கட்டம் கட்டப்பட்ட ஒபாமா

அமெரிக்கா எவ்வாறு வாக்களித்துள்ளது? நன்றி: National map of McCain-Obama presidential voting <em>by county</em> | Top of the Ticket | Los Angeles Times எந்தப் பகுதிகள் ஒபாமா ஆதரவு? எந்தப் பகுதிகளில் மெகயின் ஆதரவு? நன்றி: Obamaland and McCainland

‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா?’ – வாஷிங்டனில் நல்ல தம்பி

இவரின் முந்தைய பதிவு: மாநாடுகள் குறித்த ஒரு ஒப்பீட்டு அலசல் தொடர்புள்ள பதிவு: வாக்களித்த வைபவம் – மைத்ரேயன் நேற்று மாலை அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பொழுது 6 மணிக்கே நன்கு இருட்டி விட்டிருந்தது. லேசான மழையில் இலையுதிர்க்கால பொன்னிற இலைகளின் சருகுகளால் சாலையோரங்கள் பொன்னிறக் காசுக் குவியல் போல மழைநீரில் மின்னிக் கொண்டிருந்தன. சிக்னலில் சிவப்பு விழ அநிச்சையாக கால்கள் காரை நிறுத்தின. மழை பெய்யும் பொழுது சிக்னல்களின் மஞசள், சிவப்பு, பச்சைகளை ஒரு [...]

வாக்களித்த வைபவம் – மைத்ரேயன்

இவரின் முந்தைய பதிவு: ஒபாமா ஜனாதிபதியானால் என்ன செய்வார்? இங்கே வாக்களித்து விட்டேன். நானும் இன்று வாக்குச் சாவடிக்குப் போனேன். சிறிது மழையில் வீடுகளெல்லாம் நனைந்திருந்தன. நல்ல குளிர். காலை 7.45க்குப் போனால் எப்படி இருக்கும்? வழக்கமாக வீடுகளெல்லாம் கோடை முடிவதற்குள் வெளிப்பக்கம் அடிக்க வேண்டிய (தேவையாய் இருந்தால்) பெயிண்ட் எல்லாம் அடித்து, கூரைகளை எல்லாம் புதிதாக்கி 90 சதவீதம் வீடுகள் புதுப்பிக்கப் படும் ஒரு பகுதியில் இருக்கிறேன். இந்த வருடம், சென்ற வருடம் போலவே, மக்களின் [...]

ஒபாமா சொல்லிய 106 வயதுப் பெண்மணியும், சொல்லாத 114 வயதுப் பெண்மணியும்

44வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒபாமா, தனது பேச்சில்,  ஜியார்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த 106 வயதான ‘ஆன் நிக்ஸன் கூப்பர்’  எனும் கறுப்பின மூதாட்டி இன்று வாக்களித்ததைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.  மார்ட்டின் லூதர் கிங் அவர்கள் ‘செல்மா’, அலபாமாவில் 1965இல் நிறவெறிக்கெதிராக நடத்திய போராட்டத்தில் உடனிருந்திருக்கிறார் ‘ஆன் நிக்ஸன் கூப்பர்’. ஆன் நிக்ஸன் கூப்பர் பற்றி அறிய -> http://www.thehistorymakers.com/biography/biography.asp?bioindex=739 ஆன் நிக்ஸன் கூப்பரிலும் வயதில் மூத்த 114 வயதுக் கறுப்பின பெண்மணியும் இன்று ஒபாமாவிற்காக வாக்களித்திருக்கிறார். லாஸ்ஏஞ்சலஸ் [...]

இந்த தேர்தலில் ஓபாமா வேட்பாளராக இருப்பதனால் இன்னுமொரு வித்தியாசம்!

இந்த தேர்தலில் ஓபாமா வேட்பாளராக இருப்பது பல அமெரிக்கர்களுக்கு வாக்களிப்பது பெருங்கடமையென நினைவுறுத்துகிறதென்றால் அதில் தவறேதுமிருக்காது. இதுவரை வாக்களிக்கவே எண்ணம் இல்லாமலிருந்த பல கறுப்பர்கள் (60-70 வயதிலும்) இந்த முறை வாக்குச்சாவடிக்கு முதல் முறையாக வந்து வாக்களிக்கவிருக்கின்றனர். ஒபாமா தேர்தல் குழுவினரின் தீவிர முயற்சியாலும், ஓபாமா மீதான ஈர்ப்பாலும் இளைய, புதிய வாக்காளர்கள் பலர் வாக்களிக்கப் பதிந்திருக்கின்றனர், இவர்களில் பெருவாரியானவர்கள் வாக்களிக்கவிருக்கின்றனர். மேற்கண்ட இரு காரணங்களால் தூண்டப்பட்டு, ஆதரிக்கவும் எதிர்க்கவும், இதுவரை நடந்த தேர்தல்களில் ஒட்டுப் போட [...]

மெகயினிடம் எனக்குப் பிடித்தது என்ன? – சொ. சங்கரபாண்டி

சென்ற பதிவு 2. ஒபாமாவின் எந்தக் கொள்கை உங்களை அதிகம் கவர்ந்திழுத்து ஒத்திசைவாக தலையாட்ட வைக்கிறது? ஒபாமா-பைடனின் வெளியுறவுக்கொள்கை. அதுவும் கூட புஷ் கொள்கைகளை ஆதரிக்கும்/தொடரவிருக்கும் மெக்கெய்ன்-பேலின் வந்துவிடக்கூடாதென்ற பயத்தில்தான். 3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது? இப்பொழுது எதுவுமில்லை. 2000 குடியரசுக் கட்சி முன்னோட்டத் தேர்தலின் போது புஷ்சுக்கு எதிராகப் போட்டியிட்ட காலத்தில் எனக்கு மெக்கெய்னைப் பிடிக்கும். ஒரு சில விசயங்களாவது இருந்தன அப்பொழுது. இப்பொழுது புஷ்சை ஆதரிப்பவர்களைப் பற்றி நினைக்கவே [...]

அமேரிக்க குடிமகள்

நேற்று மெக்கெயினும், ஒபாமாவும் எங்கள் ஊருக்கு வந்து சென்றார்கள். மெக்கெய்ன் கூட்டத்திற்கு 2000 பேர் கூட வரவில்லை, மிட்டாய் கொடுத்து மக்களை உபசரித்து உட்கார வைத்தார்கள் என்றும் – ஒபாமா கூட்டத்திற்கு 20000 பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது, 35000 மக்கள் வந்தார்கள் என்றும் சொல்கின்றது உள்ளூர் நாளிதழ்.  இது பற்றி எழுதி கிழிக்காமல் வாக்களிக்கச் (Early Voting) சென்ற சிறந்தவொரு அமேரிக்க குடிமகள் பற்றிய செய்தி குறிப்பு, கீழே, வெட்டி ஒட்டப்பட்டுள்ளது. நன்றி:  http://kob.com/article/stories/S625956.shtml?cat=0 Suspected [...]

சுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க தேர்தலும்: வாரயிறுதி விஐபி

பத்ரி: 1. தமிழக அரசியல் களத்திற்கும் அமெரிக்க அரசியல் களத்திற்கும் என்ன ஒற்றுமை? இரண்டு தேர்தல்களிலும் மக்கள் அனைத்து ‘வயதுக்கு வந்தவர்களும்’ வாக்களிக்கிறார்கள் என்பதைத் தவிர ஒரு பொருத்தமும் இல்லை. அமெரிக்கத் தேர்தலில் இரண்டே இரண்டு ‘அங்கீகரிக்கப்பட்ட’ கட்சிகள்தான். சுயேச்சை வெற்றிபெறுவது கடினம். தேர்தல் கூட்டணி என்பது காணப்படாத ஒன்று. 2. அங்கு நடக்கும் தேர்தலுக்கும், இங்கு நிகழும் தேர்தலுக்கு ஆறு வித்தியாசங்கள் சொல்ல முடியுமா? 1. தமிழகத்தில் கொள்கை குறைவு – அல்லது இல்லவே இல்லை. [...]

இந்த வார விருந்தினர்: மூஸ் ஹன்ட்டர்

ஆதியில் டைனோபாய் வந்தார். இப்போது மூஸ்ஹன்ட்டர். அவரிடம் கேள்விக்கணைகளைத் தொடுக்குமுன் அவரைக் குறித்து பின்னணி கேட்டேன். அவர் சொன்னதில் இருந்து. ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஹில்லரி க்ளின்டன் வரவேண்டுமென்று விரும்பினேன். 2016 வரை ஒபாமா காத்திருந்திருக்கலாம்! என்னுடைய பீச்சாங்கை பக்கம் ஆப்பிரிக்க-அமெரிக்க குடும்பம் வசிக்கிறார்கள். சோத்தாங்கை பக்கம் இந்தியர்கள். எதிர்த்தாப்பல வெள்ளக்காரங்க. அந்தப்பக்கம் இரானில் இருந்து வந்திருக்கிறவங்க. ஒரே வெரைட்டிதான்! ஜான் மெகயின கீட்டிங் விவாகாரத்துல விசாரிக்கறப்ப இந்த ஊருக்கு வந்து சேர்ந்தேன். இனி அவர்: 1. [...]

‘நான் சம்பாதிப்பதை அரசாங்கம் பிடுங்கிக் கொள்ளலாமா?’ – ஜோ

கடந்த ஞாயிறன்று பராக் ஒபாமா ஒவ்வொரு தெருவாக சென்று வாக்கு சேகரித்தார். அப்பொழுது குழாய்களை சரி செய்யும் ஜோ (Joe Wurzelbacher) என்பவர் கேட்ட கேள்விக்கு விரிவாக பதிலளிக்கிறார்: வருடத்திற்கு 250,000 டாலருக்கு மேல் சம்பாதிக்கும் என்னை மேலும் வரி போட்டு வாட்டுவது சரியாகுமா? என்பது அவருடைய கேள்வி. விவாதம் முடிந்தவுடன் சிபியெஸ் தொலைக்காட்சியின் கேட்டி கௌரிக் உடன் ஜோ உரையாடினார். அந்த ஒளிப்பதிவு மற்றும் பேட்டி: Joe The Plumber's Chat With Couric – [...]

அடுத்த அதிபராக எவர் பொருத்தம்? – சத்யா

4. செனேட்டராக இருந்தபோதே தற்போதைய வீட்டுக்கடன் பிரச்சினையையும் அதன் மேலெழுந்த நிதிநிலை மதிப்பீடு நிலைகுலைவையும் கண்டுணர முடியாத ஒபாமாவா? இராக் மீது போர் தொடுத்தால் ஓரிரண்டு நாளில் அமெரிக்காவின் கடமை முடியும் என்று கணித்த மெகயினா? இருவரில் உங்கள் தேர்வு எவர்? எனக்கு அமரிக்காவில் ஓட்டுரிமை இல்லை. அதனால் என்னுடைய உள்ளார்ந்த ஈடுபாடு ஒரு வேடிக்கை பார்ப்பவனின் மனநிலையே. அதனால் இந்த பதிலை அந்தக்கண்டோத்தில் பார்க்க கேட்டுக்கொள்கிறேன். ஆரம்பத்தில் ஒபாமாவின் பேச்சுக்களும் மாற்றம் மாற்றம் என்னும் தாரக [...]

அமெரிக்காவில் தேர்தல் தில்லுமுல்லு – மெகயினை வெல்லவைக்கும் சூட்சுமம்

அமெரிக்க அதிபர் தேர்தல் 50 மாகாணங்களிலும் நடந்தாலும் சில இடங்கள் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக அறியப்படுகிறது. எடுத்துக்காட்டாக, நியு யார்க் மாநிலத்தில் ஜான் மெகயின் வெல்வதற்கு வாய்ப்பே கிடையாது. அதே போல் அரிசோனாவிலோ டெக்சாஸிலோ பராக் ஒபாமா ஜெயிப்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. ஆனால், இரு கட்சி வேட்பாளர்களும் சற்றேறக்குறைய சமமாக இருக்கும் மாநிலங்களில் பிரச்சாரம் சூடாக நடக்கிறது. அவற்றில் ஆறு மாநிலத்தில் வாக்காளர் அடையாள அட்டை தருவதற்கு முரண்டு பிடித்திருக்கிறார்கள். இளம் ரத்தத்தைக் கவர்வதில் ஒபாமா [...]

‘அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம்’ – செய்தித் தொகுப்பு

1. ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாவதே உலகெங்கிலுமுள்ள மக்களின் விருப்பம்-பி.பி.சி :: தமிழ்செய்தி ஒபாமாவின் தந்தையின் பிறப்பிடமான கென்யாவில் ஒபாமாவுக்கு 82 சதவீதமான ஆதரவும் இந்தியாவில் 9 வீதமான ஆதரவும் கிடைத்துள்ளது. 2. ஹெச்.2-பி விசா நடைமுறைகளை ஒழுங்குபடுத்த ஒபாமா ஆதரவு! :: வெப்துனியா அமெரிக்காவில் வேளாண் துறை அல்லாத மற்ற துறைகளில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் துறைகளில் ஏற்படும் பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்க, வெளிநாடுகளில் இருந்து ஹெச்.2-பி விசா மூலம் குறிப்பிட்ட காலத்துக்கு தற்காலிகமாக ஊழியர்கள் [...]

மே 9 – அமெரிக்க ஜனாதிபதி களம்

1. அமெரிக்காவில் பதவிக்கு போட்டியிடுபவர்கள் தாங்கள் வருமான வரி கட்டிய விவரங்களை வெளிப்படையாக சொல்வது வழக்கம். அதற்கேற்ப, ஜனநாயகக் கட்சி சார்பாக களத்தில் இருக்கும் ஒபாமா, இருந்த ஹில்லரி, குடியரசுக் கட்சியின் மெகெயின் ஆகியோர் ஏற்கனவே வெளியிட்டிருந்தார்கள். இந்நிலையில் ஜான் மெக்கெயினின் மனைவி சிண்டி தன்னுடைய ‘சொத்து குறித்த தகவல்களை எந்த நிலையிலும் பொதுவில் வைக்கமாட்டேன்‘ என்று பேட்டி அளித்து இருக்கிறார். மதுபான நிறுவனத்திற்கு சொந்தக்காரரான சிண்டியின் நிதிநிலை கிட்டத்தட்ட நூறு மில்லியனுக்கு மேல் மதிப்பிடப்படுகிறது. ஆதாரம்: [...]

ஜனநாயகக் கட்சி: 50%; குடியரசு – 37% ஆதரவு! ஆனால்…

இந்தியாவில் கட்சி/கூட்டணி சார்ந்த வோட்டுதான் பெரும்பாலும் விழும். ரஜினி வாய்ஸ் முதல் ராஜீவ் காந்தி வரை தனிப் பெரும் தலைவராக சிலர் முன்னிறுத்தப்பட்டாலும், ஆளுங்கட்சி vs எதிர்க்கட்சி இடையிலேயான போட்டி என்பதுதான் ஃபார்முலா. அமெரிக்காவில் தனி நபர் சார்ந்த அரசியல் முன் வைக்கப்படுகிறது. ரான் பால் முதல் ரொனால்ட் ரீகன் வரை எல்லாருமே குடியரசுக் கட்சி சின்னத்தில் நின்றாலும் தனிப்பட்ட கொள்கை, ஆளுமை போன்றவற்றால் ஜனநாயகக் கட்சியிலும் அபிமானிகளைப் பெற்று வைத்திருக்கிறார்கள். இன்றைய தேதியில் ‘எந்தக் கட்சிக்கு [...]

ஜெயிக்கப் போவது யாரு? – கருத்துக்கணிப்பு முடிவுகள்

நன்றி: லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ்

ரால்ஃப் நாடர் – சில குறிப்புகள்

அமெரிக்காவில் இரண்டே கட்சிகள்தான்; ஒன்று ஆளுங்கட்சி; மற்றொன்று எதிர் கட்சி. ஒரு வளர்ந்த மேற்கத்திய நாட்டுக்கு அடையாளமாக இரண்டு கட்சிகள்தான் வேண்டுமென்பது ப.சிதம்பரம் போன்ற படித்த ஜனநாயகவாதிகளின் கருத்து. குடியரசு (Republican party) மற்றும் ஜனநாயகக் கட்சி (Democratic party) இரண்டுக்கும் மாற்றாக பசுமை கட்சி (Green Party), மறுமலர்ச்சி கட்சி (Reform Party) போன்ற அமெரிக்க துக்கடாக்கள் முயன்று வருகிறார்கள். எட்டு வருடம் முன்பு நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஆல் கோரும் ஜார்ஜ் புஷ்ஷும், [...]

சூப்பர்டெலகேட்சுக்கு காசு கொடுத்து கவனிக்கும் ஜனநாயகக் கட்சி

Capital Eye – Seeking Superdelegates (வழி: Superdelegates get campaign cash): விடாக்கண்டர் ஹில்லரிக்கும், கொடாக்கண்டர் ஒபாமாவுக்கும் நடக்கும் இழுபறி சண்டை முடிகிறபாடாக இல்லை. தன்னுடைய சொந்த ஊரான இல்லினாய் தவிர வேறு எந்த பெத்த மாகாணத்திலும் ஒபாமா ஜெயிக்கவில்லை என்பதை முக்கிய குறையாக ஜனநாயகக் கட்சி கருத ஆரம்பித்துள்ளது. மார்ச் நான்காம் தேதி நடக்கும் ஒஹாயோ, டெக்சஸ் போன்ற மாபெரும் மாகாணங்களின் தேர்தல் வெற்றி, அந்தக் குறையை போக்கலாம்; அல்லது க்ளின்டனின் வாதத்திற்கு வலுசேர்க்கலாம். [...]

Follow

Get every new post delivered to your Inbox.