அடுத்தாத்து ஆல்பர்ட் – மூக்கு சுந்தர்

* ஒபாமாவுக்கு கருத்துக்கணிப்பில் இருக்கும் இதே அளவு செல்வாக்கு வேறு ஒரு வெள்ளை இனத்து ஜனநாயகக்கட்சி அதிபர் வேட்பாளருக்கு இருந்திருந்தால் தேர்தல் முடிந்தது என்று பலகாலம் முன்னரே முடிவுகட்டி இருப்பார்ர்கள். மெக்கெய்ன் ஆதரவாளர்கள் இன்னமும் துள்ளிக் கொண்டு இருப்பதற்கும், நம்பிக்கை இழக்காமல் பேசிக்கொண்டிருப்பதற்கும் ஒபாமவின் இன அடையாளமே காரணம்.
* இந்தத் தேர்தலில் கட்சி சார்புள்ளவர்களை விட கட்சி சார்பற்றவர்களே முடிவை தீர்மானிக்கும் காரணிகளாகிறார்கள். அடுத்ததாக இளைய தலைமுறையினர் மற்றும் – முதன் [...]

இந்த தேர்தலில் ஓபாமா வேட்பாளராக இருப்பதனால் இன்னுமொரு வித்தியாசம்!

இந்த தேர்தலில் ஓபாமா வேட்பாளராக இருப்பது பல அமெரிக்கர்களுக்கு வாக்களிப்பது பெருங்கடமையென நினைவுறுத்துகிறதென்றால் அதில் தவறேதுமிருக்காது.
இதுவரை வாக்களிக்கவே எண்ணம் இல்லாமலிருந்த பல கறுப்பர்கள் (60-70 வயதிலும்) இந்த முறை வாக்குச்சாவடிக்கு முதல் முறையாக வந்து வாக்களிக்கவிருக்கின்றனர்.
ஒபாமா தேர்தல் குழுவினரின் தீவிர முயற்சியாலும், ஓபாமா மீதான ஈர்ப்பாலும் இளைய, புதிய வாக்காளர்கள் பலர் வாக்களிக்கப் பதிந்திருக்கின்றனர், இவர்களில் பெருவாரியானவர்கள் வாக்களிக்கவிருக்கின்றனர்.
மேற்கண்ட இரு காரணங்களால் தூண்டப்பட்டு, ஆதரிக்கவும் எதிர்க்கவும், இதுவரை நடந்த தேர்தல்களில் ஒட்டுப் போட விருப்பமில்லாதவர்கள் வாக்குச்சாவடிக்கு வரவிருக்கின்றனர்.
இது [...]

அமெரிக்கத் தேர்தல் தகிடுதத்தங்கள் – I

அமெரிக்கா ஜனநாயகத்தின் மீது அதீத நம்பிக்கையும் பெருமையும் கொண்ட நாடாகத் தன்னைக் கருதிக்கொள்கிறது. கிட்டத்தட்ட இறை நம்பிக்கையை ஒத்த நம்பிக்கையும் பெருமையும் அது. உலகெங்கிலும் ஜனநாயகத்தை நிறுவிவிட வேண்டும் என்பதை ஒரு உன்னத நோக்கமாகக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. ஆயினும் ஜனநாயகத்தின் அடிப்படையான மக்கள் பிரதிநித்துவத்தின் உயரிய வெளிப்பாடான பொது வாக்கெடுப்பு முறை அமெரிக்காவில் மிகவும் குழப்பம் மிகுந்ததும் குறைபாடுகளுள்ளதுமாகவே காணப்படுகிறது.
1. கல்லூரிச் சாலை
அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுப்பவர்கள் எலக்டோரல் காலெஜ் எனப்படும் மக்கள் பிரதிநிதிகளின் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஆவர். [...]

தமிழ்ப்பதிவுகளில் அமெரிக்க அதிபர் தேர்தல்

ஒரு அகதியின் நாட்குறிப்பு
அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்படும் சாத்தியக்கூறுகள் மிகப்பிரகாசம் – பேராசிரியர் எரிக் அஸ்லானர் நேர்காணல் :: வீரகேசரி நாளேடு – 10/27
கேள்வி: இலங்கை போன்ற நாடுகளில் கடைசி நேர அனுதாப அலைகள் தேர்தல் முடிவில் தாக்கம் செலுத்துவது வரலாற்றில் நிருபணமாகியுள்ளது அந்தவகையில் தற்போது பின்னிலையிருக்கும் மக்கெய்னுக்கு சாதகமாக ஏதேனும் திடீர் திருப்பங்கள் ஏற்படச்சாத்தியமுள்ளதா?
:::
கேள்வி: இந்தத்தேர்தலுக்கு முன்னர் அதிகம் அறியப்படாத பராக் ஒபாமாவின் எழுச்சிக்கு காரணம் யாது?
பதில்:

ஒபாமா ஒரு ரொக் இசைக்கலைஞர் [...]

மெகயினிடம் எனக்குப் பிடித்தது என்ன? – சொ. சங்கரபாண்டி

சென்ற பதிவு
2. ஒபாமாவின் எந்தக் கொள்கை உங்களை அதிகம் கவர்ந்திழுத்து ஒத்திசைவாக தலையாட்ட வைக்கிறது?
ஒபாமா-பைடனின் வெளியுறவுக்கொள்கை. அதுவும் கூட புஷ் கொள்கைகளை ஆதரிக்கும்/தொடரவிருக்கும் மெக்கெய்ன்-பேலின் வந்துவிடக்கூடாதென்ற பயத்தில்தான்.
3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது?
இப்பொழுது எதுவுமில்லை.
2000 குடியரசுக் கட்சி முன்னோட்டத் தேர்தலின் போது புஷ்சுக்கு எதிராகப் போட்டியிட்ட காலத்தில் எனக்கு மெக்கெய்னைப் பிடிக்கும். ஒரு சில விசயங்களாவது இருந்தன அப்பொழுது. இப்பொழுது புஷ்சை ஆதரிப்பவர்களைப் பற்றி நினைக்கவே எரிச்சலாக இருக்கிறது.
4. இந்த இருவரும் இல்லாமல், [...]

தோழா… தோழா! தோள்கொடு தோழா!

இரண்டரை லட்சத்துக்கும் மேலாக லஞ்சம் வாங்கியதாக அலாஸ்காவின் செனேட்டர் டெட் ஸ்டீவன்ஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
‘உங்க ஊர்க்காரர் மேல் இந்த மாதிரி புகார் எழுந்துள்ளதே?’ என்று அலாஸ்காவின் கவர்னர் சாரா பேலினிடம் விசாரித்தபோது, அவரை ஆதரித்தோ, புறந்தள்ளியோ கருத்து சொல்ல மறுத்திருந்தார்.
ஜூரி முன் நடந்த வழக்கு தற்போது முடிந்து, இந்தக் குற்றங்கள் உறுதியாகியுள்ளன.
டெட் ஸ்டீவன்ஸ் தன்னுடைய வீட்டைப் புதுப்பிக்க $250,000 மதிப்புள்ள பொருள்களை பெற்றுக் கொண்டிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையிலும் துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பேலின் [...]

அமேரிக்க குடிமகள்

நேற்று மெக்கெயினும், ஒபாமாவும் எங்கள் ஊருக்கு வந்து சென்றார்கள்.
மெக்கெய்ன் கூட்டத்திற்கு 2000 பேர் கூட வரவில்லை, மிட்டாய் கொடுத்து மக்களை உபசரித்து உட்கார வைத்தார்கள் என்றும் – ஒபாமா கூட்டத்திற்கு 20000 பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது, 35000 மக்கள் வந்தார்கள் என்றும் சொல்கின்றது உள்ளூர் நாளிதழ். 
இது பற்றி எழுதி கிழிக்காமல் வாக்களிக்கச் (Early Voting) சென்ற சிறந்தவொரு அமேரிக்க குடிமகள் பற்றிய செய்தி குறிப்பு, கீழே, வெட்டி ஒட்டப்பட்டுள்ளது.
நன்றி:  http://kob.com/article/stories/S625956.shtml?cat=0
Suspected drunk passes out at [...]

சுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க தேர்தலும்: வாரயிறுதி விஐபி

பத்ரி:
1. தமிழக அரசியல் களத்திற்கும் அமெரிக்க அரசியல் களத்திற்கும் என்ன ஒற்றுமை?
இரண்டு தேர்தல்களிலும் மக்கள் அனைத்து ‘வயதுக்கு வந்தவர்களும்’ வாக்களிக்கிறார்கள் என்பதைத் தவிர ஒரு பொருத்தமும் இல்லை. அமெரிக்கத் தேர்தலில் இரண்டே இரண்டு ‘அங்கீகரிக்கப்பட்ட’ கட்சிகள்தான். சுயேச்சை வெற்றிபெறுவது கடினம். தேர்தல் கூட்டணி என்பது காணப்படாத ஒன்று.
2. அங்கு நடக்கும் தேர்தலுக்கும், இங்கு நிகழும் தேர்தலுக்கு ஆறு வித்தியாசங்கள் சொல்ல முடியுமா?
1. தமிழகத்தில் கொள்கை குறைவு – அல்லது இல்லவே இல்லை. வெறும் வாக்குறுதிகளும் ஹை-வோல்டேஜ் பிரசாரங்களும் [...]

வாக்குசீட்டு & வாக்காளர்

ஒரு அமேரிக்க வாக்காளரின் விபரம், அவர் கடந்த தேர்தல்களில் அளித்த வாக்கு விபரங்கள், இணையத்தில்:

மாதிரி வாக்குசீட்டு – 1/3 முன்பக்கம்:

மாதிரி வாக்குசீட்டு – 2/3 முன்பக்கம்:

வேலையிலிருக்கும் அனைத்து நீதிபதிகளுக்கு (முக்கால்வாசி ஜனநாயக கட்சியினர்) எதிர்த்து அளிக்கப்படும் வாக்காளரின் 2008 வாக்கு.
வாக்களிக்க முடிவு செய்துள்ளவை கரும் கோளத்தில் தெரிகின்றன!
ஒரு அமேரிக்க மாநிலத்தில் நடக்கவிருக்கும் அதிபர் மற்றைய தேர்தல்களின் முழு வாக்குசீட்டை காண ஆர்வமுள்ளோர், இங்கு காணலாம்:
வாக்குசீட்டு

இந்த வார விருந்தினர்: மூஸ் ஹன்ட்டர்

ஆதியில் டைனோபாய் வந்தார். இப்போது மூஸ்ஹன்ட்டர்.
அவரிடம் கேள்விக்கணைகளைத் தொடுக்குமுன் அவரைக் குறித்து பின்னணி கேட்டேன். அவர் சொன்னதில் இருந்து.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஹில்லரி க்ளின்டன் வரவேண்டுமென்று விரும்பினேன். 2016 வரை ஒபாமா காத்திருந்திருக்கலாம்!
என்னுடைய பீச்சாங்கை பக்கம் ஆப்பிரிக்க-அமெரிக்க குடும்பம் வசிக்கிறார்கள். சோத்தாங்கை பக்கம் இந்தியர்கள். எதிர்த்தாப்பல வெள்ளக்காரங்க. அந்தப்பக்கம் இரானில் இருந்து வந்திருக்கிறவங்க. ஒரே வெரைட்டிதான்!
ஜான் மெகயின கீட்டிங் விவாகாரத்துல விசாரிக்கறப்ப இந்த ஊருக்கு வந்து சேர்ந்தேன்.

இனி அவர்:
1. ஒபாமாவா? மெகெயினா? இரண்டும் பேரும் சரியில்லை என்று [...]

‘நான் சம்பாதிப்பதை அரசாங்கம் பிடுங்கிக் கொள்ளலாமா?’ – ஜோ

கடந்த ஞாயிறன்று பராக் ஒபாமா ஒவ்வொரு தெருவாக சென்று வாக்கு சேகரித்தார். அப்பொழுது குழாய்களை சரி செய்யும் ஜோ (Joe Wurzelbacher) என்பவர் கேட்ட கேள்விக்கு விரிவாக பதிலளிக்கிறார்:
வருடத்திற்கு 250,000 டாலருக்கு மேல் சம்பாதிக்கும் என்னை மேலும் வரி போட்டு வாட்டுவது சரியாகுமா? என்பது அவருடைய கேள்வி.

விவாதம் முடிந்தவுடன் சிபியெஸ் தொலைக்காட்சியின் கேட்டி கௌரிக் உடன் ஜோ உரையாடினார். அந்த ஒளிப்பதிவு மற்றும் பேட்டி:
Joe The Plumber's Chat With Couric [...]

கடைசி விவாதம்: யார் வென்றார்கள்?

ஜான் மெகயினுக்கும் பராக் ஒபாமாவிற்கும் இடையே மூன்றாவது தருக்கம் நடந்தேறியது.
உங்கள் கருத்து என்ன?

அடுத்த அதிபராக எவர் பொருத்தம்? – சத்யா

4. செனேட்டராக இருந்தபோதே தற்போதைய வீட்டுக்கடன் பிரச்சினையையும் அதன் மேலெழுந்த நிதிநிலை மதிப்பீடு நிலைகுலைவையும் கண்டுணர முடியாத ஒபாமாவா? இராக் மீது போர் தொடுத்தால் ஓரிரண்டு நாளில் அமெரிக்காவின் கடமை முடியும் என்று கணித்த மெகயினா? இருவரில் உங்கள் தேர்வு எவர்?
எனக்கு அமரிக்காவில் ஓட்டுரிமை இல்லை. அதனால் என்னுடைய உள்ளார்ந்த ஈடுபாடு ஒரு வேடிக்கை பார்ப்பவனின் மனநிலையே. அதனால் இந்த பதிலை அந்தக்கண்டோத்தில் பார்க்க கேட்டுக்கொள்கிறேன்.
ஆரம்பத்தில் ஒபாமாவின் பேச்சுக்களும் மாற்றம் மாற்றம் என்னும் தாரக மந்திரமும் சரியாக [...]

அலாஸ்கா கவர்னரின் சட்டமீறல்: ‘பேலின் அரசு குழந்தைத்தனமாக செயல்படுகிறது’

சாரா பேலின் பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளார் – அறிக்கை

குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் சாரா பேலின்

அமெரிக்க குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான அலாஸ்கா ஆளுநர் சாரா பேலின், தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அலாஸ்கா அரசியல் அமைப்பிற்காக நடத்தப்பட்ட சுயாதீன விசாரணையின் அறிக்கையில், மூத்த அதிகாரி ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் இந்த அதிகார துஷ்பிரயோகம் நடைபெற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சொந்த பிரச்சனைக்காக அலாஸ்காவின் பொதுபாதுகாப்பு ஆணையாளரான வால்டர் மோனிகனை சாரா [...]

மைத்ரேயன்: பரக் ஒபாமாவா? ஜான் மெகயினா?

மைத்ரேயனின் கருத்துகள்…
பராக்கின் ரசிகன் அல்ல நான்.
ஹார்வர்டில் ஒரு சட்டம் பயின்று அதில் உயர் ராங்கில் தேறிய ஒரு வலுவான சிந்தனையாளர். அவர் தான் போதித்த கல்லூரியில் (பல்கலையில்) இதர சட்டப் பேராசிரியர்களிடம் இருந்து தனித்து நின்று மாணவர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு பேராசிரியர்.
ஜனநாயக் கட்சி பெரும் திமிங்கிலங்கள் உலவும் ஒரு கட்சி. எந்தப் பெரும் நிதியாளரும், பணமுதலையும் தனக்கு உதவாதபோது, பல இளைஞர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஹிலரியின் + பில் கிளிண்டனின் 20 [...]

Srikanth Meenakshi: Obama’s Campaign Finance Pledge & System of Public Financing

ஸ்ரீகாந்த் மீனாக்ஷி கருத்துகளின் தொடர்ச்சி:
3. ஹில்லரி க்ளின்டனையும் சாரா பேலினையும் தாக்கிய விதம் ‘பராக் பெண்களுக்கு எதிரானவர்’ என்னும் பிம்பத்தை உருவாக்க இலகுவாக்கியிருக்கிறது. இதை அவர் எப்படி தடுத்திருக்கலாம்? உதட்டுச்சாயம்/பன்றி போன்ற உவமானங்கள் குறித்த உங்கள் அபிப்ராயம் என்ன?
பதில்: ஹில்லரி க்ளிண்டனையும் சாரா பேலினையும் எதிர்த்துப் பிரசாரம் நிகழ்த்துவது என்பதே ‘தாக்குவதற்கு’ இணையானது என்றால் அது அநியாயம். ‘என்னை எதிர்த்து என்ன சொன்னாலும் அது பெண்களையே அவமானம் செய்வதற்கு ஒப்பு’ என்று சொல்பவர்கள் பொது [...]

‘அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம்’ – செய்தித் தொகுப்பு

1. ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாவதே உலகெங்கிலுமுள்ள மக்களின் விருப்பம்-பி.பி.சி :: தமிழ்செய்தி
ஒபாமாவின் தந்தையின் பிறப்பிடமான கென்யாவில் ஒபாமாவுக்கு 82 சதவீதமான ஆதரவும் இந்தியாவில் 9 வீதமான ஆதரவும் கிடைத்துள்ளது.
2. ஹெச்.2-பி விசா நடைமுறைகளை ஒழுங்குபடுத்த ஒபாமா ஆதரவு! :: வெப்துனியா
அமெரிக்காவில் வேளாண் துறை அல்லாத மற்ற துறைகளில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் துறைகளில் ஏற்படும் பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்க, வெளிநாடுகளில் இருந்து ஹெச்.2-பி விசா மூலம் குறிப்பிட்ட காலத்துக்கு தற்காலிகமாக ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
3. அமெ‌‌ரி‌க்க ‌நி‌தியை [...]

கருத்துப் படங்கள்: அமெரிக்க ஜனாதிபதி & தேர்தல் – MAD Mag

மேட் இதழில் வெளியாகும் ஆறு வித்தியாசங்களை உல்டா அடித்து குமுதம் இதழ் வெளியிடுவதில்தான், MAD பத்திரிகையினை ஆரம்பத்தில் அறிந்தேன். சமீபத்திய இதழில் வெளியான அட்டைப்பட கார்ட்டூன் மற்றும் சினிமா விளம்பரங்களின் நக்கல் மறுபதிப்பு: