ஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்?

ஆப்பிரிக்க – அமெரிக்க அதிபர் கிடைத்து விட்டார். முதல் பெண் ஜனாதிபதி எவராக இருக்கக் கூடும்? 61 வயதான ஹில்லரி க்ளின்டனுக்கு இனிமேல் அந்த வாய்ப்பு கிடைப்பது மிகவும் கஷ்டம். இந்திய வம்சாவழியை சேர்ந்தவர் எவராவது இருக்கிறாரா? ஏன், இல்லை – என்கிறார் கமலா தேவி ஹாரிஸ்: தொடர்புள்ள பதிவு: Kamala Harris, an early Barack Obama backer, is beginning her ascent | Top of the Ticket | Los Angeles [...]

கவர்ச்சிப்புயல் பேலினும் அமெரிக்க அதிபர் தேர்தலும் – தமிழக செய்தித் தொகுப்பு

ஜி- 8ல் இந்தியாவுக்கு இடம்: மெக்கைன் விருப்பம் – யாஹு ஜி- 8 அமைப்பில் இந்தியாவுக்கு இடம் அளிக்க வேண்டும் என்று, ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜான் மெக்கைன் விருப்பம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், உலக அளவில் இத்தேர்தல் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிந்து கொள்வதற்காக, ஜான் மெக்கைனின் தேர்தல் பிரச்சார ஆலோசகர் ரிச்சர்ட் ஆர் பர்ட், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இந்தியாவுக்கும் சென்று வந்துள்ளார். [...]

துக்கடா: கருத்து – குசும்பு – கும்மாங்குத்து

தோழா… தோழா! தோள்கொடு தோழா!

இரண்டரை லட்சத்துக்கும் மேலாக லஞ்சம் வாங்கியதாக அலாஸ்காவின் செனேட்டர் டெட் ஸ்டீவன்ஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. ‘உங்க ஊர்க்காரர் மேல் இந்த மாதிரி புகார் எழுந்துள்ளதே?’ என்று அலாஸ்காவின் கவர்னர் சாரா பேலினிடம் விசாரித்தபோது, அவரை ஆதரித்தோ, புறந்தள்ளியோ கருத்து சொல்ல மறுத்திருந்தார். ஜூரி முன் நடந்த வழக்கு தற்போது முடிந்து, இந்தக் குற்றங்கள் உறுதியாகியுள்ளன. டெட் ஸ்டீவன்ஸ் தன்னுடைய வீட்டைப் புதுப்பிக்க $250,000 மதிப்புள்ள பொருள்களை பெற்றுக் கொண்டிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையிலும் துணை [...]

சாரா பேலின் – போலி ஒளிப்படங்கள்

பேலினாயணம் – சாரா பேலின் மகாத்மியம்

குடியரசு கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பேலின் குறித்து நேற்று மட்டும் (மட்டுமே) வெளியான செய்திகள். இவர் மைய அரசு செயல்படும் விதத்தை மாற்றி, வாஷிங்டன் அரசின் செலவைக் குறைத்து, மற்ற அரசியல்வாதியைப் போல் இல்லாமல், வித்தியாசமாக, தன்னை உதாரணமாக முன்னிறுத்தி, தேவையில்லா விரயங்களை நீக்கி இயங்கப் போவதாக முன்னர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அரசு செலவில் குழந்தைகளுக்கு இன்ப சுற்றுலா குடும்பத்தோடு செல்ல வேண்டிய விழாக்களுக்கு கணவனையும் குழந்தைகளையும், அரசியல் கட்சித் தலைவர்கள் அழைத்துச் செல்லுதல் [...]

இந்த வார விருந்தினர்: மூஸ் ஹன்ட்டர்

ஆதியில் டைனோபாய் வந்தார். இப்போது மூஸ்ஹன்ட்டர். அவரிடம் கேள்விக்கணைகளைத் தொடுக்குமுன் அவரைக் குறித்து பின்னணி கேட்டேன். அவர் சொன்னதில் இருந்து. ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஹில்லரி க்ளின்டன் வரவேண்டுமென்று விரும்பினேன். 2016 வரை ஒபாமா காத்திருந்திருக்கலாம்! என்னுடைய பீச்சாங்கை பக்கம் ஆப்பிரிக்க-அமெரிக்க குடும்பம் வசிக்கிறார்கள். சோத்தாங்கை பக்கம் இந்தியர்கள். எதிர்த்தாப்பல வெள்ளக்காரங்க. அந்தப்பக்கம் இரானில் இருந்து வந்திருக்கிறவங்க. ஒரே வெரைட்டிதான்! ஜான் மெகயின கீட்டிங் விவாகாரத்துல விசாரிக்கறப்ப இந்த ஊருக்கு வந்து சேர்ந்தேன். இனி அவர்: 1. [...]

அமெரிக்காவில் ‘ஒபாமாவுக்காக தமிழர்கள்’ – அதிபர் தேர்தல் பதிவுகள்

1. சாரா பேலினும் சோனியா காந்தியும் :: முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை ஏ.பி.ஸி. (ABC) என்னும் டி.வி. நிறுவனம் இவரைப் பேட்டி கண்டபோது என்னென்னவோ உளறியிருக்கிறார். ‘ஜனாதிபதி புஷ்ஷின் கோட்பாடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று நிருபர் கேட்டதற்கு, ‘அவருடைய கொள்கையின் எந்த அம்சம் பற்றிக் கேட்கிறீர்கள்?’ என்று கேட்டு மழுப்பியிருக்கிறார். ‘ரஷ்யாவுக்கு மிக அருகில் உங்கள் மாநிலம் இருக்கிறதே. ரஷ்யா கடந்த இரண்டு வாரங்களில் நடந்துகொண்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்ற நிருபரின் கேள்விக்கு ‘அலாஸ்காவிலிருந்து [...]

முதன் முறையாக தமிழில் சாரா பேலின் நேர்காணல்: சத்யா

முதல் பகுதி 3. சாரா பேலினை தமிழில் மொழிபெயர்க்க உங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவரின் கேட்டி கௌரிக் பேட்டியையோ சார்லி கிப்ஸன் செவ்வியையோ தமிழாக்கிக் கொடுக்கவும். இவ்வளவு சுலபமான கேள்வியைக்கேட்டுட்டீங்க. சரி பரவாயில்லை. பேலின் பேட்டி கீழே பேலினை பேட்டி எடுப்பவர்: இப்போதைய பொருளாதாரத்தை பத்தி என்ன நினைக்கிறீங்க? சாரா பேலின்: அது வந்து .. ஆங்..மெக்கெயின் ஒரு அஞ்சாநெஞ்சர். இந்த மாதிரி மாபெரும் புரச்சிகர மனிதராலத்தான் இந்த தேசத்தை காப்த்தமுடியும் வேணும்னா ரோட்டோரமா உங்காந்து பீடி புடிக்கறவற [...]

அலாஸ்கா கவர்னரின் சட்டமீறல்: ‘பேலின் அரசு குழந்தைத்தனமாக செயல்படுகிறது’

சாரா பேலின் பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளார் – அறிக்கை குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் சாரா பேலின் அமெரிக்க குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான அலாஸ்கா ஆளுநர் சாரா பேலின், தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அலாஸ்கா அரசியல் அமைப்பிற்காக நடத்தப்பட்ட சுயாதீன விசாரணையின் அறிக்கையில், மூத்த அதிகாரி ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் இந்த அதிகார துஷ்பிரயோகம் நடைபெற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சொந்த பிரச்சனைக்காக அலாஸ்காவின் பொதுபாதுகாப்பு ஆணையாளரான [...]

இரு வாலிபர்கள்: புகைப்படக்காரர்களும் ஓவியர்களும்

சாரா பேலின் கலந்து கொண்ட கூட்டத்தில் கிடைத்த புகைப்படம்: சாரா பேலின் ஆதரவாளர் இருவரின் உற்சாக கரகோஷம்: Jean-Honore Fragonard: The Swing This picture became an immediate success, not merely for its technical excellence, but for the scandal behind it. The young nobleman is not only getting an interesting view up the lady’s skirt, but she is being pushed into [...]

உள்ளடக்கமும் உருவமும்: துணை ஜனாதிபதி வேட்பாளர்கள் விவாதம்

அமெரிக்க ஜனாதிபதியாக போட்டியிடும் பராக் ஒபாமாவுக்கு துணையாகப் போட்டியிடும் ஜோ பைடனும், குடியரசுக் கட்சியின் ஜான் மெக்கெய்னுடன் களமிறங்கும் சாரா பேலினும் முதலும் கடைசியுமாக ஒளிபரப்பு செய்யப்பட்ட விவாதத்தில் கலந்து கொண்டனர். இந்த விவாதத்தில் யாரும் வெற்றி பெற்றது போல (எனக்குத்) தெரியவில்லை. ஆனால், ஜோ பைடன் வென்றதாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். எனினும், சாரா பேலினும் சரிசமமான மனங்களை கவர்ந்திழுத்து, ஏற்கனவே குடியரசு சார்புடையவர்களையும் தக்கவைத்திருப்பார் என்றே எனக்குப் படுகிறது. ஏன்? ஒபாமாவின் திட்டங்களை பைடன் வலியுறுத்தினார். [...]

குடியரசு வேட்பாளர்: சாரா பேலின் – வலையக கணக்கு வழக்கு

சாரா பேலின் துணை ஜனாதிபதியாகிறாரோ இல்லையோ… அமெரிக்க நிறுவனங்களும் பங்குச்சந்தையும் அதலபாதாளம் பாய்ந்தாலும் குடியரசுக் கட்சியின் உபவேட்பாகர்தான் செய்திகளில் எக்கச்சக்கமாய் புழங்குகிறார். அவரைக் குறித்து கண்டதும் கேட்டதும்: வலைப்பதிவுகள்/கருத்து: சாரா பேலின் பெண் என்னும் கருத்தாக்கத்தில் எப்படி புகைப்படம் எடுக்கிறார்கள், அமெரிக்க ஊடகங்களில் எத்தகைய நிழற்படங்கள் வெளியாகின்றன என்பது குறித்த ஏமி வில்சனின் பதிவு: Picturing Sarah Palin « working வாக்கு வங்கி அரசியலாக கைக்குழந்தையை அலைக்கழிக்கிறாரா (அ) அமெரிக்காவில் அலுவலில் சின்னஞ்சிறுசுகளை கொண்டுவர முடியுமா: [...]

‘அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம்’ – செய்தித் தொகுப்பு

1. ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாவதே உலகெங்கிலுமுள்ள மக்களின் விருப்பம்-பி.பி.சி :: தமிழ்செய்தி ஒபாமாவின் தந்தையின் பிறப்பிடமான கென்யாவில் ஒபாமாவுக்கு 82 சதவீதமான ஆதரவும் இந்தியாவில் 9 வீதமான ஆதரவும் கிடைத்துள்ளது. 2. ஹெச்.2-பி விசா நடைமுறைகளை ஒழுங்குபடுத்த ஒபாமா ஆதரவு! :: வெப்துனியா அமெரிக்காவில் வேளாண் துறை அல்லாத மற்ற துறைகளில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் துறைகளில் ஏற்படும் பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்க, வெளிநாடுகளில் இருந்து ஹெச்.2-பி விசா மூலம் குறிப்பிட்ட காலத்துக்கு தற்காலிகமாக ஊழியர்கள் [...]

சாரா பேலின் – கருத்துப்படங்கள்

நன்றி: ஸ்லேட் தொகுப்பு

தமிழ் ஊடகங்களில் குடியரசுக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர்

1.தினத்தந்தி அமெரிக்க குடியரசு கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக பெண் கவர்னர் தேர்வு வாஷிங்டன், ஆக.31- அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக ஜான் மெக்கைன் போட்டியிடுகிறார். அவர் தனது கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சாரா பாலின் என்ற பெண்ணை தேர்வு செய்துள்ளார். 44 வயதான பாலின், அலாஸ்கா மாநில கவர்னர் ஆவார். அவருக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். அவர் எரிசக்தி விவகாரங்களில் அனுபவம் வாய்ந்தவர். எதிர்க்கட்சியில், அதிருப்தியாக உள்ள ஹிலாரி கிளிண்டனின் ஆதரவாளர்களை [...]

Follow

Get every new post delivered to your Inbox.