‘வெள்ளை’ மனதும் வெள்ளை மனதும்.

ஒபாமாவின் தீராத் தலைவலியாக வந்திருப்பது அவர் சார்ந்திருந்த சிகாகோவின் ட்ரினிட்டி சர்ச்சின் போதகர் ஜெரமாயா ரைட்டின் அமெரிக்க எதிர்ப்புக் முழக்கங்கள். (படிக்க: பராக்கின் வாடர்லூ..?). பராக் ஒபாமாவின் சமன் செய்யும் முயற்சியான வரலாற்று சிறப்புமிக்க அவரது இனப்பிரச்சனை பேருரையும் அவர் மீது தனிப்பட்ட நன்மதிப்பை வளர்த்துள்ளதே தவிர ஜெரமையா ரைட்டின் பிரச்சனை மக்களின் மனதை விட்டு எளிதில் அகலப் போவதில்லை. ஒபாமாவின் செல்ல மாமாவாகத் திகழ்ந்துவந்த அமெரிக்க ஊடகங்களும் இந்தப் பிரச்சனைக்குப்பின் அவருக்கு மிட்டாய் வழங்குவதை குறைத்துக் [...]

பராக் ஒபாமாவின் புதிய விளம்பரங்கள் – பென்சில்வேனியா பிரச்சாரம்

1. “Opportunity“ ஒபாமாவின் தாத்தா, பாட்டி, மற்றும் தனியாக விடப்பட்ட தாய் ஆகிய பின்னணியை விளக்கி, அறிமுகம் செய்கிறது. நடுத்தர வர்க்கத்திற்கான வரிவிலக்கை ஆதரிப்பவர், வேலைவாய்ப்பை பெருக்குபவர் என்று விரிகிறது. இனம் குறித்த சர்ச்சை மிகுந்திருப்பதால், இந்த விளம்பரத்தில் ஒபாமாவும் அமெரிக்க சிந்தனையை உடையவர், நாட்டுப்பற்று மிக்கவர், சராசரி Caucasian பிரச்சினைகளை உணர்ந்தவர் என்பதை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆப்பிரிக்க – அமெரிக்கர்களை மட்டுமல்லாமல், தொழிற்சாலையில் வேலை பார்க்கும் வெள்ளை ஆண்களைக் குறிவைத்து அமைந்திருக்கிறது. 2. “Toughest” [...]

முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் ஆதரவு ஒபாமாவிற்கு கிடைத்தது

ஜனநாயகக் கட்சி வேட்பாளராகத் தேர்வு பெறுவதற்கான முயற்சியில், ஒபாமா இன்னொரு முக்கிய அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார். ஹிஸ்பானிக் வாக்காளர்களிடம் அதிக செல்வாக்குப் பெற்றிருப்பதாகக் கருதப்படும் நியு மெக்ஸிகோ கவர்னர் பில் ரிச்சர்ட்சன், ஒபாமாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். மேலும் விவரங்களுக்கு: 1. Richardson says Clinton phone call got 'heated' – First Read – msnbc.com 2. First a Tense Talk With Clinton, Then Richardson Backs Obama – New York Times [...]

ஒபாமாவிடம் மன்னிப்புக் கோரினார் ரைஸ்; ஜான் மெகெயின், ஹில்லரி கடவுச்சீட்டுகளும் அத்துமீறப்பட்டுள்ளன

அமெரிக்க அரசுத்துறைச் செயலர் கொண்டலிஸா ரைஸ் அம்மையார் அவர்கள், ஜனநாயக் கட்சி வேட்பாளராகத் தேர்வு பெற வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படும் பராக் ஒபாமாவிடம் மன்னிப்புக் கோரியிருக்கிறார். ஒபாமாவின் பாஸ்போர்ட் தகவல்களைப் பெறுவதற்காக, அரசுத்துறையின் ஊழியர்கள், கணினி பாதுகாப்பு விதிகளை மீறியதாக வெளியான தகவலை அடுத்து அவர் மன்னிப்புக் கோரியிருக்கிறார். ஒபாமாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், யாராவது தனது பாஸ்போர்ட் தகவல் கோப்புக்களைப் பார்த்திருந்தால் தான் மிகவும் கவலையடைந்திருப்பேன் என்று கூறியதாகவும் கொண்டலிஸா ரைஸ் தெரிவித்தார். நன்றி: [...]

ஏற்ற இறக்கங்களும், இழுபறிகளும் – சுந்தரேஷ் (தென்றல்)

அமெரிக்க அதிபர் தேர்தல் 2008 இருந்து… பந்தயத்தில் கடைசி நிலையில் தொடங்கி, பிரசாரத்துக்குக் கூடப் போதுமான அளவு பணம் சேர்க்க முடியாமல் கஷ்டப்பட்டு, ரிபப்ளிகன் கட்சிக்காரர்கள் பலராலேயே ‘கன்சர்வேட்டிவ் மதிப்புகளைக் காக்க இவர் சரியான ஆள் அல்ல’ என்று விமர்சிக்கப் பட்ட நிலையில் இருந்தவர் ஜான் மெக்கெய்ன். ஆனால், படிப்படியாகக் கடுமையாகப் போராடி சில சாதுர்யமான அரசியல் தந்திர நடவடிக்கைகளால் முன்னணி நிலைக்கு வந்திருக்கும் ஜான் மெக்கெய்னின் வெற்றி அவரது அயராத தன்னம்பிக்கைக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த பலன். [...]

ஒபாமாவின் ‘இனப்பிரச்சனை’ பேருரை

ஒபாமா நேற்று மிகச் சிறப்பான உரை ஒன்றை வழங்கியுள்ளார். ‘இன்னும் முழுமையான ஒன்றியம்/ஐக்கியம்’(A more perfect union) என தலைப்பிடப்பட்டுள்ள இந்த உரையில் அவர் பேச எடுத்துக்கொண்ட விதயம் அமெரிக்காவின் ‘இனப்பிரிவினை’. ஒபாமா சார்ந்துள்ள திருச்சபையின்(Church) மதபோதகர் அமெரிக்காவை கண்டித்துப் பேசிய பேச்சுக்கள் இனப் பின்னணியில் ஒபாமாவுக்கு எதிராக சர்ச்சையை கிளப்பிவிட்டபின் இந்த சமன் செய்யும் முயற்சி ஓரளவுக்கு எதிர்பார்க்கப்பட்டதே என்றாலும், இந்த பேச்சின் வீச்சு வெறும் தன்னிலை விளக்கத்தையும் தாண்டிச் சென்றுள்ளதை உணர முடிகிறது. பொதுவாக [...]

பராக் கின் வாடர்லூ..?

பேஸ்டோர் என்பவர்: A pastor is an official position within a Protestant congregation, and related to the positions of priest or bishop within the Anglican, Roman Catholic and Orthodox Churches.. என்கிறது (உ)விக்கிபீடியா. இப்படியாக பேஸ்டோர் என்பவரை ஒரு மதகுரு, குறிப்பிட்டவொரு கிருத்துவ ஆலயத்தில் பொறுப்புள்ள பதவி வகிப்பவர் என பொருள் கொள்ளலாம். கிருத்துவ குடும்பங்களில் நல்ல நிகழ்வுகளோ, குழப்பங்களோ அல்லது துயரங்களோ ஏற்படும் போது தகுந்த [...]

ஜனநாயகக் கட்சி: 50%; குடியரசு – 37% ஆதரவு! ஆனால்…

இந்தியாவில் கட்சி/கூட்டணி சார்ந்த வோட்டுதான் பெரும்பாலும் விழும். ரஜினி வாய்ஸ் முதல் ராஜீவ் காந்தி வரை தனிப் பெரும் தலைவராக சிலர் முன்னிறுத்தப்பட்டாலும், ஆளுங்கட்சி vs எதிர்க்கட்சி இடையிலேயான போட்டி என்பதுதான் ஃபார்முலா. அமெரிக்காவில் தனி நபர் சார்ந்த அரசியல் முன் வைக்கப்படுகிறது. ரான் பால் முதல் ரொனால்ட் ரீகன் வரை எல்லாருமே குடியரசுக் கட்சி சின்னத்தில் நின்றாலும் தனிப்பட்ட கொள்கை, ஆளுமை போன்றவற்றால் ஜனநாயகக் கட்சியிலும் அபிமானிகளைப் பெற்று வைத்திருக்கிறார்கள். இன்றைய தேதியில் ‘எந்தக் கட்சிக்கு [...]

மிசிசிப்பியில் ஒபாமா வெற்றி

மிசிசிப்பியில் ஒபாமா கிளின்டனை வெற்றிகொண்டுள்ளார். இதன் படி தொர்ந்து ஒபாமா முன்னிலையில் உள்ளார். இங்கு அதிகமாக கறுப்பினத்தவர் இருந்ததால் இந்த வெற்றி முன்பே எதிர்வு கூறப்பட்டதுதான்!

ஹில்லரியின் வசந்தம்!

அமெரிக்காவில் வசந்த காலம் வந்து கொண்டிருக்கிறது… எங்கும், {குறைந்த பட்சம் தெற்க்கே] பழுப்பு நிற புல்லும், இலைகளும் பச்சையாக மாறி விட்டது. முல்லையின் புது மொக்குகள் வந்து விட்டது… எங்கும் வசந்த கால தோற்ற்ங்கள்…   ஹில்லரியின் முகாமிலும் எங்கும் மகிழ்ச்சி. ஆம், டெக்ஸாஸின் வெற்றியும், ஓகையோவின் அபாரமான வெற்றியும், ஹில்லரிக்கு புது வாழ்வையும் வசந்ததையும் தந்து இருக்கிறது.. இந்த பெண்மணியை பார்க்கும் பொது மன உறுதி படைத்த மார்கரெட் தாட்செர் ஞாபகம் வருகிறார். ஸ்ப்ரிங்‘ல் “spring” [...]

கனவு காணுங்கள் – ஒபாமா

என்ன அப்துல் கலாம் மாதிரி ஒபாமா இறங்கிவிட்டார் என்று நினைக்வேண்டாம். அவர் சொன்னது ஹில்லாரியை நம்மை அல்ல. இவர்களின் சண்டை குழையடியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்தால் அடுத்த கட்ட சண்டைக்கு தயாராகலாம். அடுத்த கட்டத்தில் மெக்கெயினை சந்திக்க வேண்டும் அதில் கட்டாயம் தாவு தீருவது நிச்சயம். அனுபவமிக்க மெக்கெயினை கொஞ்சமாவது ஹில்லாரி சமாளிப்பார்.ஒபாமா தேறமாட்டார். அனுபவமில்லை அனுபவமில்லைன்னே ஒரங்கட்டிவிடுவார் மெக்கெயின். ஹில்லாரி முன்னுக்கு பின் முரணாக பேசிவருகிறார் அவரும் தனியாக [...]

கடந்த வாரம் – அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம்

டெமோக்ராட்ஸ் வேட்பாளர் இன்னும் முடிவானபடியில்லை. ‘பெரிய பிரதிநிதிகள்’ எனப்படும் சூப்பர்டெலகேட்ஸ் கையில்தான் ஒபாமாவா/ஹில்லரியா என்பது இருக்கிறது. க்ளின்டனுக்கு (‘மக்களைப் பயமுறுத்துகிறார் ஹிலாரி’: ஒபாமா) சற்றும் சளைக்காத ஒபாமா அணியினர், ‘ஹில்லரி என்பவர் அரக்கி‘ என்று பேட்டி கொடுக்க, பேட்டி கொடுத்தவருக்கு கல்தா கொடுத்தார் ஒபாமா. மேலும் விவரங்களுக்கு: BBC NEWS | Americas | Obama aide quits in ‘monster’ row: “An adviser to Barack Obama has resigned after a Scottish [...]

ஹில்லரிக்கு எதிராக புதிய 527 குழு

அமெரிக்க தேர்தல்களில் வேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டுமானால் 527 குழு துவக்கப்படும். சென்ற ஜனாதிபதி போட்டியில் ஜான் கெர்ரியின் வியட்நாம் போர்க்களப்பணியை செல்லாக்காசாக மாற்ற ‘ஸ்விஃப்ட் பொட்’ இராணுவ வீரர்கள் விளம்பரம் பயன்பட்டது. ஜனநாயகக் கட்சி சார்பாக ‘மூவ் ஆன்’ போன்றவை செயல்படுகின்றன. இந்தக் குழுவிற்கு கொடுக்கப்படும் தேர்தல் நிதியை கணக்கு வழக்கின்றி செலவழிக்கலாம். தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு உட்படாத விளம்பரங்களையும் வதந்தியான அவதூறுகளையும் பரப்பவும் வசதியாகிறது ஹில்லரி க்ளின்டனுக்கு எதிராக அல்குலைக் குறிக்கும் புகைப்பட டி-சர்ட்களை விற்க [...]

முன்று மாநிலங்களில் ஹில்லரி வெற்றி

இன்றைய ஜனநாயக கட்சியின் முன்னோட்ட தேர்தலில் ஹில்லரி மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளார். ஒபாமா ஒரு மாநிலத்தில் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறார். மிக முக்கிய மாநிலங்களான ஓகாயோ, டெக்சாஸ் ஆகிய இரு மாநிலங்களிலும் ஹில்லரி வெற்றி பெற்றுள்ளார். இந்த இரு மாநிலங்களிலும் வெற்றி பெற்றால் தான் இந்த போட்டியில் ஹில்லரி தொடர முடியும் என்ற நிலை இருந்தது. ஹில்லரியின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒபாமா நாப்டா – NAFTA குறித்த சில [...]

ஓஹையொ நிலவரம்: ஹில்லரி கிளிண்டன் வெற்றி

Clinton Wins Democratic Primary in Ohio, networks say.

ஹில்லரி Vs ஒபாமா : யார் சிறந்தவர் ?

அமெரிக்க முன்னோட்ட தேர்தல் (Primary) கிட்டதட்ட இறுதி நிலைக்கு வந்துள்ளது. நாளை 4 முக்கிய மாநிலங்களில் நடக்கும் தேர்தல் குடியரசுக் கட்சியில் மெக்கெயினை குடியரசுக் கட்சியின் வேட்பாளாராக தேர்வு செய்யும். ஹக்கபீ தொடர்ந்து போட்டியில் இருந்தாலும், அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு சிறிதும் இல்லை. எனவே நாளை மெக்கெயின் 1,191 என்ற இலக்கினை பெறக்கூடும் என்றே தெரிகிறது. நாளை அனைவரின் கவனமும் ஜனநாயக் கட்சியின் மீது தான் இருக்கும். ஒபாமாவா ? ஹில்லரியா என்ற கேள்விக்கு விடை [...]

குடியரசு கட்சி அதிகாரப்பூர்வமான வேட்பாளர் ஜான் மெக்கைன்

ஜனநாயக கட்சி:    ரோட் ஐலாண்ட் (Rhode Island):   ஹில்லரி கிளிண்டன் வெற்றி டெக்ஸாஸ் ப்ரைமரி / ஓஹையொ நிலவரம்: ஓபாமா – கிளிண்டன்  இழு பறி

ஓஹையொ நிலவரம் ஜான் மெக்கைன் வெற்றி/ஓபாமா – கிளிண்டன் இழு பறி

ஓஹையொ நிலவரம் ஜான் மெக்கைன் வெற்றி (CNN’s Projection) குடியரசு கட்சி அதிகாரப்பூர்வமான வேட்பாளர்  ஜான் மெக்கைன்??   ஓஹையொ நிலவரம்:  ஜான் மெக்கைன் வெற்றி (CNN’s Projection) ஜனநாயக கட்சி:  ஓபாமா – கிளிண்டன்  இழு பறி

Follow

Get every new post delivered to your Inbox.