‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா?’ – வாஷிங்டனில் நல்ல தம்பி

இவரின் முந்தைய பதிவு: மாநாடுகள் குறித்த ஒரு ஒப்பீட்டு அலசல்
தொடர்புள்ள பதிவு: வாக்களித்த வைபவம் – மைத்ரேயன்
நேற்று மாலை அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பொழுது 6 மணிக்கே நன்கு இருட்டி விட்டிருந்தது. லேசான மழையில் இலையுதிர்க்கால பொன்னிற இலைகளின் சருகுகளால் சாலையோரங்கள் பொன்னிறக் காசுக் குவியல் போல மழைநீரில் மின்னிக் கொண்டிருந்தன. சிக்னலில் சிவப்பு விழ அநிச்சையாக கால்கள் காரை நிறுத்தின. மழை பெய்யும் பொழுது சிக்னல்களின் மஞசள், சிவப்பு, பச்சைகளை ஒரு [...]

இன்று இரவு மெகயின் ஏன் ஜெயிக்கக் கூடும்?

முதலில் வீடியோ பார்த்துவிடவும்: (இறுதி வரை பார்க்கவும்)

அமெரிக்காவில் ஈகோ முக்கியம். தோல்வி என்பது அகராதியில் கூடாது. இராக்கில் பின்வாங்கும் ஒபாமாவுக்கு வாக்கா? அல்லது வெற்றித் திருமகன் ஜான் மெகயினா?
போரில் சிறைபிடிக்கப்பட்டாலும் உள்ளந்தளராத உத்தமர் மெகயின் என்பது முதற் காரணம்.
அடுத்த வீடியோவும் அமெரிக்கர்களின் மனவோட்டத்தை சொல்கிறது:

நீங்கள் சம்பாதிக்கும் ஓரணாவில் இருந்து அரையணாவைப் பிடுங்கி, பிச்சையெடுப்பவருக்கு தரும் ஒபாமாவுக்கு ஓட்டா? அள்ளது சோம்பேறிகளை உழைத்து சம்பாதித்து முன்னேறச் சொல்லும் [...]

அமெரிக்கத் தேர்தல் தகிடுதத்தங்கள்: III

அமெரிக்கத் தேர்தல்  தகிடுதத்தங்கள்: I
அமெரிக்கத் தேர்தல் தகிடுதத்தங்கள்: II
5.பொய் சொல்லப் போறோம்
மேலே பட்டியலிடப்பட்டிருக்கும் குறைகளுக்கும் மேலாக அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களும் சில அரசு அதிகாரிகளுமே மக்களை குழப்பிவிடும் விஷமத்தனத்தைச் செய்யும் வழக்கமும் கிட்டத்தட்ட அண்மைய தேர்தல்கள் அனைத்திலும் தலைதூக்குகின்றன. 2008 தேர்தலில் ஏற்கனவே கறுப்பின நிறுபான்மையினர் வாழும் பல பகுதிகளில் வாக்களிக்கச் செல்பவர்கள் Parking Violations உட்பட்ட சிறு சட்ட மீறல்கள் செய்தவர்களாயின் கைது செய்யப்படுவார்கள் என துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சில இடங்களில் துண்டு பிரசுரங்களில் [...]

தமிழ்ப்பதிவுகளில் அமெரிக்க அதிபர் தேர்தல்

ஒரு அகதியின் நாட்குறிப்பு
அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்படும் சாத்தியக்கூறுகள் மிகப்பிரகாசம் – பேராசிரியர் எரிக் அஸ்லானர் நேர்காணல் :: வீரகேசரி நாளேடு – 10/27
கேள்வி: இலங்கை போன்ற நாடுகளில் கடைசி நேர அனுதாப அலைகள் தேர்தல் முடிவில் தாக்கம் செலுத்துவது வரலாற்றில் நிருபணமாகியுள்ளது அந்தவகையில் தற்போது பின்னிலையிருக்கும் மக்கெய்னுக்கு சாதகமாக ஏதேனும் திடீர் திருப்பங்கள் ஏற்படச்சாத்தியமுள்ளதா?
:::
கேள்வி: இந்தத்தேர்தலுக்கு முன்னர் அதிகம் அறியப்படாத பராக் ஒபாமாவின் எழுச்சிக்கு காரணம் யாது?
பதில்:

ஒபாமா ஒரு ரொக் இசைக்கலைஞர் [...]

மெகயினிடம் எனக்குப் பிடித்தது என்ன? – சொ. சங்கரபாண்டி

சென்ற பதிவு
2. ஒபாமாவின் எந்தக் கொள்கை உங்களை அதிகம் கவர்ந்திழுத்து ஒத்திசைவாக தலையாட்ட வைக்கிறது?
ஒபாமா-பைடனின் வெளியுறவுக்கொள்கை. அதுவும் கூட புஷ் கொள்கைகளை ஆதரிக்கும்/தொடரவிருக்கும் மெக்கெய்ன்-பேலின் வந்துவிடக்கூடாதென்ற பயத்தில்தான்.
3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது?
இப்பொழுது எதுவுமில்லை.
2000 குடியரசுக் கட்சி முன்னோட்டத் தேர்தலின் போது புஷ்சுக்கு எதிராகப் போட்டியிட்ட காலத்தில் எனக்கு மெக்கெய்னைப் பிடிக்கும். ஒரு சில விசயங்களாவது இருந்தன அப்பொழுது. இப்பொழுது புஷ்சை ஆதரிப்பவர்களைப் பற்றி நினைக்கவே எரிச்சலாக இருக்கிறது.
4. இந்த இருவரும் இல்லாமல், [...]

சுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க தேர்தலும்: வாரயிறுதி விஐபி

பத்ரி:
1. தமிழக அரசியல் களத்திற்கும் அமெரிக்க அரசியல் களத்திற்கும் என்ன ஒற்றுமை?
இரண்டு தேர்தல்களிலும் மக்கள் அனைத்து ‘வயதுக்கு வந்தவர்களும்’ வாக்களிக்கிறார்கள் என்பதைத் தவிர ஒரு பொருத்தமும் இல்லை. அமெரிக்கத் தேர்தலில் இரண்டே இரண்டு ‘அங்கீகரிக்கப்பட்ட’ கட்சிகள்தான். சுயேச்சை வெற்றிபெறுவது கடினம். தேர்தல் கூட்டணி என்பது காணப்படாத ஒன்று.
2. அங்கு நடக்கும் தேர்தலுக்கும், இங்கு நிகழும் தேர்தலுக்கு ஆறு வித்தியாசங்கள் சொல்ல முடியுமா?
1. தமிழகத்தில் கொள்கை குறைவு – அல்லது இல்லவே இல்லை. வெறும் வாக்குறுதிகளும் ஹை-வோல்டேஜ் பிரசாரங்களும் [...]

அமெரிக்க அதிபரின் தலையாய கடமை

அமெரிக்காவில்:

எவருக்கு வாக்களிக்க உரிமை இருக்கிறது (ஆண்கள், பெண்கள், கறுப்பர், குடிபுகுந்தோர், குற்றம் புரிந்தோர் போன்ற பிரிவுகளில்) என்று யார் அறிவுறுத்துகிறார்கள்?
எது சுதந்திரம் (துப்பாக்கி வைத்துக் கொள்ளுதல், கருவைத் தக்க வைத்துக் கொள்ளுதல் அல்லது சுயமாக நிர்ணயம் செய்வது போன்ற பிரச்சினைகளில்) என்று எவர் முடிவெடுக்கிறார்கள்?
சமூக நீதியை (சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு, ஆண்/பெண் ஏற்றத்தாழ்வு, வந்தேறிகளுக்கும் குடிமகன்களுக்கும் இடையே வித்தியாசங்களை) பரிபாலிப்பவர் யார்?
இன்ன பிற (சுற்றுச்சூழல் மாசு, புகை பிடித்தல், நோய்க்கான மருந்து போன்றவற்றில் நிறுவனங்களுக்கும் அரசாங்கத்துக்கும் தனிமனிதனுக்கும் இடையே [...]

இந்த வார விருந்தினர்: மூஸ் ஹன்ட்டர்

ஆதியில் டைனோபாய் வந்தார். இப்போது மூஸ்ஹன்ட்டர்.
அவரிடம் கேள்விக்கணைகளைத் தொடுக்குமுன் அவரைக் குறித்து பின்னணி கேட்டேன். அவர் சொன்னதில் இருந்து.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஹில்லரி க்ளின்டன் வரவேண்டுமென்று விரும்பினேன். 2016 வரை ஒபாமா காத்திருந்திருக்கலாம்!
என்னுடைய பீச்சாங்கை பக்கம் ஆப்பிரிக்க-அமெரிக்க குடும்பம் வசிக்கிறார்கள். சோத்தாங்கை பக்கம் இந்தியர்கள். எதிர்த்தாப்பல வெள்ளக்காரங்க. அந்தப்பக்கம் இரானில் இருந்து வந்திருக்கிறவங்க. ஒரே வெரைட்டிதான்!
ஜான் மெகயின கீட்டிங் விவாகாரத்துல விசாரிக்கறப்ப இந்த ஊருக்கு வந்து சேர்ந்தேன்.

இனி அவர்:
1. ஒபாமாவா? மெகெயினா? இரண்டும் பேரும் சரியில்லை என்று [...]

‘நான் சம்பாதிப்பதை அரசாங்கம் பிடுங்கிக் கொள்ளலாமா?’ – ஜோ

கடந்த ஞாயிறன்று பராக் ஒபாமா ஒவ்வொரு தெருவாக சென்று வாக்கு சேகரித்தார். அப்பொழுது குழாய்களை சரி செய்யும் ஜோ (Joe Wurzelbacher) என்பவர் கேட்ட கேள்விக்கு விரிவாக பதிலளிக்கிறார்:
வருடத்திற்கு 250,000 டாலருக்கு மேல் சம்பாதிக்கும் என்னை மேலும் வரி போட்டு வாட்டுவது சரியாகுமா? என்பது அவருடைய கேள்வி.

விவாதம் முடிந்தவுடன் சிபியெஸ் தொலைக்காட்சியின் கேட்டி கௌரிக் உடன் ஜோ உரையாடினார். அந்த ஒளிப்பதிவு மற்றும் பேட்டி:
Joe The Plumber's Chat With Couric [...]

அடுத்த அமெரிக்க அதிபருக்கு நிச்சயம் ஆப்பு – சத்யா

5. ஒபாமா 98% ஜனநாயகக் கட்சியின் கொறடா/வழிகாட்டலின் படி செனேட்டில் வாக்களித்திருக்கிறார். ஜான் மகயின் 90% புஷ்ஷோடு ஒத்துப் போய் இருக்கிறார். இவர்களுக்கு ‘மாற்றம்’ தாரக மந்திரத்தையும் ‘மேவ்ரிக்’ பட்டத்தையும் வைத்துக் கொள்ள என்ன தகுதி உள்ளது? Bipartisan என்று முழங்கினாலும் செய்கையில் அதை நிரூபிக்காதவர்களின் அடுத்த நான்கு வருடங்கள் புஷ்ஷோடு ஒப்பிட்டால் எவ்வாறு வேறுபடும்?
நூறு சதவிகிதம் ஒத்துக்கொள்கிறேன். இருவருக்கும் ஒரு பெரும் வித்தியாசம் இருப்பதாக தோன்றவில்லை பார்க்க ‘என் ஓட்டு’ கேள்வியில்.
அரசியலில் வாய்ப்பந்தல் போடுபது எல்லாமே [...]

அடுத்த அதிபராக எவர் பொருத்தம்? – சத்யா

4. செனேட்டராக இருந்தபோதே தற்போதைய வீட்டுக்கடன் பிரச்சினையையும் அதன் மேலெழுந்த நிதிநிலை மதிப்பீடு நிலைகுலைவையும் கண்டுணர முடியாத ஒபாமாவா? இராக் மீது போர் தொடுத்தால் ஓரிரண்டு நாளில் அமெரிக்காவின் கடமை முடியும் என்று கணித்த மெகயினா? இருவரில் உங்கள் தேர்வு எவர்?
எனக்கு அமரிக்காவில் ஓட்டுரிமை இல்லை. அதனால் என்னுடைய உள்ளார்ந்த ஈடுபாடு ஒரு வேடிக்கை பார்ப்பவனின் மனநிலையே. அதனால் இந்த பதிலை அந்தக்கண்டோத்தில் பார்க்க கேட்டுக்கொள்கிறேன்.
ஆரம்பத்தில் ஒபாமாவின் பேச்சுக்களும் மாற்றம் மாற்றம் என்னும் தாரக மந்திரமும் சரியாக [...]

‘அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம்’ – செய்தித் தொகுப்பு

1. ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாவதே உலகெங்கிலுமுள்ள மக்களின் விருப்பம்-பி.பி.சி :: தமிழ்செய்தி
ஒபாமாவின் தந்தையின் பிறப்பிடமான கென்யாவில் ஒபாமாவுக்கு 82 சதவீதமான ஆதரவும் இந்தியாவில் 9 வீதமான ஆதரவும் கிடைத்துள்ளது.
2. ஹெச்.2-பி விசா நடைமுறைகளை ஒழுங்குபடுத்த ஒபாமா ஆதரவு! :: வெப்துனியா
அமெரிக்காவில் வேளாண் துறை அல்லாத மற்ற துறைகளில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் துறைகளில் ஏற்படும் பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்க, வெளிநாடுகளில் இருந்து ஹெச்.2-பி விசா மூலம் குறிப்பிட்ட காலத்துக்கு தற்காலிகமாக ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
3. அமெ‌‌ரி‌க்க ‌நி‌தியை [...]

கருத்துப் படங்கள்: அமெரிக்க ஜனாதிபதி & தேர்தல் – MAD Mag

மேட் இதழில் வெளியாகும் ஆறு வித்தியாசங்களை உல்டா அடித்து குமுதம் இதழ் வெளியிடுவதில்தான், MAD பத்திரிகையினை ஆரம்பத்தில் அறிந்தேன். சமீபத்திய இதழில் வெளியான அட்டைப்பட கார்ட்டூன் மற்றும் சினிமா விளம்பரங்களின் நக்கல் மறுபதிப்பு:

தமிழ் ஊடகங்களில் :: அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் ஜோ பைடன்’

தமிழ் பிபிசி:
நவம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் பேட்டியிடும் பராக் ஒபாமா, துணை அதிபர் வேட்பாளராக செனட்டர் ஜோ பைடன் போட்டியிடுவார் என்பதை உறுதி செய்துள்ளார்.
சில நாட்களுக்கு இருந்த ஊகங்களுக்கு மத்தியில், காலை மூன்று மணிக்கு லட்சக்கணக்கான தனது ஆதரவாளர்களுக்கு அலைபேசி குறுந்தகவல் மூலம் இந்த செய்தியை பராக் ஒபாமா உறுதி செய்துள்ளார்.
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக செனட்டில் பணிபுரிந்து வரும் ஜோ பைடன், செனட்டின் செல்வாக்கு மிக்க வெளியுறவு திட்டக்குழுவின் தலைவராகவும் [...]

எலெக்டோரல் காலேஜ் – செல்லாத வோட்டு (மீள்பதிவு)

இந்தியாவில் வாக்காளர்கள் எம்.எல்.ஏ.க்களையும், எம்பிக்களையும் தேர்ந்தெடுப்போம். அவர்கள் முதலமைச்சரையும், பிரதம மந்திரியையும் அரியணையில் அமர்த்துவார்கள்.
அமெரிக்காவில் எம்.பி.க்கள் (ஹவுஸ் ஆஃப் ரெப்ரசேண்டேடிவ்ஸ் & செனேட்), எம்.எல்.ஏ. (உள்ளூர் ஹவுஸ் ஆஃப் ரெப்ரசேண்டேடிவ்ஸ் & உள்ளூர் செனேட்), ஆளுநர் (முதலமைச்சர்), ஜனாதிபதி (பிரதம மந்திரி) என எல்லாப் பதவிகளும் வாக்காளர்கள் கையில் இருக்கிறது.
இவற்றில் எம்.எல்.ஏ, எம்.பி., கவர்னர் — ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம், பிரச்சினை எதுவும் இல்லை. அனைத்து வோட்டுகளையும் ஒழுங்காக எண்ணி முடிப்பதில் வேண்டுமானால் ஆங்காங்கே சலசலப்புகள் எழலாம்.
அமெரிக்க [...]

அமெரிக்க அதிபர் தேர்தல் – எம் மணிகண்டன் (தினமணி)

உலகின் வலிமை மிகுந்த தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர் அமெரிக்க அதிபர். அவர் அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கோ, அமைச்சரவைக்கோ கட் டுப்பட்டவரல்ல. எந்தப் பிரச்னையிலும் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியும்.
அவரைப் பதவியிலிருந்து நீக்குவதும் சாதாரண விஷயமல்ல. தேசத்துரோகம், கொள்ளை போன்ற மோசமான குற்றங்களுக்காக மட்டுமே அவர்மீது நாடாளுமன்றம் குற்றவிசாரணை செய்து பதவியி லிருந்து நீக்க முடியும். வேறு தண்டனை எதுவும் வழங்கிவிட முடியாது. உலகிலேயே ராணுவம், பொருளாதாரம், தொழில்நுட்பத்தில் வல்லரசாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் ஒரு நாட்டின் அதிபருக்கு இவ்வளவு அதிகாரங்கள் தரப்பட்டிருக்கின்றன [...]

ரான் பால் – நியூஸ்வீக்

முன்னாள் ஜனாதிபதி அமரர் ரொனால்ட் ரேகனின் பரிந்துரையைப் பெற்றவராமே ரான் பால்? அப்படியா!
உலக சாம்ராஜ்யத்தை கோலோச்ச, வருடத்திற்கு ஒரு ட்ரில்லியன் (எத்தனை முட்டை!) அமெரிக்க வெள்ளிகளை செலவழிக்கிறார்களாமே?? அப்பப்பா!!
அதிரகசியமாய் கனடா, மெக்சிகோவுடன் கைகோர்த்து நாஃப்தா திட்டம் தயாராகிறதாமே? (இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என்றாலும் !!!)

விரிவாகப் படிக்க, தெளிய…: Wrong Paul | Newsweek.com: “Fantasy, fallacy and factual fumbles from the Republican insurgent.”

தென்றல் இதழ்: அமெரிக்க அதிபர் தேர்தல் ‘08 – சுந்தரேஷ்

தென்றல் (இலவசம்) பதிவு செய்தால், இணையத்தில் படிக்கலாம். முழுக் கட்டுரையில் இருந்து விவாதிக்கத்தக்க கருத்துகள் சில:

மைக் ஹக்கபீ சதர்ன் பாப்டிஸ்ட் பிரிவைச் சார்ந்த ஒரு மதத்தொண்டர். (இந்திய வடகிழக்கு மாநிலங்களில் பாப்டிஸ்ட் சர்ச்சின் ஆதரவுடன் பயங்கரவாதிகள் கிறிஸ்தவத் தனிநாடு கேட்டு போராடி வருவது தெரிந்திருக்கலாம்). எவாஞ்சலிகல் கிறிஸ்தவர்களின் ஆதரவைப் பெற்றவர். அதே சமயம் மெக்சிகோவிலிருந்து சட்டவிரோதமாகப் புலம்பெயர்பவர்களுக்கு மிக ஆதரவானவர்.
பல பிரச்சினைகளில் தெளிவாகக் கறுப்பின மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதன் மூலம் ஹிலாரி பராக் ஒபாமாவை விடக் [...]