முன்று மாநிலங்களில் ஹில்லரி வெற்றி

இன்றைய ஜனநாயக கட்சியின் முன்னோட்ட தேர்தலில் ஹில்லரி மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளார். ஒபாமா ஒரு மாநிலத்தில் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறார். மிக முக்கிய மாநிலங்களான ஓகாயோ, டெக்சாஸ் ஆகிய இரு மாநிலங்களிலும் ஹில்லரி வெற்றி பெற்றுள்ளார். இந்த இரு மாநிலங்களிலும் வெற்றி பெற்றால் தான் இந்த போட்டியில் ஹில்லரி தொடர முடியும் என்ற நிலை இருந்தது.
ஹில்லரியின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒபாமா நாப்டா - NAFTA குறித்த சில சர்ச்சைகளில் சிக்கினார். [...]

ஒபாமா - ஹில்லரி டெக்சாஸ் விவாதம்

இன்று டெக்சாஸில் சி.என்.என் தொலைக்காட்சியில் ஜனநாயகக் கட்சியின் விவாதம் நடைபெற்றது. டெக்சாஸ், ஓகாயோ ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் இருக்கும் ஹில்லரிக்கு இந்த விவாதம் ஒரு முக்கிய வாய்ப்பாக இருக்கும் என கருதப்பட்டது. இந்த விவாதம் மூலம் தன் ஆதரவு வாக்குகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய சூழலில் ஹில்லரி இருந்தார்.
பொதுவாகவே விவாதங்களில் ஹில்லரி, ஜான் எட்வேர்ட்ஸுடன் ஒப்பிடும் பொழுது ஒபாமா அவ்வளவாக எடுபடுவதில்லை. பல இடங்களில் ஒபாமா தடுமாறுவார். ஹில்லரி தன் கருத்துக்களை [...]

விஸ்கான்சின் மாநிலத்தில் ஒபாமா வெற்றி

விஸ்கான்சின் மாநிலத்தில் ஒபாமா வெற்றி பெறுவார் என சி.என்.என் அறிவித்துள்ளது. தற்பொழுது ஓட்டு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் ஒபாமா முன்னிலையில் உள்ளார். இந்த மாநிலத்தில் ஒபாமா வெற்றி பெற்றால் அவர் பெறும் 9வது தொடர் வெற்றியாகும்.
இது ஹில்லரி கிளிண்டன் நிச்சயம் தோல்வி அடையக்கூடும் என்பதன் திட்டவட்டமான அறிகுறியாகவே தெரிகிறது. காரணம் ஹில்லரி கிளிண்டனுக்கு சாதகமான வாக்களார்கள் அதிகம் கொண்ட மாநிலமாக விஸ்கான்சின் கருதப்பட்டது.
விஸ்கான்சின் தோல்வி அடுத்து வரும் டெக்சாஸ், ஓகாயோ போன்ற மாநிலங்கள் ஹில்லரிக்கு வாழ்வா, [...]

அமெரிக்காவின் தேர்தல் சுவாரசியங்கள்

எல்லா நாடுகளிலும், அரசியல் குறித்தும் அரசியல்வாதிகள் குறித்தும் பெரிய நம்பிக்கைகள் இல்லை. ஒபாமா தன்னுடைய “The Audacity of Hope” என்ற புத்தகத்தில் அவர் முதன் முறையாக தேர்தலில் நிற்க முனைந்த பொழுது உனக்கு எதற்கு இந்த மோசமான அரசியல் என பலர் அவரிடம் கேட்டதாக குறிப்பிடுகிறார்
“You seem like a nice enough guy. Why do you want to go into something dirty and nasty like politics”
இங்கு தேர்தல் பிரச்சார [...]

கறுப்பர் பிரச்சனைகளை பேச மறுக்கும் ஒபாமா கறுப்பர்களின் வேட்பாளரா ?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் உலகில் உள்ள பலரின் கவனத்தை ஈர்த்து இருப்பவர் பாராக் ஒபாமா. இவர் ஜனநாயக கட்சியின் வேட்பாளாராக வெற்றி பெற்று பிறகு ஜனாதிபதி தேர்தலையும் வென்றால் அமெரிக்காவின் முதல் ஆப்ரிகன் அமெரிக்கன் (கறுப்பர்) ஜனாதிபதி என்ற சரித்திரம் நிகழும். ஆனால் இந்த சரித்திரங்கள் எந்தளவுக்கு அவர் சார்ந்த சமுதாயத்திற்கு உதவக்கூடும் ?
எந்த நாட்டிலும் இத்தகைய “முதல்” சரித்திரங்கள் அந்த தலைவர்கள் சார்ந்து இருந்த சமுதாயத்திற்கு உதவியதில்லை. இந்தியாவிலேயே எத்தனையோ உதாரணங்கள் உண்டு. இந்தியாவின் [...]

ஒபாமா கறுப்பரா ? ஒபாமா கறுப்பர்களின் பிரதிநிதி அல்ல…

சுமார் 80% கறுப்பர்கள் ஒபாமாவை ஆதரிப்பதாக சமீபத்தில் சி.என்.என் தெரிவித்தது. ஆனால் ஒபாமா உண்மையில் கறுப்பரா என்ற கேள்விகளும் இங்கு உண்டு. ஒபாமாவின் அம்மா கறுப்பர் அல்ல. ஒரு வெள்ளையர். அவர் அப்பா ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் கறுப்பர்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையை ஒபாமா எதிர்கொள்ளவில்லை. எனவே அவர் அமெரிக்க கறுப்பர்களின் பிரதிநிதியாக முடியாது என்ற வாதங்கள் இங்கு உள்ளன.
அது குறித்த ஒரு கட்டுரை : மொழிபெயர்க்க நேரமின்மையால் ஆங்கிலத்திலேயே தருகிறேன்.
What Obama isn’t: black like [...]