தேர்தல் வாரம்: பொருளாதாரம் – இரண்டாம் விருந்தினர்

தென்றல் (பொருளாதாரம் | அமெரிக்க நிதிநிலை: பொக்கீடு பற்றாக்குறை, டாலர் மதிப்பு | பங்கு சந்தை – வருமான வரி) பதிலளித்ததைத் தொடர்ந்து இன்னொரு சிறப்பு விருந்தினர்: $ என்றவுடன் நினைவுக்கு வரும் செல்வன். 1. முதலாளித்துவம் பரப்பிய அமெரிக்கா சோஷலிஸம் பேசுகிறதா? முதலியக் கொள்கை எப்படி இருக்கிறது? பூட்ட கேஸா அல்லது தவறன மருந்து உட்கொண்ட நோயாளியா? சோஷலிசம் என்றால் தனியார் சொத்துடமைக்கு அனுமதி மறுப்பு, வணிகம் செய்யும் உரிமை முழுவதும் அரசுக்கே சொந்தம் என்று [...]

அமெரிக்காவில் ஓட்டுரிமை இல்லையா? நாங்க தர்றோம்

அமெரிக்காவுல நமக்கு ஓட்டு இல்லே.. பரவாயில்லை. என்னால அங்கே எல்லாம் போவ முடியாது… பரவாயில்லை. வரிசையில நிக்க முடியாது…பரவாயில்லை நீங்க இங்கே வாக்களிங்க..

சாரா பாலின் இந்தியா வந்தால்?

சாரா பாலின் இந்தியா வந்தா என்ன பண்ணுவாங்க? * ஆரத்தி எடுப்பாங்க * மொதல்ல சந்தனம் வெச்சு கையில மாலை குடுப்பாங்க * அப்புறம் ஒரு இளநீர் (நன்றி-பல்ராம்நாயுடுகாரு-தசாவதாரம்) * அடுத்த நாளே ரெண்டு புடவைய குடுத்து கட்டிவிடுவாங்க? அப்போ எப்படி இருப்பாங்க?  இப்படித்தான்..   படங்களை பெரிசா பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும்.

தென்றல்: அமெரிக்க பங்குசந்தை – இறுதிப் பகுதி

முந்தைய பதிவு – தென்றல் 3. பொக்கீடு பற்றாக்குறை, டாலர் மதிப்பு: இதையெல்லாம் குறித்து ஒபாமாவோ மகயினோ கவலை கொள்கிறார்களா? பொருட்டாக மதித்து ஏதேனும் ஆக்கபூர்வமான திட்டங்கள் வைத்துள்ளார்களா? Consumer Market ‘நல்ல படியாக’ வைத்துக் கொண்டாலே போதும். (அதை எப்படி நல்லபடியா வைத்துக் கொள்வது…??) 4. வருமான வரி: தனிநபர் வரியைக் குறைப்பது என்பது கேபிடலிசத்தின் அடிநாதம் அல்லவா? அதை ஏன் ஒபாமா எதிர்க்கிறார்? உழைத்து முன்னேறியவர் தனக்குக் கிடைக்கும் செல்வத்தை மறுபடியும் சந்தையிலேயே முதலீடு [...]

நீயும் பொம்மை நானும் பொம்மை நினைச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை

‘படிக்கிற வயசில் என்னடா அரசியல்?’ என்பதுதான் நான் கேட்டு வளர்ந்த சூழலில் புழங்கிய நிலை. அமெரிக்காவில் நிலைமை நேர் எதிர். என்னுடைய எட்டு வயது மகள் ப்ரைமரியிலேயே வாக்களித்தாள். இந்தப் பதிவு தொடங்கப்பட்ட ஃபெப்ரவரியில் எழுதியதில் இருந்து: எனக்கு நேரடியாகத் தெரிந்த, பழக்கமான அமெரிக்கர்களிடம் ‘உங்க வோட்டு யாருக்கு’ என்று வினவியதில் எவரும் நேரடியாக பதில் சொல்லாமல் நழுவி விட்டார்கள். கட் அன்ட் ரைட்டாக மகளிடமிருந்து மட்டும் பதில் வந்தது. பள்ளியில் ஒவ்வொரு வேட்பாளரைக் குறித்தும் சிறு [...]

அமெரிக்க பொருளாதாரம்: அலசல் – தென்றல்

முந்தைய இடுகை 2. அமெரிக்க நிதிநிலை: இப்பொழுது பங்குச்சந்தை படுத்து இருக்கும் நிலையில் இருந்து நிமிர யார் தேவை? அடுத்த அதிபர் எப்படி செயல்பட்டால் வீழ்ந்த வால்ஸ்ட்ரீட் தலைதூக்கும்? ஆகா…இந்த கேள்விக்குதான் ‘பெரிய பெரிய தலைகளே’ மண்டை பிச்சிகிட்டு இருக்கிறாங்க!! சமீபத்திய பங்குச்சந்தை/நிதி நிர்வாகங்களின் சரிவு, 700 பில்லியன் டாலர் தேவை …. இந்தப் பிரச்சனைக்கு அடிப்படை காரணம் என்னனு பார்த்தா எனக்கு தோன்றியது …… பேராசை – சாமான்யமிடமிருந்து பெரிய நிர்வாகம் வரை.. 5, 6 [...]

எங்கெங்கெ காணினும் ஒபாமா – விளம்பரத் தட்டிகள்

உந்திய உரல்: The Riff: Obama Poster Parodies Proliferate: 12 or so of the parodies inspired by the Obama “Hope” poster. மூலம் வரைந்தவர் குறித்த பதிவு:The Phoenix > Museum And Gallery > Radical chic: “Fairey is one of the most famed street artists (the refined term for people who do what used to be known as graffiti) [...]

கேப்டன் அமேரிக்க தேர்தலிலா?

இங்க போயி பாருங்க! News Channel 3-ல வர clipping…. http://www.tsgnet.com/pres.php?id=46832&altf=Dbqubjo&altl=Wjkbzblboui

தேர்தல் நிலவரம்

தேர்தல் வாரம்: கொள்கை விளக்கம் – பொருளாதாரம்

அமெரிக்கர்களுக்கு வருமான வரி குறைகிறதா என்பது மட்டும்தான் பொருளாதாரக் கொள்கையா என்பது வெங்கட்டின் ஆதங்கம். இதை உறுதிப்படுத்துவது போல் ‘நடுத்தர வர்க்கத்தின் வரிச்சுமையைக் குறைப்பேன்‘ என்று ஒபாமாவும், ‘அது மட்டும் போதாது; பெருநிறுவனங்களுக்கும் வரிவிலக்கு தருவேன்!‘ என்று ஜான் மெகயினும் சளைக்காமல் ஆலமரத்தடி பிள்ளையாரான வரியை மட்டுமெ ஒவ்வொரு வரியிலும் சுற்றி சுற்றி வந்து பங்குச்சந்தையான அடிவயிறு பெருக்கிறதா என்று தொட்டுப் பார்த்து வருகிறார்கள். தேர்தலில் தற்போதைக்கு முன்நிலையில் இருக்கும் ஒபாமாவின் வலையகமும் இதை உறுதியாக்குவதாக இரண்டு [...]

ஒபாமா – ஆள வந்தான் வழியில் பாடினால்

இன்றைய செய்திகளில், அலசல்களில் – எல்லாம் சரியாய்த்தான் இருக்கிறது, ப்ராட்லி விளைவு மட்டும் இல்லாமலிருந்தால் அடுத்த அமேரிக்க அதிபராக ஓபாமா இன்னமும் ஆறு நாட்களுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவாரென்பதே ஊடகங்களின் முக்கியப் பேச்சு. ப்ராட்லி விளைவு (Bradley effect) – 1982 ஆம் ஆண்டில் கலிபோர்னியா மாநில ஆளுநர் தேர்தலில் எல்லோராலும் வென்றுவிடுவாரென்று எதிர்பார்க்கப்பட்ட கறுப்பரான லாஸ் ஏஞ்சலஸ் நகர மேயரான டாம் ப்ராடலி, கருத்துக் கணிப்புக்களுக்கு மாறாக எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வெள்ளை வேட்பாளரிடம் [...]

பணம் படைத்தவன்

விவரிப்பு: அமெரிக்காவின் முக்கிய தொலைக்காட்சி எல்லாவற்றிலும் பராக் ஒபாமாவின் அரை மணி நேர விளம்பரம் ஒளிபரப்பாகியது. பெரும்பாலான அமெரிக்கர்கள் டிவியின் முன் உட்காரும் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்புவதற்காக சற்றேறக்குறைய ஐந்து மில்லியன் டாலரை ஒபாமா கரைத்துள்ளார். வியப்பு: சன், ஜெயா, மக்கள், கலைஞர் எல்லாவற்றிலும் ஒரு கட்சி ஒரே சமயத்தில் பிரச்சாரம் செய்யும் சூழல் இல்லாத தமிழ்நாடு. எதிராளிக்கு சம இடம் தராமல், தனியாளாக பிரச்சார போதனை செய்யும் அமெரிக்க நிலை. பொது நிதியை மட்டும் [...]

‘ஒபாமாவிற்கு மிருத்யுஞ்சய ஹோமம் & இளநீர் தாரா தேவை’: தினமலர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பராக் ஒபாமா வெற்றி பெற 75 சதவீத வாய்ப்பு உள்ளதாக, கோவை ஆரிய வைத்திய பார்மசியின் ஜோதிடர் குழு கணித்துள்ளது. ஒபாமா வெற்றிக்காகவும், அவர் சிறந்த உடல் ஆரோக்கியம் பெறவும், கோவையில் சிறப்பு ஹோமம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து கோவை ஆரிய வைத்திய பார்மசியின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணகுமார் கூறியதாவது: அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஒபாமா, அங்குள்ள மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். 1961ல் பிறந்த அவரது ஜாதகப்படி, அவருக்கு இப்போது ‘வியாச (குரு) [...]

துக்கடா: கருத்து – குசும்பு – கும்மாங்குத்து

அதிபருக்கு பள்ளி மாணவர்களின் கடிதம்!

தேசிய எழுத்து இயக்கமும், கூகுள் டாக்ஸும் இணைந்து, ‘அடுத்து வரவிருக்கும் அமேரிக்க அதிபருக்கு கடிதம்’ என்ற தலைப்பில் 13 முதல் 18 வயதிலான நடுநிலை மற்றும் உயர்பள்ளி மாணவர்களுக்காக கடிதம் எழுதும் போட்டி நடத்துகின்றனர். அந்த போட்டியில் ‘மக்களுக்காக மக்களால்’ என்ற தலைப்பில் ‘டேனியல்’ என்ற ஒரு மாணவன் எழுதியிருந்த கடிதம் பின்வருவதுபோல் துவங்குகிறது. –இந்த தேசத்தை வழிநடத்த தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.   மக்கள் ஆள்வதற்காக மக்களுக்காக இந்த தேசம் உருவாக்கப்பட்டிருக்கிறது.  இருந்தாலும், கடந்த எட்டு [...]

மெகயினிடம் எனக்குப் பிடித்தது என்ன? – சொ. சங்கரபாண்டி

சென்ற பதிவு 2. ஒபாமாவின் எந்தக் கொள்கை உங்களை அதிகம் கவர்ந்திழுத்து ஒத்திசைவாக தலையாட்ட வைக்கிறது? ஒபாமா-பைடனின் வெளியுறவுக்கொள்கை. அதுவும் கூட புஷ் கொள்கைகளை ஆதரிக்கும்/தொடரவிருக்கும் மெக்கெய்ன்-பேலின் வந்துவிடக்கூடாதென்ற பயத்தில்தான். 3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது? இப்பொழுது எதுவுமில்லை. 2000 குடியரசுக் கட்சி முன்னோட்டத் தேர்தலின் போது புஷ்சுக்கு எதிராகப் போட்டியிட்ட காலத்தில் எனக்கு மெக்கெய்னைப் பிடிக்கும். ஒரு சில விசயங்களாவது இருந்தன அப்பொழுது. இப்பொழுது புஷ்சை ஆதரிப்பவர்களைப் பற்றி நினைக்கவே [...]

தோழா… தோழா! தோள்கொடு தோழா!

இரண்டரை லட்சத்துக்கும் மேலாக லஞ்சம் வாங்கியதாக அலாஸ்காவின் செனேட்டர் டெட் ஸ்டீவன்ஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. ‘உங்க ஊர்க்காரர் மேல் இந்த மாதிரி புகார் எழுந்துள்ளதே?’ என்று அலாஸ்காவின் கவர்னர் சாரா பேலினிடம் விசாரித்தபோது, அவரை ஆதரித்தோ, புறந்தள்ளியோ கருத்து சொல்ல மறுத்திருந்தார். ஜூரி முன் நடந்த வழக்கு தற்போது முடிந்து, இந்தக் குற்றங்கள் உறுதியாகியுள்ளன. டெட் ஸ்டீவன்ஸ் தன்னுடைய வீட்டைப் புதுப்பிக்க $250,000 மதிப்புள்ள பொருள்களை பெற்றுக் கொண்டிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையிலும் துணை [...]

ஒபாமாவை கொல்ல சதி: 2 பேர் கைது (செய்தித் தொகுப்பு)

சிஃபி: ஒபாமாவைக் கொல்லச் சதி டென்னசி மாகாண போலீசார் சந்தேகத்திற்கிடமான இரண்டு வாலிபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் துப்பாக்கிகள் விற்கும் கடையில் கொள்ளையடித்து ஆப்ரிகன், அமெரிக்கன் பள்ளியில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. மேலும் 88 வெள்ளையர்களையும், 14 கருப்பர்களையும் மொத்தம் 102 பேரை கொல்வதற்காக அவர்கள் திட்டம் தீட்டியிருந்தனர். டேனியல் கோவர்ட் (வயது 20) மற்றும் பால் ஷெல்ஸ்மான் (வயது 18) ஆகிய இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த [...]

Follow

Get every new post delivered to your Inbox.