ஜெயிக்கப் போவது யாரு? - கருத்துக்கணிப்பு முடிவுகள்

நன்றி: லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ்

ரால்ஃப் நாடர் - சில குறிப்புகள்

அமெரிக்காவில் இரண்டே கட்சிகள்தான்; ஒன்று ஆளுங்கட்சி; மற்றொன்று எதிர் கட்சி. ஒரு வளர்ந்த மேற்கத்திய நாட்டுக்கு அடையாளமாக இரண்டு கட்சிகள்தான் வேண்டுமென்பது ப.சிதம்பரம் போன்ற படித்த ஜனநாயகவாதிகளின் கருத்து. குடியரசு (Republican party) மற்றும் ஜனநாயகக் கட்சி (Democratic party) இரண்டுக்கும் மாற்றாக பசுமை கட்சி (Green Party), மறுமலர்ச்சி கட்சி (Reform Party) போன்ற அமெரிக்க துக்கடாக்கள் முயன்று வருகிறார்கள். எட்டு வருடம் முன்பு நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஆல் கோரும் ஜார்ஜ் புஷ்ஷும், [...]

எலெக்டோரல் காலேஜ் - செல்லாத வோட்டு (மீள்பதிவு)

இந்தியாவில் வாக்காளர்கள் எம்.எல்.ஏ.க்களையும், எம்பிக்களையும் தேர்ந்தெடுப்போம். அவர்கள் முதலமைச்சரையும், பிரதம மந்திரியையும் அரியணையில் அமர்த்துவார்கள்.
அமெரிக்காவில் எம்.பி.க்கள் (ஹவுஸ் ஆஃப் ரெப்ரசேண்டேடிவ்ஸ் & செனேட்), எம்.எல்.ஏ. (உள்ளூர் ஹவுஸ் ஆஃப் ரெப்ரசேண்டேடிவ்ஸ் & உள்ளூர் செனேட்), ஆளுநர் (முதலமைச்சர்), ஜனாதிபதி (பிரதம மந்திரி) என எல்லாப் பதவிகளும் வாக்காளர்கள் கையில் இருக்கிறது.
இவற்றில் எம்.எல்.ஏ, எம்.பி., கவர்னர் — ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம், பிரச்சினை எதுவும் இல்லை. அனைத்து வோட்டுகளையும் ஒழுங்காக எண்ணி முடிப்பதில் வேண்டுமானால் ஆங்காங்கே சலசலப்புகள் எழலாம்.
அமெரிக்க [...]

மேரிலான்ட், வெர்ஜீனியா, டிசி: ஒபாமா & மெகெயின் வெற்றி

அமெரிக்காவில் இன்று நடந்த ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான தேர்தல்களில் குடியரசு கட்சி சார்பாக ஜான் மெக்கெயினும், ஜனநாயகக் கட்சி சார்பாக பராக் ஒபாமாவும் வென்றனர்.
ஒபாமா கடந்த எட்டு மாகாணங்களைத் தொடர்ச்சியாக வென்றதன் மூலம் பெரும்பான்மை பிரதிநிதிகளை ஹில்லரி க்ளின்டனிடமிருந்து கைப்பற்றியிருக்கிறார். எனினும் மார்ச் 4 நடக்கும் அடுத்த கட்ட ப்ரைமரிகளில் ஹில்லாரி தலைதூக்கினால் மீண்டும் முன்னிலை பெறமுடியும்.
அடுத்த செவ்வாய் அன்று, இரண்டு மாகாணங்கள் - விஸ்கான்சினும் ஹவாயும் வாக்களிக்க இருக்கிறது.
மார்ச் நான்கு வாக்குப்பதிவு நடக்க இருக்கும் டெக்சாஸில், இன்று [...]

வாரயிறுதி ப்ரைமரி முடிவுகள்

ஜனநாயகக் கட்சி:
மெயின் - பராக் ஒபாமா: 59%; ஹில்லரி க்ளின்டன்: 40%
லூயிஸியானா - பராக் ஒபாமா: 57%; ஹில்லரி க்ளின்டன்: 36%
வாஷிங்டன் - பராக் ஒபாமா: 68%; ஹில்லரி க்ளின்டன்: 31%
நெப்ராஸ்கா - பராக் ஒபாமா: 68%; ஹில்லரி க்ளின்டன்: 32%
குடியரசுக் கட்சி:
கன்ஸாஸ் - மைக் ஹக்கபீ: 68%;ஜான் மெக்கெயின்: 24%; ரான் பால்: 11%
லூயிஸியானா - மைக் ஹக்கபீ: 43%;ஜான் மெக்கெயின்: 42%
வாஷிங்டன் - ஜான் மெக்கெயின்: 26%; மைக் ஹக்கபீ: 24%; [...]