பராக்கின் ரசிகன் அல்ல நான். ஹார்வர்டில் ஒரு சட்டம் பயின்று அதில் உயர் ராங்கில் தேறிய ஒரு வலுவான சிந்தனையாளர். அவர் தான் போதித்த கல்லூரியில் (பல்கலையில்) இதர சட்டப் பேராசிரியர்களிடம் இருந்து தனித்து நின்று மாணவர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு பேராசிரியர். ஜனநாயக் கட்சி பெரும் திமிங்கிலங்கள் உலவும் ஒரு கட்சி. எந்தப் பெரும் நிதியாளரும், பணமுதலையும் தனக்கு உதவாதபோது, பல இளைஞர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஹிலரியின் + பில் கிளிண்டனின் [...]

Srikanth Meenakshi: Obama’s Campaign Finance Pledge & System of Public Financing

ஸ்ரீகாந்த் மீனாக்ஷி கருத்துகளின் தொடர்ச்சி: 3. ஹில்லரி க்ளின்டனையும் சாரா பேலினையும் தாக்கிய விதம் ‘பராக் பெண்களுக்கு எதிரானவர்’ என்னும் பிம்பத்தை உருவாக்க இலகுவாக்கியிருக்கிறது. இதை அவர் எப்படி தடுத்திருக்கலாம்? உதட்டுச்சாயம்/பன்றி போன்ற உவமானங்கள் குறித்த உங்கள் அபிப்ராயம் என்ன? பதில்: ஹில்லரி க்ளிண்டனையும் சாரா பேலினையும் எதிர்த்துப் பிரசாரம் நிகழ்த்துவது என்பதே ‘தாக்குவதற்கு’ இணையானது என்றால் அது அநியாயம். ‘என்னை எதிர்த்து என்ன சொன்னாலும் அது பெண்களையே அவமானம் செய்வதற்கு ஒப்பு’ என்று சொல்பவர்கள் பொது [...]

அமெரிக்காவில் இனவெறியா – ஒபாமா செய்திகள்

மேற்கு வர்ஜினியாவில் தேர்தல் நடந்து முடிந்தது. அது தொடர்பான விழியம்: நன்றி: Obama Faces Racism in West Virginia Video – Metacafe வெஸ்ட் வெர்ஜீனியாவில் எதிர்பார்த்தவாறே ஹில்லரி எளிதில் வென்றார். ஆனால், ஹில்லரி க்ளின்டனை விரும்பும் வெள்ளையின வாக்காளர்களைக் கவர்வதற்காக ஜான் எட்வர்ட்ஸை தன் பக்கம் இழுத்துள்ளார் பராக் ஒபாமா. லத்தீனோ வாக்கு தேவைப்படும் காலம் கடந்தபின் கிடைத்த ரிச்சர்ட்ஸன் ஆதரவு மாதிரி பாட்டாளி வர்க்க வோட்டுகள் தேவைப்படும் நேரம் கழிந்தபின்னே ஆற அமர [...]

மே 9 – அமெரிக்க ஜனாதிபதி களம்

1. அமெரிக்காவில் பதவிக்கு போட்டியிடுபவர்கள் தாங்கள் வருமான வரி கட்டிய விவரங்களை வெளிப்படையாக சொல்வது வழக்கம். அதற்கேற்ப, ஜனநாயகக் கட்சி சார்பாக களத்தில் இருக்கும் ஒபாமா, இருந்த ஹில்லரி, குடியரசுக் கட்சியின் மெகெயின் ஆகியோர் ஏற்கனவே வெளியிட்டிருந்தார்கள். இந்நிலையில் ஜான் மெக்கெயினின் மனைவி சிண்டி தன்னுடைய ‘சொத்து குறித்த தகவல்களை எந்த நிலையிலும் பொதுவில் வைக்கமாட்டேன்‘ என்று பேட்டி அளித்து இருக்கிறார். மதுபான நிறுவனத்திற்கு சொந்தக்காரரான சிண்டியின் நிதிநிலை கிட்டத்தட்ட நூறு மில்லியனுக்கு மேல் மதிப்பிடப்படுகிறது. ஆதாரம்: [...]

Hillary is 404?

இணையத்தில் 404 வந்தால் அற்றுப் போனதைத் தேடுகிறோம் என்று பொருள். அதே போல் ஹில்லரியும் விலக வேண்டும் என்று பொருள்படும் வலையகம்.

டேவிட் லெட்டர்மெனுடன் தலை பத்து – ஒபாமா & ஹில்லரி

அமெரிக்காவில் இரவுகளில் நிலா வருகிறதோ இல்லையோ… தொலைக்காட்சியில் தினசரி டேவிட் லெட்டர்மெனின் நிகழ்ச்சி வரும். வாரநாட்களில் தன்னுடைய நகைச்சுவையான தலை பத்து பட்டியல் போடுவார். பட்டியல்களில் விருப்பமுள்ள அமெரிக்கர்களை இந்த டாப் 10 மிகவும் கவர்ந்துள்ளது. தேர்தல் பிரச்சார காலங்களில் அரசியல்வாதிகளும், சினிமாக்காலங்களில் நட்சத்திரங்களும் தங்களைத் தாங்களே பகிடி செய்து கொள்வதும் உண்டு. சென்ற வாரம் ஒபாமா வந்திருந்தார். தன்னைப் பற்றி கிண்டலடித்துக் கொண்டார். அவற்றில் சில… ஜனாதிபதி ஆனவுடன், எம்டிவி நாடகத்தில் வரும் குழாயடி சண்டைகளைத் [...]

Post #100 – (Not) Paid for by Hillary Clinton for President

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான இந்தப் பதிவின் நூறாவது இடுகை இது. இந்தியானா மாகாண வாக்காளர்களுக்கு ஹில்லரி க்ளின்டன் அனுப்பும் மடல்: நன்றி: This is what the Clinton Campain is sending out in Indiana

பின்னிரவு மூன்று மணி தொலைபேசி: காமிக்ஸ்

முதல் பாகம் இரண்டாம் பாகம் மூன்றாம் பாகம் நன்றி: CANDORVILLE daily comics by Darrin Bell » Archive » Candorville: 4/30/2008- Choking, part 3 | 5/1/2008- part 4

பொய் சொல்லக் கூடாது ஹில்லரி

பாஸ்டர் ரைட்டின் பேச்சினால் ஒபாமாவுக்குப் பின்னடைவிருந்தது தெரியும். தற்போது அந்நிலை மாறி அவர் ஏறுமுகத்திலிருக்கிறார். இனப் பிரச்சனை போன்றதொரு அதிசிக்கலான பிரச்சனையை யாரின் மனதையும் புண்படுத்தாதவாறு எதிர்கொண்டு இந்த யுகத்தில் இனப்பிரச்சனையின் முகங்களை இனம் கண்டு அவற்றைக் கடந்து செல்வதன் அவசியத்தை உணர்த்தித் தன் தரப்பையும் விட்டுக்கொடுக்காமல் பிறரையும் வருத்தாமல் அவர் ஆற்றிய உரைக்குக் கிடைத்த வெற்றி இந்த ஏறுமுகம். தன் நண்பரின் வார்த்தைகளால் ஏற்பட்ட காயத்தை தன் வார்த்தைகளால் ஆறச் செய்யும் குணம் கொண்டவர் தலைவரில்லையென்றால் [...]

இரு கார்ட்டூன்கள் – தி நியூ யார்க்கர்

1. மாற்றத்தை கொணர்வேன் என்று சொல்லிப் பார்க்கலாமா? 2. நியூ ஹாம்ஷைர் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளிவர ஆரம்பித்தவுடனேயே நான் ஹில்லரிக்கு கட்சி மாறிட்டேன்… தெரியுமா!? நன்றி: Cartoons from the Issue of January 21st, 2008: Issue Cartoons: The New Yorker

ஒபாமாவிடம் மன்னிப்புக் கோரினார் ரைஸ்; ஜான் மெகெயின், ஹில்லரி கடவுச்சீட்டுகளும் அத்துமீறப்பட்டுள்ளன

அமெரிக்க அரசுத்துறைச் செயலர் கொண்டலிஸா ரைஸ் அம்மையார் அவர்கள், ஜனநாயக் கட்சி வேட்பாளராகத் தேர்வு பெற வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படும் பராக் ஒபாமாவிடம் மன்னிப்புக் கோரியிருக்கிறார். ஒபாமாவின் பாஸ்போர்ட் தகவல்களைப் பெறுவதற்காக, அரசுத்துறையின் ஊழியர்கள், கணினி பாதுகாப்பு விதிகளை மீறியதாக வெளியான தகவலை அடுத்து அவர் மன்னிப்புக் கோரியிருக்கிறார். ஒபாமாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், யாராவது தனது பாஸ்போர்ட் தகவல் கோப்புக்களைப் பார்த்திருந்தால் தான் மிகவும் கவலையடைந்திருப்பேன் என்று கூறியதாகவும் கொண்டலிஸா ரைஸ் தெரிவித்தார். நன்றி: [...]

முன்று மாநிலங்களில் ஹில்லரி வெற்றி

இன்றைய ஜனநாயக கட்சியின் முன்னோட்ட தேர்தலில் ஹில்லரி மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளார். ஒபாமா ஒரு மாநிலத்தில் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறார். மிக முக்கிய மாநிலங்களான ஓகாயோ, டெக்சாஸ் ஆகிய இரு மாநிலங்களிலும் ஹில்லரி வெற்றி பெற்றுள்ளார். இந்த இரு மாநிலங்களிலும் வெற்றி பெற்றால் தான் இந்த போட்டியில் ஹில்லரி தொடர முடியும் என்ற நிலை இருந்தது. ஹில்லரியின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒபாமா நாப்டா – NAFTA குறித்த சில [...]

ஹில்லரி Vs ஒபாமா : யார் சிறந்தவர் ?

அமெரிக்க முன்னோட்ட தேர்தல் (Primary) கிட்டதட்ட இறுதி நிலைக்கு வந்துள்ளது. நாளை 4 முக்கிய மாநிலங்களில் நடக்கும் தேர்தல் குடியரசுக் கட்சியில் மெக்கெயினை குடியரசுக் கட்சியின் வேட்பாளாராக தேர்வு செய்யும். ஹக்கபீ தொடர்ந்து போட்டியில் இருந்தாலும், அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு சிறிதும் இல்லை. எனவே நாளை மெக்கெயின் 1,191 என்ற இலக்கினை பெறக்கூடும் என்றே தெரிகிறது. நாளை அனைவரின் கவனமும் ஜனநாயக் கட்சியின் மீது தான் இருக்கும். ஒபாமாவா ? ஹில்லரியா என்ற கேள்விக்கு விடை [...]

சூப்பர்டெலகேட்சுக்கு காசு கொடுத்து கவனிக்கும் ஜனநாயகக் கட்சி

Capital Eye – Seeking Superdelegates (வழி: Superdelegates get campaign cash): விடாக்கண்டர் ஹில்லரிக்கும், கொடாக்கண்டர் ஒபாமாவுக்கும் நடக்கும் இழுபறி சண்டை முடிகிறபாடாக இல்லை. தன்னுடைய சொந்த ஊரான இல்லினாய் தவிர வேறு எந்த பெத்த மாகாணத்திலும் ஒபாமா ஜெயிக்கவில்லை என்பதை முக்கிய குறையாக ஜனநாயகக் கட்சி கருத ஆரம்பித்துள்ளது. மார்ச் நான்காம் தேதி நடக்கும் ஒஹாயோ, டெக்சஸ் போன்ற மாபெரும் மாகாணங்களின் தேர்தல் வெற்றி, அந்தக் குறையை போக்கலாம்; அல்லது க்ளின்டனின் வாதத்திற்கு வலுசேர்க்கலாம். [...]

ஹில்லரி விடைபெற்றுக் கொண்டாரா – டெக்சாஸ் தர்க்கம்: சரசர குறிப்புகள்

இன்று தொலைக்காட்சியில் பார்த்த ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களின் விவாதத்தில் கவனத்தை ஈர்த்தவை: ‘இளைய தளபதி’ விஜய் பொது நிகழ்ச்சிகளில் அல்லது தான் நடித்த சினிமா படத்திற்கான சன் டிவி பேட்டியில் வரும்போது, பரபிரும்மம் போன்ற நிர்ச்சலனமான முகபாவத்துடன் கலந்து கொள்வார். பராக் ஒபாமாவும் அப்படியொரு அகத்தின் பிரதிபலிப்புகளை வெளிக்கொணராத தோரணையைக் கட்டிக் காத்தார். இதற்கு நேர் எதிராக இருந்தார் ஹில்லரி கிளிண்டன். ‘இராக் போருக்கு ஆதரவாக வாக்களித்தவர் எவ்வாறு மெகெயினுடன் தர்க்கிக்க முடியும்?‘ என்று ஒபாமா குற்றஞ்சாட்டியவுடன், [...]

Follow

Get every new post delivered to your Inbox.