மே 9 - அமெரிக்க ஜனாதிபதி களம்

1. அமெரிக்காவில் பதவிக்கு போட்டியிடுபவர்கள் தாங்கள் வருமான வரி கட்டிய விவரங்களை வெளிப்படையாக சொல்வது வழக்கம். அதற்கேற்ப, ஜனநாயகக் கட்சி சார்பாக களத்தில் இருக்கும் ஒபாமா, இருந்த ஹில்லரி, குடியரசுக் கட்சியின் மெகெயின் ஆகியோர் ஏற்கனவே வெளியிட்டிருந்தார்கள்.
இந்நிலையில் ஜான் மெக்கெயினின் மனைவி சிண்டி தன்னுடைய ‘சொத்து குறித்த தகவல்களை எந்த நிலையிலும் பொதுவில் வைக்கமாட்டேன்‘ என்று பேட்டி அளித்து இருக்கிறார். மதுபான நிறுவனத்திற்கு சொந்தக்காரரான சிண்டியின் நிதிநிலை கிட்டத்தட்ட நூறு மில்லியனுக்கு மேல் மதிப்பிடப்படுகிறது.
ஆதாரம்: Cindy McCain [...]

Hillary is 404?

இணையத்தில் 404 வந்தால் அற்றுப் போனதைத் தேடுகிறோம் என்று பொருள். அதே போல் ஹில்லரியும் விலக வேண்டும் என்று பொருள்படும் வலையகம்.

பின்னிரவு மூன்று மணி தொலைபேசி: காமிக்ஸ்

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

நன்றி: CANDORVILLE daily comics by Darrin Bell » Archive » Candorville: 4/30/2008- Choking, part 3 | 5/1/2008- part 4

கார்ட்டூன்களும்,சில ஒபாமா பீதிகளும்

கெடக்குறதெல்லாம் கெடக்கட்டும் கெழவியத்தூக்கி மனையில் வெய்யின்னானாம்.

பதில் சொல்லியே ஓயும் விக்கிரமாதித்தன்.

ஊரே எரிஞ்சுட்டு இருக்க பிடில் வாசிச்சானாம் மன்னன்

 
இந்த வார பீதி: ஒபாமா ஆட்சிக்கு வந்தால் outsourcing முறையில் மாற்றம் வரலாமாம். இதனால இந்தியாவின் IT நிறுவனங்களுக்கு பாதிப்பு வரலாம். இது மாதிரிதான் ஜான் கெர்ரியும் சொன்னாரு, பாவம்.

அமெரிக்க தேர்தல் களம் - இன்று (பெப். 25)

1. ‘எம்ஜியார் ஆட்சி தருவோம்’ என்று வாக்குறுதியளிப்பது போல், அமெரிக்காவின் ஒபாமாவைப் போல் புத்துணர்ச்சியுடன் நல்லாட்சி தருகிறோம் என்று உலகெங்கும் ப்ராண்ட் நேம் காப்பியடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
செய்தி: Obama’s European counterparts - Los Angeles Times

2. படம் - DRUDGE REPORT FLASH 2008® | செய்தி - Obama Photo Becomes an Issue - The Caucus - Politics - New York Times Blog
தன் தந்தை நாடான கென்யாவிற்கு வருகை [...]

‘ஹிலாரியைவிட நம்பகமானவர் ஒபாமா’

ஹிலாரி கிளின்டனை காட்டிலும் அதிக நம்பகமானவர் பராக் ஒபாமா என அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளியிட்ட தரப் பட்டியலில் கூறப்பட்டுள்ளது.
தயாரிப்புகளை நுகர்வோர் மத்தியில் பிரபலப்படுத்தும் திறன் பெற்றவர்களை பட்டியலிட்டு வெளியிட்டு வரும் நிறுவனம் டேவி பிரௌன். டேவி பிரௌன் பிரபலங்கள் குறியீட்டெண் என்ற இந்த மதிப்பீடு மூலமாக தங்களது தயாரிப்புகளை விளம்பரப்படுத்த யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதை நிறுவனங்கள் முடிவு செய்கின்றன. நுகர்வோர்களிடம் நட த்தப்படும் கருத்துக் கணிப்புகளின் அடிப்படையிலேயே இந்த குறி யீட்டெண் தயாரிக்கப்படுகிறது.
அண்மையில் இந்த நிறுவனம் [...]

வந்து விட்டார்…அமெரிக்காவின் அங்கண்ண (செட்டியார்).ரால்ப் நாடர்

வந்து விட்டார்…அமெரிக்காவின் அங்கண்ண (செட்டியார்)….. ரால்ப் நாடர்!!!
தேர்தலில் நிற்கப்போவதாக அதிகாரபூர்வாமன செய்தியை இன்று வெளியிட்டார்.
இவரால் ஒரு நல்ல பயனும் கிடையாது. இவரது கொள்கைகள் பெரும்பாலும் டெமாக்ரட் கட்சியை ஒத்ததே. தனக்கு இரண்டு கண்ணும் போனலும் பராவில்லை;டெமாக்ரட் கட்சிக்கு ஒரு கண் போவது முக்கியம் என நினைக்கும் நல்லவர்!! குடியரசு கட்சிக்கு இது ஒரு ஆனந்தமான செய்தி!!
டெமாக்ரட் கட்சிக்கு நல்ல செய்தி அல்ல.
மேலதிக்க தகவல்களுக்கு கிளிக்குங்கள்
http://www.cnn.com/2008/POLITICS/02/24/nader.politics/index.html

ஜான் எட்வர்ட்ஸ் - ‘என்னைப் பார்! என் அழகைப் பார்!!’

தொலைக்காட்சியில் அழகாகத் தோன்றுவது வேட்பாளர்களுக்கு காலத்தின் கட்டாயம். வியர்த்து, விறுவிறுத்து காணப்பட்டால், ‘சோர்வானவர்; பதைபதைப்புடன் செயல்படுபவர்‘ என்றெல்லாம் வாக்காளர்களின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படும்.
ஆனால், அழகு பார்க்கும்போது, செல்பேசி விழியப்பதிவுகளை தடுத்தாட்கொள்வது அரசியல் வெற்றிக்கு முக்கியமான விஷயம்.
இங்கே, ஜனநாயகக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் ஜான் எட்வர்ட்ஸ் ‘நான் நடந்தால் நடையழகு; நான் கோதினால் முடியழகு’ என்று கண்ணாடி களிப்புறும் காட்சி:

இதற்கும் முன்னால் நானூறு அமெரிக்க வெளிகளுக்கு சிகையலங்காரம் செய்து கொண்டு சர்ச்சைக்குள்ளான செய்தி: Edwards’ $400 haircut, [...]

அமெரிக்காவின் தேர்தல் சுவாரசியங்கள்

எல்லா நாடுகளிலும், அரசியல் குறித்தும் அரசியல்வாதிகள் குறித்தும் பெரிய நம்பிக்கைகள் இல்லை. ஒபாமா தன்னுடைய “The Audacity of Hope” என்ற புத்தகத்தில் அவர் முதன் முறையாக தேர்தலில் நிற்க முனைந்த பொழுது உனக்கு எதற்கு இந்த மோசமான அரசியல் என பலர் அவரிடம் கேட்டதாக குறிப்பிடுகிறார்
“You seem like a nice enough guy. Why do you want to go into something dirty and nasty like politics”
இங்கு தேர்தல் பிரச்சார [...]

பதிவு, கருத்து, செய்தி அலசல் - பெப்ரவரி 14

படித்ததில் கவனத்தை ஈர்த்தவை…
1. பராக் ஒபாமாவின் பொருளாதாரத் திட்டம்:

1. (அ) இந்தத் திட்டத்துக்கும் க்ளின்டனின் பொருளாதாரக் கொள்கைக்கும் ஆறு வித்தியாசம் கண்டுபிடிப்பது கூட சிரமம். - Clinton, Obama Offer Similar Economic Visions - washingtonpost.com
1. (ஆ) ஹில்லரியின் உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் மேம்பட்டது என்பதை தவிடுபொடியாக்கும் பராக் ஒபாமா பிரச்சாரக் கமிட்டியின் விளக்கவுரை. - Obama Camp Memo on Clinton’s Health Care Plan :: The Page - by Mark [...]