Republican National Convention - Notable Twitter Updates

(அடைப்புக்குறிக்குள் இருப்பவை, குறும்பதிவு தொடர்பான என்னுடைய விளக்கங்கள், கருத்துகள்) சிவப்பு - குடியரசு; நீலம் - ஜனநாயகக் கட்சி

gregmcneilly Fun fact fr Marcambinder - Palin got more votes as mayor of Wassilia than Joe Biden got running for POTUS 09:49 PM September 03, 2008 (ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதில் ஜோ பைடனுக்கு கிடைத்த வாக்குகளைவிட குக்கிராமத்தின் மேயராகப் போட்டியிட்டபோது சாரா பேலினுக்கு அதிக [...]

Democratic National Convention - 3rd & 4th Days

முதல் இரண்டு நாள் பார்க்கவில்லை.

துவக்க நாளன்று மிஷேல் ஒபாமா. அவர் அருமையாகப் பேசுவார்.
அடுத்த நாள் ஹில்லரி. கொள்கை நன்றாக இருந்தாலும் பேச்சிலும் சமர்த்தர் அல்ல.
ஹில்லரி சொற்பொழிவாற்றிய அடுத்த நாள், தினசரியைப் பார்த்தவுடன் ‘Erect Obama’ என்று பேசியதாக பார்த்தவுடன், விழித்துக் கொண்டேன்.

தங்கத் தலைவர் பில் க்ளின்டனுக்காக மூன்றாவது நாள் விழித்திருந்தேன். ஏமாற்றவில்லை. டெலி-ப்ராம்டர் முன்னாடி இருப்பதை துளிக்கூட உணர்த்தாத நேரடியான, பார்வையாளரைத் தொடும் பேச்சு. இவர் மீண்டும் தேர்தலில் நின்றால், கள்ள வாக்கு போட்டாவது ஜெயிக்க வைக்க [...]

அமெரிக்காவில் இனவெறியா - ஒபாமா செய்திகள்

மேற்கு வர்ஜினியாவில் தேர்தல் நடந்து முடிந்தது. அது தொடர்பான விழியம்:

நன்றி: Obama Faces Racism in West Virginia Video - Metacafe
வெஸ்ட் வெர்ஜீனியாவில் எதிர்பார்த்தவாறே ஹில்லரி எளிதில் வென்றார். ஆனால், ஹில்லரி க்ளின்டனை விரும்பும் வெள்ளையின வாக்காளர்களைக் கவர்வதற்காக ஜான் எட்வர்ட்ஸை தன் பக்கம் இழுத்துள்ளார் பராக் ஒபாமா. லத்தீனோ வாக்கு தேவைப்படும் காலம் கடந்தபின் கிடைத்த ரிச்சர்ட்ஸன் ஆதரவு மாதிரி பாட்டாளி வர்க்க வோட்டுகள் தேவைப்படும் நேரம் கழிந்தபின்னே ஆற அமர தன்னுடைய சார்பை [...]

மிசிசிப்பியில் ஒபாமா வெற்றி

மிசிசிப்பியில் ஒபாமா கிளின்டனை வெற்றிகொண்டுள்ளார். இதன் படி தொர்ந்து ஒபாமா முன்னிலையில் உள்ளார். இங்கு அதிகமாக கறுப்பினத்தவர் இருந்ததால் இந்த வெற்றி முன்பே எதிர்வு கூறப்பட்டதுதான்!

கடந்த வாரம் - அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம்

டெமோக்ராட்ஸ் வேட்பாளர் இன்னும் முடிவானபடியில்லை. ‘பெரிய பிரதிநிதிகள்’ எனப்படும் சூப்பர்டெலகேட்ஸ் கையில்தான் ஒபாமாவா/ஹில்லரியா என்பது இருக்கிறது.
க்ளின்டனுக்கு (‘மக்களைப் பயமுறுத்துகிறார் ஹிலாரி’: ஒபாமா) சற்றும் சளைக்காத ஒபாமா அணியினர், ‘ஹில்லரி என்பவர் அரக்கி‘ என்று பேட்டி கொடுக்க, பேட்டி கொடுத்தவருக்கு கல்தா கொடுத்தார் ஒபாமா.
மேலும் விவரங்களுக்கு: BBC NEWS | Americas | Obama aide quits in ‘monster’ row: “An adviser to Barack Obama has resigned after a Scottish newspaper quoted [...]

ஒபினியன் போல் / Bradley’s Effect/ Devil’s alternative

ஒபினியன் போல் / Bradley’s Effect
 
நம் ஊரில் தேர்தல்கள் படு சுவாரசியமானவை. பல கூத்துக்கள் அரங்கேறும். கருணாநிதியின் வசனங்கள், ஜயலலிதாவின் ஆவேசப் பேச்சு, கட்சிக்கு உள்ளேயே ஒருவரை ஒருவர் அடித்து கொள்ளும் காங்கிரஸ், விஜயகாந்தின் புள்ளி விவரப் பேச்சு, கம்யூனிஸ்ட்டின் ஒப்பாரி, வைகோவின் அழுகை, ரத யாத்திரை, எந்த கூட்டணி வைத்தால் வெற்றி பெறுவோம் என்பதை “ஆறாவது ஆறிவோடு” அறிந்து செயல்படும் ராமதாஸ், சுப்பிரமணிய சுவாமி இப்படி பல முகங்கள், பல காட்சிகள்…… [...]

கவிஞர் மாயா ஆஞ்சேலூவின் ஹில்லரி ஆதரவுப் பேச்சு

அமெரிக்காவின் தலைசிறந்த பத்து பெண்மணிகளுள் ஒருவராக அறியப்படுவரும் பெரும் மதிப்புக்குரியவருமான கவிஞர் மாயா ஆஞ்சேலூ ஹில்லரியை ஆதரித்து ஒரு பேச்சை வெளியிட்டிருக்கிறார். ஆஞ்சேலூ ஓப்ரா வின்ஃப்ரீக்கு (ஒபாமாவின் பிரச்சார பீரங்கி) மிகவும் நெருக்கமானவர். “ஒப்ரா எனக்கு மகளைப் போன்றவள்; ஆனால் என்னுடைய நகலாக்கமல்ல” என்று சொல்கிறார். ஒபாமாவை வெறுக்கக் காரணம் ஏதுமில்லை. ஒரு பெண் என்ற வகையில் - ஒரு நல்ல பெண் எப்படியிருக்க வேண்டும் எனபதற்கு உதாரணமாக விளங்குவதால் நான் ஹில்லரியை ஆதரிக்கிறேன் [...]

ஒபாமா கறுப்பர்களின் வேட்பாளர் அல்ல

ஒபாமா ஆட்சிக்கு வந்தால் கறுப்பர்களை முன்னேற்றுவாரா? இந்தக் கேள்வியே அபத்தமானதாகத் தோன்றுகிறது எனக்கு. இதற்கும் நம்ம சாதிக்காரன் ஆட்சிக்கு வந்தால் நம்ம சாதி முன்னேறவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதற்கும் என்ன வித்தியாசம்? இதற்கு ஒரு கேவலமான பெயர் உண்டு - Nepotism.
எந்த ஒரு சமுதாயத்தையும் ஒரு தனித்தலைவரால் ஒரே நாளில் மேலேயோ கீழேயோ நகர்த்திவிட முடியாது. அப்படி எதிர்பார்ப்பது வெகுளித்தனம்.
நான் மிகவும் வெளிப்படையாக ஒபாமாவை ஆதரித்து எழுதி இந்த விவாதங்களைத் துவக்கினேன். இதற்கு [...]

கறுப்பர் பிரச்சனைகளை பேச மறுக்கும் ஒபாமா கறுப்பர்களின் வேட்பாளரா ?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் உலகில் உள்ள பலரின் கவனத்தை ஈர்த்து இருப்பவர் பாராக் ஒபாமா. இவர் ஜனநாயக கட்சியின் வேட்பாளாராக வெற்றி பெற்று பிறகு ஜனாதிபதி தேர்தலையும் வென்றால் அமெரிக்காவின் முதல் ஆப்ரிகன் அமெரிக்கன் (கறுப்பர்) ஜனாதிபதி என்ற சரித்திரம் நிகழும். ஆனால் இந்த சரித்திரங்கள் எந்தளவுக்கு அவர் சார்ந்த சமுதாயத்திற்கு உதவக்கூடும் ?
எந்த நாட்டிலும் இத்தகைய “முதல்” சரித்திரங்கள் அந்த தலைவர்கள் சார்ந்து இருந்த சமுதாயத்திற்கு உதவியதில்லை. இந்தியாவிலேயே எத்தனையோ உதாரணங்கள் உண்டு. இந்தியாவின் [...]

ஒபாமா கறுப்பரா ? ஒபாமா கறுப்பர்களின் பிரதிநிதி அல்ல…

சுமார் 80% கறுப்பர்கள் ஒபாமாவை ஆதரிப்பதாக சமீபத்தில் சி.என்.என் தெரிவித்தது. ஆனால் ஒபாமா உண்மையில் கறுப்பரா என்ற கேள்விகளும் இங்கு உண்டு. ஒபாமாவின் அம்மா கறுப்பர் அல்ல. ஒரு வெள்ளையர். அவர் அப்பா ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் கறுப்பர்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையை ஒபாமா எதிர்கொள்ளவில்லை. எனவே அவர் அமெரிக்க கறுப்பர்களின் பிரதிநிதியாக முடியாது என்ற வாதங்கள் இங்கு உள்ளன.
அது குறித்த ஒரு கட்டுரை : மொழிபெயர்க்க நேரமின்மையால் ஆங்கிலத்திலேயே தருகிறேன்.
What Obama isn’t: black like [...]