அமெரிக்க குடியரசு கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக பெண் கவர்னர் தேர்வு
வாஷிங்டன், ஆக.31-
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக ஜான் மெக்கைன் போட்டியிடுகிறார். அவர் தனது கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சாரா பாலின் என்ற பெண்ணை தேர்வு செய்துள்ளார். 44 வயதான பாலின், அலாஸ்கா மாநில கவர்னர் ஆவார். அவருக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். அவர் எரிசக்தி விவகாரங்களில் அனுபவம் வாய்ந்தவர்.
எதிர்க்கட்சியில், அதிருப்தியாக உள்ள ஹிலாரி கிளிண்டனின் ஆதரவாளர்களை கவரும் பொருட்டு, இப்பெண்மணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2. யாஹூ :: யு.எஸ். : குடியரசுக் கட்சி துணை அதிபராக சாரா பலின் அறிவிப்பு
3. தமிழ் கூடல்
அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தலில் பெண் போட்டி
வாஷ’ங்டன், ஆக. 30-
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 4-ந்தேதி நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் ஜான்மேக்கேனும், ஜனநாயக கட்சி சார்பில் கறுப்பு இனத்தவரான பராக் ஒபாமாவும் போட்டியிடுகிறார்கள்.
இருவரும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பிடன் என்பவரை பராக் ஒபாமா அறிவித்து இருக்கிறார். இந்த நிலையில் துணை ஜனாதிபதி பதவிக்கு குடியரசு கட்சி வேட்பாளராக ஒரு பெண்ணை ஜான்மெக்கேன் அறிவித்துள்ளார். அவரது பெயர் சாரா பாலின். 44 வயதே ஆன இவர் அலாஸ்கா மாநில கவர்னர். அலாஸ்கா மாநிலத்தின் குறைந்த வயது கவர்னரும் இவர்தான். கடந்த 2006-ம் ஆண்டுதான் இவர் கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜான் மெக்கேனுடன் சேர்ந்து இவரும் இப்போது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
4. தட்ஸ்தமிழ் :: குடியரசுக் கட்சி துணை அதிபராக சாரா பலின் அறிவிப்பு
5. மாலை மலர்
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் மாடல் அழகி
வாஷிங்டன், ஆக. 31-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 4-ந்தேதி நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் ஜான்மெக்கேனும் ஜனநாயக கட்சி சார்பில் பராக் ஒபாமாவும் போட்டியிடுகிறார்கள்.
துணை ஜனாதிபதி பதவி வேட்பாளராக ஜோ பிடன் என்பவரை பராக் ஒபாமா அறிவித்துள்ளார். இதே போல் குடியரசு கட்சி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக சாரா பாலின் என்ற பெண் வேட்பாளரை ஜான்மெக்கேன் அறிவித்திருக்கிறார்.
சாராபாலின் இப்போது அலாஸ்கா மாகாண கவர் னராக இருக்கிறார். 5 குழந்தைகளின் தாயான இவர் முன்பு இளம் பெண்ணாக இருந்த போது போதை பழக்கத்துக்கு அடிமையானவர்.
அது மட்டுமல்ல மாடல் அழகியாகவும் இருந்தவர். மிஸ் வாலிகா அழகி போட்டி களிலும் கலந்து கொண்டவர். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. போதை பொருள் பயன்படுத்தியதை சாராவே ஒப்புக் கொண்டிருக்கிறார்.
மேலும்: கூகிள் செய்திகள்
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது குடியரசு, செய்தி, தகவல், பேலின், மெக்கெய்ன் | குறிச்சொற்கள்: குடியரசு, சாரா, ஞான், பலின், பாலின், பேலின், மக்கயின், மெகெயின், மெகெய்ன், மெக்கயின், ரிபப்ளிகன்ஸ், Elections, GOP, Polls, Republicans, USA, Vice-president, VP