தமிழ் ஊடகங்களில் குடியரசுக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர்

1.தினத்தந்தி
அமெரிக்க குடியரசு கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக பெண் கவர்னர் தேர்வு
வாஷிங்டன், ஆக.31-
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக ஜான் மெக்கைன் போட்டியிடுகிறார். அவர் தனது கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சாரா பாலின் என்ற பெண்ணை தேர்வு செய்துள்ளார். 44 வயதான பாலின், அலாஸ்கா மாநில கவர்னர் ஆவார். அவருக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். அவர் எரிசக்தி விவகாரங்களில் அனுபவம் வாய்ந்தவர்.
எதிர்க்கட்சியில், அதிருப்தியாக உள்ள ஹிலாரி கிளிண்டனின் ஆதரவாளர்களை கவரும் பொருட்டு, இப்பெண்மணி தேர்வு [...]

அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் துணை அதிபர் பதவிக்கான வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட்டது

அமெரிக்க அதிபர் பதவிக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கெய்ன், தனது கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக பெண்ணொருவரைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
அலாஸ்கா மாகாணத்தின் ஆளுநர்களிலேயே மிகவும் இளையவரான சேரா பேலின் அம்மையாரை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.
இரண்டு வருடங்களுக்கும் குறைவாகவே ஆளுநராக இருந்துவருபவர் அவர்.
நாற்பத்து நான்கு வயதுடைய பேலின் அம்மையார் ஒரு அரசியல் சீர்திருத்தவாதி. கருக்கலைப்பை கடுமையாக எதிர்த்துவந்தவர் அவர்.
ஜான் மெக்கெய்னின் இந்தத் தேர்வு, மிகவும் தைரியமான ஒன்று என்று கருதப்படுவதாக ஓஹியோ டேடன் நகரில் நடந்துவரும் குடியரசுக் கட்சி மாநாட்டில் [...]

தமிழ் ஊடகங்களில் :: அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் ஜோ பைடன்’

தமிழ் பிபிசி:
நவம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் பேட்டியிடும் பராக் ஒபாமா, துணை அதிபர் வேட்பாளராக செனட்டர் ஜோ பைடன் போட்டியிடுவார் என்பதை உறுதி செய்துள்ளார்.
சில நாட்களுக்கு இருந்த ஊகங்களுக்கு மத்தியில், காலை மூன்று மணிக்கு லட்சக்கணக்கான தனது ஆதரவாளர்களுக்கு அலைபேசி குறுந்தகவல் மூலம் இந்த செய்தியை பராக் ஒபாமா உறுதி செய்துள்ளார்.
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக செனட்டில் பணிபுரிந்து வரும் ஜோ பைடன், செனட்டின் செல்வாக்கு மிக்க வெளியுறவு திட்டக்குழுவின் தலைவராகவும் [...]

ஆப்கானிஸ்தானில் பராக் ஒபாமா

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் பராக் ஒபாமா ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் அதிபர் ஹமீது கர்சாய் மற்றும் இராணுவ அதிகாரிகள் சந்திக்கவுள்ளார்.
தலிபான்களின் கிளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கூட்டுப்படைகள் தடுமாறி கொண்டிருக்கும் நிலையில் பராக் ஒபாமாவின் முதல் விஜயம் இடம்பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தானின் சீர்கெட்டு வரும் நிலையினால் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக பராக் ஒபாமா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இராக்கில் இருக்கின்ற துருப்புகள் ஆப்கானிஸ்தானுக்கு திரும்ப அனுப்படவேண்டும் என்றும் அவர் கூறியிருக்கின்றார்.
நன்றி: [...]

முதல் தடவையாக ஓபாமா & ஹில்லாரி ஒரே குரலில்

முதல் தடவையாக ஒபாமாவிற்கு திருமதி. கிளின்டன் தன் ஆதரவை பொதுவில் தெரிவித்துள்ளார். இதன் போது ஒபாமாவை மிகவும் பாராட்டிப் பேசினார் உதாரணத்திற்கு சில வரிகள்.
“If you think we need a new course, a new agenda, then vote for Barack Obama and you will get the change you need,” she told the cheering crowd.
“He will work for you, he will fight for you [...]

ஒபாமாவின் iPodல் என்ன இருக்கிறது?

அமெரிக்கத் தேர்தல் களத்தில் சூடு தணிந்து விட்டது. ஒபாமா, ஹில்லரி நாடகம் எதிர்பார்த்த இறுதிக் கட்ட காட்சிகளுடன் முடிந்து ஹில்லரி மீண்டும் தன் முழு நேர செனெட்டர் பணிக்குத் திரும்பி விட்டிருக்கிறார். என்னதான் சூடு தணிந்தாலும் தேர்தல் களங்களில் எப்போதும் ஏதேனும் சுவாரஸ்யம் இருந்துகொண்டே இருக்கும்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்களின் தேர்தல், பிரச்சார செலவுகளை அரசு ஏற்றுக்கொள்ளும் திட்டம் 1976ல் கொண்டுவரப்பட்டது. அமெரிக்காவின் மிகப் பிரபலமான ‘வாட்டர்கேட்’ சதித்திட்டங்கள் அம்பலமான பின்பு வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கண்காணிக்கவும் [...]

பாரக் ஒபாமாவின் செய்தித்தொடர்பாளரான தமிழர்

ஆதாரம் & நன்றி: விடுதலை
அமெரிக்க வரலாற்றில் வெள்ளையரல்லாத ஒருவர் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடும் வாய்ப்பு பாராக் ஒபாமாவுக்குக் கிடைத்திருக்கிறது என்றால் அவரின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றும் வாய்ப்பு தமிழ் நாட்டைச் சேர்ந்த வழக்குரைஞர் அரி சேவுகன் என்பவருக்கு கிடைத்துள்ளது.
இல்லிநாய்ஸ் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் படித்துச் சட்டம்படித்து பணியாற்றுபவரான சேவுகன் இதுவரை நான்கு ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் களுக்கு செய்தித் தொடர்பாளராகப் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர்.
மேலும் விவரங்களுக்கு:
1. Indian American is Obama campaign senior [...]

ஜொன் மெக்கெய்னின் மருத்துவச் சான்றிதழ்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜொன் மெக்கெய்ன், தனது வயோதிகம் பற்றி மற்றவர்களுக்குள்ள கவலைகளை போக்கும் முகமாக தனது உடல்நலம் குறித்த மருத்துவச் சான்றிதழ்களை வெளியிடவிருக்கிறார்.
மெக்கெய்னுக்கு 71 வயதாகிறது. நடக்கவுள்ள தேர்தலில் அவர் தேர்தெடுக்கப்பட்டால், முதல்முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்படும்போது மிக அதிக வயது கொண்டவராக அவர் அமைவார்.
தோல் புற்றுநோய்க்காக ஏற்கனவே அவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளில் அவருக்கு இந்த நோய் மீண்டும் பெரிய அளவில் வரவில்லை என்றும் வேறு [...]

அமெரிக்காவில் இனவெறியா - ஒபாமா செய்திகள்

மேற்கு வர்ஜினியாவில் தேர்தல் நடந்து முடிந்தது. அது தொடர்பான விழியம்:

நன்றி: Obama Faces Racism in West Virginia Video - Metacafe
வெஸ்ட் வெர்ஜீனியாவில் எதிர்பார்த்தவாறே ஹில்லரி எளிதில் வென்றார். ஆனால், ஹில்லரி க்ளின்டனை விரும்பும் வெள்ளையின வாக்காளர்களைக் கவர்வதற்காக ஜான் எட்வர்ட்ஸை தன் பக்கம் இழுத்துள்ளார் பராக் ஒபாமா. லத்தீனோ வாக்கு தேவைப்படும் காலம் கடந்தபின் கிடைத்த ரிச்சர்ட்ஸன் ஆதரவு மாதிரி பாட்டாளி வர்க்க வோட்டுகள் தேவைப்படும் நேரம் கழிந்தபின்னே ஆற அமர தன்னுடைய சார்பை [...]

மே 9 - அமெரிக்க ஜனாதிபதி களம்

1. அமெரிக்காவில் பதவிக்கு போட்டியிடுபவர்கள் தாங்கள் வருமான வரி கட்டிய விவரங்களை வெளிப்படையாக சொல்வது வழக்கம். அதற்கேற்ப, ஜனநாயகக் கட்சி சார்பாக களத்தில் இருக்கும் ஒபாமா, இருந்த ஹில்லரி, குடியரசுக் கட்சியின் மெகெயின் ஆகியோர் ஏற்கனவே வெளியிட்டிருந்தார்கள்.
இந்நிலையில் ஜான் மெக்கெயினின் மனைவி சிண்டி தன்னுடைய ‘சொத்து குறித்த தகவல்களை எந்த நிலையிலும் பொதுவில் வைக்கமாட்டேன்‘ என்று பேட்டி அளித்து இருக்கிறார். மதுபான நிறுவனத்திற்கு சொந்தக்காரரான சிண்டியின் நிதிநிலை கிட்டத்தட்ட நூறு மில்லியனுக்கு மேல் மதிப்பிடப்படுகிறது.
ஆதாரம்: Cindy McCain [...]