பராக் ஒபாமாவின் புதிய விளம்பரங்கள் - பென்சில்வேனியா பிரச்சாரம்

1. “Opportunity“
ஒபாமாவின் தாத்தா, பாட்டி, மற்றும் தனியாக விடப்பட்ட தாய் ஆகிய பின்னணியை விளக்கி, அறிமுகம் செய்கிறது. நடுத்தர வர்க்கத்திற்கான வரிவிலக்கை ஆதரிப்பவர், வேலைவாய்ப்பை பெருக்குபவர் என்று விரிகிறது.

இனம் குறித்த சர்ச்சை மிகுந்திருப்பதால், இந்த விளம்பரத்தில் ஒபாமாவும் அமெரிக்க சிந்தனையை உடையவர், நாட்டுப்பற்று மிக்கவர், சராசரி Caucasian பிரச்சினைகளை உணர்ந்தவர் என்பதை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆப்பிரிக்க - அமெரிக்கர்களை மட்டுமல்லாமல், தொழிற்சாலையில் வேலை பார்க்கும் வெள்ளை ஆண்களைக் குறிவைத்து அமைந்திருக்கிறது.
2. “Toughest”
வணிக நோக்கத்திற்கான குழுக்களுக்கு [...]

ஹில்லரி விடைபெற்றுக் கொண்டாரா - டெக்சாஸ் தர்க்கம்: சரசர குறிப்புகள்

இன்று தொலைக்காட்சியில் பார்த்த ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களின் விவாதத்தில் கவனத்தை ஈர்த்தவை:

‘இளைய தளபதி’ விஜய் பொது நிகழ்ச்சிகளில் அல்லது தான் நடித்த சினிமா படத்திற்கான சன் டிவி பேட்டியில் வரும்போது, பரபிரும்மம் போன்ற நிர்ச்சலனமான முகபாவத்துடன் கலந்து கொள்வார். பராக் ஒபாமாவும் அப்படியொரு அகத்தின் பிரதிபலிப்புகளை வெளிக்கொணராத தோரணையைக் கட்டிக் காத்தார்.

இதற்கு நேர் எதிராக இருந்தார் ஹில்லரி கிளிண்டன். ‘இராக் போருக்கு ஆதரவாக வாக்களித்தவர் எவ்வாறு மெகெயினுடன் தர்க்கிக்க முடியும்?‘ என்று ஒபாமா குற்றஞ்சாட்டியவுடன், இருக்கையில் நெளிந்து, [...]

ஒபாமா x ஹில்லரி - விளம்பர மோதல்: டிவி

1. விஸ்கான்சினில் ஹில்லரியின் அம்பு. ‘விவாதம் செய்ய அழைத்தால், ஒபாமா ஓடி ஒளிந்து கொள்கிறார்’ என்கிறார். ‘வெறும் வெட்டிப்பேச்சு உதவுமா’ என்று அஸ்திரம் பலமாகிறது:

அதன் தொடர்ச்சி:

2. சென்ற டிவி விளம்பரத்திற்கான பதிலடி. ‘பழைய குருடி; கதவைத் திறடி’ என்பது போல் அதே அரசியல் என்று சாடுகிறார்.

3. ஹில்லாரி க்ளின்டனின் நேர்மறையான விளம்பரம். எந்த விஷயங்களில் ஒபாமாவின் திட்டங்கள் சறுக்குகின்றன என்பதைத் தெளிவாக்குகின்றன:

4. இது சும்மா ஜாலிக்கு… நக்கல் விட்டுக்கறாங்க:

5. இவர்களின் விளம்பரங்களைக் குறித்த நியு யார்க் டைம்ஸின் [...]